கிண்ணத்தில் தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Kinnathil Thean Song Lyrics in Tamil


BGM

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

ஆண் : எண்ணத்தில் போதை வர…
எங்கெங்கோ நீந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM

பெண் : நானும் ஓர் திராட்சை ரசம்…
நாயகன் உந்தன் வசம்…
நானும் ஓர் திராட்சை ரசம்…
நாயகன் உந்தன் வசம்…

பெண் : தென்றல் போல் மன்றம் வரும்…
தேவி நான் பூவின் இனம்…
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்…
கொண்டு போ அந்தப்புரம்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…
உள்ளத்தில் பூங்கவிதை…
வெள்ளம் போல் ஓடி வரும்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…

BGM

ஆண் : ஆனிப்பொன் கட்டில் உண்டு…
கட்டில் மேல் மெத்தை உண்டு…
ஆனிப்பொன் கட்டில் உண்டு…
கட்டில் மேல் மெத்தை உண்டு…

ஆண் : மெத்தை மேல் வித்தை உண்டு…
வித்தைக்கோர் தத்தை உண்டு…
தத்தைக்கோர் முத்தம் உண்டு…
முத்தங்கள் நித்தம் உண்டு…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM

பெண் : யாழிசை தன்னில் வரும்…
ஏழிசை எந்தன் மொழி…
யாழிசை தன்னில் வரும்…
ஏழிசை எந்தன் மொழி…

ஆண் : விண்ணிலே வட்டமிடும்…
வெண்ணிலா உந்தன் விழி…

பெண் : பள்ளியில் காலை வரை…
பேசிடும் காதல் கதை…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
கைகளில் ஏந்துகிறேன்…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM


Notes : Kinnathil Thean Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. கிண்ணத்தில் தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading