தண்ணி கருத்துருச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Thanni Karuthiruchu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… முத்து முத்தா மொட்டு விட்ட வாச முள்ள…
அட தொட்டு புட்டா தோஷமில்ல வாடி புள்ள…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் உறங்கிருச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…

BGM

ஆண் : மெதுவா போடுது தூறல்…
அடி மேலே தெளிக்குது சாரல்…
மெதுவா போடுது தூறல்…
அடி மேலே தெளிக்குது சாரல்…

ஆண் : உடம்போ எனக்கு சூடா இருக்கு…

ஆண் : சில்லுன்னுதான் நெஞ்சம்…
நான் சேர்ந்துக்கவா கொஞ்சம்…
மாதத்துக்கா பஞ்சம்…
நீ மல்லிய பூ மஞ்சம்…

ஆண் : ரகசிய உறவிருக்கு நமக்கு…

ஆண் : யே… கிட்ட கிட்ட வந்து கட்டிக்கடி…
அட்டைய போல் சட்டுனு தான் ஒட்டிக்கடி…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…

BGM

ஆண் : தருசா கெடக்குது பூமி…
அட இதுக்கா படைச்சான் சாமி…
தருசா கெடக்குது பூமி…
அட இதுக்கா படைச்சான் சாமி…

ஆண் : நான் தான் மேகம்…
உனக்கேன் தாகம்…
கொள்ளுதடி தாபம்…
நான் கொஞ்சுவதா பாவம்…
மிஞ்சுதடி மோகம்…
ஹே அஞ்சுதடி தேகம்…

ஆண் : வாலிப வயசிருக்கு நமக்கு…

ஆண் : ஹே… கொத்து கொத்தா காச்சிருக்கும்…
தென்னங்கொல்லே…
கொஞ்சி நின்னா குத்தமில்ல வாடி புள்ள…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…

BGM

ஆண் : லேசா தொடத்தான் மயக்கம்…
ஏன் ரோசாப்பூவே உனக்கும்…
அதுவா அடங்கும் அணைச்சா இளகும்…

ஆண் : கண்டதனால் பித்தம்…
நான் கொண்டதுதான் மிச்சம்…
தந்திடவா முத்தம்…
அடி வந்திடுமா சத்தம்…

ஆண் : துடிக்கிற துடிப்பெதுக்கு அதுக்கு…

ஆண் : யே… காதும் காதும் வச்சது போல் வாடி புள்ள…
கண்ணும் கண்ணும் பேசுறப்போ பாஷை இல்ல…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் உறங்கிருச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…
ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…
ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…


Notes : Thanni Karuthiruchu Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. தண்ணி கருத்துருச்சு பாடல் வரிகள்.