ரெட் ரெட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாரெட்

Red Red Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணை கசக்கும் சூரியனோ…
ரெட் ரெட் ரெட் ரெட்…
காணும் மண்ணில் சரி பாதி…
ரெட் ரெட் ரெட் ரெட்…

ஆண் : உடம்பில் ஓடும் செங்குருதி…
ரெட் ரெட் ரெட் ரெட்…
உழைக்கும் மக்கள் உள்ளங்கை…
ரெட் ரெட் ரெட் ரெட்…

ஆண் : நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு…
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு…
வறுமையின் நிறமா சிவப்பு…
அதை மாற்றும் நிறமே சிவப்பு…

—BGM—

ஆண் : பிள்ளை தமிழ் இனமே எழு எழு எழு…
அறிவை ஆண்டவனாய் தொழு தொழு தொழு…
நீளும் ஆகாயம் தொடு தொடு தொடு…
நிலவை பூமியிலே நடு நடு நடு…

—BGM—

ஆண் : கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே…
காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே…

—BGM—

ஆண் : கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்…
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்…

ஆண் : சரியா சரியா…
ஒரு கல்வி மனித உரிமை என்று…
காணலையா முறையா…
ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா…

ஆண் : குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலை ஒன்றும் கேட்காதே…
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே…

ஆண் : கண்ணை கசக்கும் சூரியனோ…
ரெட் ரெட் ரெட் ரெட்…
காணும் மண்ணில் சரி பாதி…
ரெட் ரெட் ரெட் ரெட்…

ஆண் : உடம்பில் ஓடும் செங்குருதி…
ரெட் ரெட் ரெட் ரெட்…
உழைக்கும் மக்கள் உள்ளங்கை…
ரெட் ரெட் ரெட் ரெட்…

—BGM—

ஆண் : என் தமிழ் நாட்டின் மக்கள் தொகையோ…
ஆறு கோடிகள்…
இந்திய நாட்டின் மக்கள் தொகையோ…
நூறு கோடிகள்…

—BGM—

ஆண் : மனிதனை மனிதன் சாப்பிடும் முன்னே…
தடுத்து நிறுத்துங்கள்…
உங்கள் அரிசியில் உங்கள் போ் உண்டு…
உழைத்தே உண்ணுங்கள்…

ஆண் : குழந்தாய் குழந்தாய் இது போட்டி உலகம்…
போட்டி போட்டு முந்தி விடு…
கொழுந்தே இது நாடு அல்ல…
புலிகள் வாழும் காடு…

ஆண் : உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே…
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே…
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே…
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே…

ஆண் : கண்ணை கசக்கும் சூரியனோ…
ரெட் ரெட் ரெட் ரெட்…
காணும் மண்ணில் சரி பாதி…
ரெட் ரெட் ரெட் ரெட்…

ஆண் : உடம்பில் ஓடும் செங்குருதி…
ரெட் ரெட் ரெட் ரெட்…
உழைக்கும் மக்கள் உள்ளங்கை…
ரெட் ரெட் ரெட் ரெட்…

ஆண் : நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு…
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு…
வறுமையின் நிறமா சிவப்பு…
அதை மாற்றும் நிறமே சிவப்பு…

ஆண் : பிள்ளை தமிழ் இனமே எழு எழு எழு…
அறிவை ஆண்டவனாய் தொழு தொழு தொழு…
நீளும் ஆகாயம் தொடு தொடு தொடு…
நிலவை பூமியிலே நடு நடு நடு…


Notes : Red Red Song Lyrics in Tamil. This Song from Red (2002). Song Lyrics penned by Vairamuthu. ரெட் ரெட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading