ஐலே ஐலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் பிரகாஷ்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Iyley Iyley Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐலே ஐலே… ஐலே ஐலே…
ஐலே ஐலே… ஐலே ஐலே…

ஆண் : ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே…
ஐலே ஐலே வெண் மேக கூட்டங்கள் கீழே…

ஆண் : ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே…

ஆண் : புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்கிது காய்ச்சல் போலே…
அனலிருக்கு குளிரிருக்கு எல்லாமே உன்னாலே…

ஆண் : ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே…
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டடி மேலே…

ஆண் : இதழ் மொத்தம் ஈரமானது பாரமானது போலே…
ஏதோ ஓர் மோகம் இது ஏகாந்த தாகம்…

ஆண் : ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே…
ஐலே ஐலே வெண் மேக கூட்டங்கள் கீழே…

BGM

ஆண் : அன்பால் எல்லாம் பெண் தின்றதடி ஏவாள் முத்தம்…
பின்னாளில் ஆண்கள் வம்சத்திலே அதனால் யுத்தம்…

ஆண் : எந்நாளும் கேட்கும் நிற்காமல் முத்த சத்தம்…
முத்தங்கள் மோதிக் கொண்டால்தான் உலகம் சுத்தும்…

ஆண் : நம் ஆதியும் அந்தமும் மொத்தமே மொத்தமே…
முத்தம்தான் முத்தம்தான் கண்மணி… ஹோ…

ஆண் : யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே…
முத்தத்தால் மேகம் அது மின்சாரமாகும்…

ஆண் : ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே…
ஐலே ஐலே வெண் மேக கூட்டங்கள் கீழே…

BGM

ஆண் : அன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்…
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்…
ஆகாயம் தாண்ட சொல்லுதடி காதல் முத்தம்
அதனால்தான் எங்கும் கேட்குதடி வெற்றிச் சத்தம்…

ஆண் : என் வாழ்க்கையை மாற்றுதே முத்தமே முத்தமே…
முத்தம்தான் முத்தம்தான் கண்மணி… ஓ…

ஆண் : காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே…
முத்தத்தால் மேகம் அது மின்சாரமாகும்…

ஆண் : ஐலே ஐலே…


Notes : Iyley Iyley Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஐலே ஐலே பாடல் வரிகள்.