ஒன்னொன்னும் ரெண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாஎங்கிட்ட மோதாதே

Onnodu Rendunnu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒன்னொன்னும் ரெண்டு…
குழு : ஒன்னொன்னும் ரெண்டு…
பெண் : ரெண்டொன்னும் மூனு…
குழு : ரெண்டொன்னும் மூனு…

பெண் : மூனொன்னும்…
குழு : நாலு…
பெண் : நாலொன்னும்…
குழு : அஞ்சு…

பெண் : அஞ்சொன்னும் ஆறொன்னும்…
ஏழொன்னும் எட்டொன்னும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…

பெண் : இந்த ஆரம்பப் பள்ளியிலே…
பாடம் ஆரம்பம் ஆகட்டுமே…
நல்ல கூட்டல் கணக்குகளே…
நெஞ்சு போட்டு பழகட்டுமே…

பெண் : ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…

BGM

ஆண் : சேத்து வச்ச ஆசைகளை…
சின்னச் சின்ன வார்த்தையிலே…
போட்டு வச்சு பாட்டெடுக்க…
காலம் என்ன நேரம் என்ன…

BGM

பெண் : நாத்து வந்து நாணம் விட்டு…
நேசக் கரம் நீட்டுறப்போ…
காத்து வந்து கை குலுக்க…
காலை என்ன மாலை என்ன…

ஆண் : வண்ணத் திருமுகம் எப்பொழுதும்…
எண்ணத்தில் நின்றாட…
உன்னை நினைக்கையில்…
ஏக்கம் வந்து உள்ளத்தை பந்தாட…

ஆண் : தென்றல் சாமரம் வீசையிலே…
அந்தக் காமனின் பாஷையிலே…

பெண் : ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…

BGM

பெண் : காகிதத்தில் எழுதி வச்சா…
செல்லரிச்சு போகுமுன்னு…
கண்ணுக்குள்ள எழுதி வச்சேன்…
காதல் என்னும் காவியத்த…

குழு : தந்தனன்னா தந்தனனானானா தந்தனன்னா…

ஆண் : வாயை விட்டு வெளிய சொன்னா…
ஊரறியக் கூடுமுன்னு…
உள்ளத்தில பூட்டி வச்சேன்…
உன்னுடைய ஞாபகத்த…

பெண் : சின்னஞ்சிறு குயில் மோகம் வர…
இங்கொரு பண் பாட…
தன்னந்தனிமையில் தாகம் வர…
என் இரு கண் வாட…

பெண் : மந்தமாருதம் வீசையிலே…
இந்த மாமரச் சோலையிலே…

ஆண் : ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…

ஆண் : இந்த ஆரம்பப் பள்ளியிலே…
பாடம் ஆரம்பம் ஆகட்டுமே…
நல்ல கூட்டல் கணக்குகளே…
நெஞ்சு போட்டு பழகட்டுமே…

குழு : ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…


Notes : Onnodu Rendunnu Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Vaali. ஒன்னொன்னும் ரெண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading