நீ வருவாய் என

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கல்யாணி மேனன்எம்.எஸ். விஸ்வநாதன்சுஜாதா

Nee Varuvaiyena Naan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

பெண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை…
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை…
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

—BGM—

பெண் : அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…
அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…

பெண் : இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…
இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…

பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு…
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு…
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

—BGM—

பெண் : ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…
ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…

பெண் : குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…
குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…

பெண் : சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு…
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு…
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

—BGM—


Notes : Nee Varuvaiyena Naan Song Lyrics in Tamil. This Song from Sujatha (1980). Song Lyrics penned by Kannadasan. நீ வருவாய் என பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading