அக்கரைச் சீமை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாப்ரியா

Akarai Cheemai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

ஆண் : புதுமையிலே மயங்குகிறேன்…
புதுமையிலே மயங்குகிறேன்…
அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

—BGM—

ஆண் : பார்க்க பார்க்க ஆனந்தம்…
பறவைப் போல உல்லாசம்…
வேலை இன்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்…

ஆண் : வெறும் பேச்சு வெட்டி கூட்டம்…
ஏதும் இல்லை இந்த ஊரில்…
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி…
கன்னியமாக ஒற்றுமை உணர்வுடன்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
புதுமையிலே மயங்குகிறேன்…

—BGM—

ஆண் : சிட்டுப் போல பிள்ளைகள்…
தேனில் ஆடும் முல்லைகள்…
துள்ளி துள்ளி மான்கள் போல…
ஆடும் உற்சாகம்…

ஆண் : தினம் தோறும் திருநாளே…
சுகம் கோடி மனம் போல…

ஆண் : சீனர் தமிழர் மலாய மக்கள்…
உறவினர் போல அன்புடன் நட்புடன்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

—BGM—

ஆண் : மஞ்சள் மேனி பாவைகள்…
தங்கம் மின்னும் அங்கங்கள்…
காவியத்தில் வார்த்தை இல்லை…
உன்னைப் பாராட்ட…

ஆண் : நடை பார்த்து மயில் ஆடும்…
மொழி கேட்டு கிளி பேசும்…

ஆண் : கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன்…
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
புதுமையிலே மயங்குகிறேன்…

—BGM—


Notes : Akarai Cheemai Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. அக்கரைச் சீமை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading