விழியில் உன் விழியில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & ஸ்வேதா மோகன்ஜி. வி. பிரகாஷ் குமார்கிரீடம்

Vizhiyil Song Lyrics in Tamil


ஆண் : கண்ணோடு கண் சேரும் போது…
வார்த்தைகள் எங்கே போகும்…
கண்ணே உன் முன்னே வந்தால்…
என் நெஞ்சம் குழந்தை ஆகும்…

—BGM—

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…

—BGM—

பெண் : வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்…

பெண் : உன் கையில் என்னை தந்து…
தோள் சாய்கிறேன்… ஓ… தோள் சாய்கிறேன்…

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…

பெண் : ஆ… வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

—BGM—

ஆண் : இதுவரை என் இருதயம்…
இந்த உணர்வினில் தடுமாறவில்லை…

பெண் : முதல்முறை இந்த இளமையின்…
சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை…

ஆண் : குடையோடு நான் போனேன்…
வழியினில் ஏனோ நனைகின்றேன்…

பெண் : கடிகாரம் இருந்தாலும்…
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்…

ஆண் : என் தனிமைக்கு தனிமைகள்…
நீ வந்து கொடுத்தாய்…

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…

பெண் : வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

—BGM—

ஆண் : சிரிப்பிலே உன் சிரிப்பிலே…
சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை…

பெண் : உறவுகள் ஒன்று சேர்கையில்…
என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை…

ஆண் : உன்னோடு நான் பேசும்…
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே…

பெண் : உரையாடல் தொடர்ந்தாலும்…
மௌனங்கள் கூட பிடிக்கிறதே…

ஆண் : என் கனவுக்கு கனவுகள்…
நீ வந்து கொடுத்தாய்…

ஆண் & பெண் : விழியில் உன் விழியில்…

ஆண் : வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே…

பெண் : ம்ம்… வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்…

பெண் : உன் கையில் என்னை தந்து…
தோள் சாய்கிறேன்… ஓ… தோள் சாய்கிறேன்…

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…


Notes : Vizhiyil Song Lyrics in Tamil. This Song from Kireedam (2007). Song Lyrics penned by Na. Muthu Kumar. விழியில் உன் விழியில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading