ஆவதும் பெண்ணாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்சங்கர் கணேஷ்திருமதி ஒரு வெகுமதி

Aavadhum Pennale Manithan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…

ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…

—BGM—

ஆண் : தெற்கு மதுரையில் கற்பு சுடர்பட்டு…
வெந்ததும் பெண்ணாலே…
அன்று விளையாட்டு சிறுபிள்ளை…
வீர சிவாஜி ஆனதும் பெண்ணாலே…

ஆண் : நில் என்று சொன்னதும் சுள் என்ற சூரியன்…
நின்றது பெண்ணாலே…
சின்ன தாலிக்கயிற்றுக்கு பாசக்கயிறு…
அன்று தோற்றதும் பெண்ணாலே

ஆண் : இந்தியா தங்க பதக்கம்…
ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே…
இந்தியா தங்க பதக்கம்…
ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே…
அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே…

ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…

—BGM—

ஆண் : மனம் கெட்டு தசரதன் செத்து செத்து…
உயிர்விட்டதும் பெண்ணாலே…

—BGM—

ஆண் : அட பத்து தலையிலும் பித்தம் கொண்டு…
மன்னன் கெட்டதும் பெண்ணாலே…

—BGM—

ஆண் : பாலைவனம் எங்கும் மூளை கெட்டு…
மஜ்னு போனதும் பெண்ணாலே…
அந்த ரோமாபுரி அன்று ரத்தகுளம்…
என்று ஆனதும் பெண்ணாலே…

ஆண் : இந்தக் கால கட்சிகளும்…
இரண்டாச்சு பெண்ணாலே…
இந்தக் கால கட்சிகளும்…
இரண்டாச்சு பெண்ணாலே…

ஆண் : கை நீட்ட மறுத்த பய…
கவிழ்ந்தான்டி முன்னாலே…

ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…

—BGM—

ஆண் : பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று…
கொடி நட்டதும் பெண்ணாலே…
நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு…
பயல்களும் கெட்டதும் பெண்ணாலே…

ஆண் : கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளை…
தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே…
பாண்டி மன்னன் அரண்மனை…
மண்ணோடு மண்ணாகி போனதும் பெண்ணாலே…

ஆண் : நல்லதும் கெட்டதும் இங்கே…
நடப்பதெல்லாம் பெண்ணாலே…
நல்லதும் கெட்டதும் இங்கே…
நடப்பதெல்லாம் பெண்ணாலே…
முழுசா பாட்டில் சொல்ல முடியாது என்னாலே…

ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…

ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…


Notes : Aavadhum Pennale Manithan Song Lyrics in Tamil. This Song from Thirumathi Oru Vegumathi (1987). Song Lyrics penned by Vairamuthu. ஆவதும் பெண்ணாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading