enakke-enakkaa-song-lyrics

எனக்கே எனக்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & பல்லவிஏ.ஆர்.ரகுமான்ஜீன்ஸ்

Enakke Enakkaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கே எனக்கா…

பெண் : எனக்கே எனக்கா…

ஆண் : நீ எனக்கே எனக்கா…

பெண் : ம்ம் ம்ம்… ஆ ஆ…

ஆண்: மதுமிதா…
மதுமிதா… மதுமிதா…

ஆண் : ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…

BGM

ஆண் : ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…

ஆண் : பிஃப்டி கேஜி தாஜ் மஹால்…
எனக்கே எனக்கா…
பிளைட்டில் வந்த நந்தவனம்…
எனக்கே எனக்கா…

பெண் : ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…

ஆண் : பேக்கெட் சைசில் வெண்ணிலவு…
எனக்கே எனக்கா…
பேக்சில் வந்த பெண் கவிதை…
எனக்கே எனக்கா…

ஆண் : உன்னை எடுத்து உடுத்திக்கலாமா…
உதட்டின் மேலே படுத்துக்கலாமா…
பட்டுப் பூவே குட்டித் தீவே…
விரல் இடை தொட வரம் கொடம்மா…

ஆண் : ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…

ஆண் : பிஃப்டி கேஜி தாஜ் மஹால்…
எனக்கே எனக்கா…
பிளைட்டில் வந்த நந்தவனம்…
எனக்கே எனக்கா…

BGM

ஆண் : அன்பே இருவரும் பொடிநடையாக…
அமெரிக்காவை வலம் வருவோம்…
கடல் மேல் சிவப்புக் கம்பளம் விரித்து…
ஐரோப்பாவில் குடி புகுவோம்…

ஆண் : நம் காதலை கவிபாடவே…
ஷெல்லியின் வைரனின்…
கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்…

பெண் : விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய்…
உன்னோடு நான் என்னானதோ…
கும்மாளமோ கொண்டாட்டமோ…

பெண் : காதல் வெறியில் நீ காற்றைக் கிழிக்கிறாய்…
பிள்ளை மனம் பித்தானதோ…
என்னாகுமோ ஏதாகுமோ…

ஆண் : வாடைக் காற்றுக்கு வயசாச்சு…
வாழும் பூமிக்கு வயசாச்சு…
கோடி யுகம் போனாலென்ன…
காதலுக்கு எப்போதும் வயசாகாது…

பெண் : ஹைர ஹைர ஹைரப்பா…

ஆண் : ஹைர ஹைர ஹைரப்பா…

BGM

பெண் : செர்ரி பூக்களைத் திருடும் காற்று…
காதில் சொன்னது… ஐ லவ் யூ…
சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை…
என்னிடம் சொன்னது… ஐ லவ் யூ…

பெண் : உன் காதலை…
நீ சொன்னதும்…
தென்றலும் பறவையும்…
காதல் தோல்வியில் கலங்கியதே…

ஆண் : ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது…
உன் கூந்தலில் நின்றாடத்தான்…
பூமாலையே பூச்சூடவா…

ஆண் : சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது…
உன் கன்னத்தில் முத்தாடத்தான்…
நானும் உன்னை முத்தாடவா…

பெண் : இதயம் துடிப்பது நின்றாலும்…
இரண்டும் ஓா் நிமிடம் உயிரிருக்கும்…
அன்பே எனை நீ நீங்கினால்…
ஒரு கனம் என்னுயிர் தாங்காது…

ஆண் : ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…

ஆண் : பிஃப்டி கேஜி தாஜ் மஹால்…
எனக்கே எனக்கா…
பிளைட்டில் வந்த நந்தவனம்…
எனக்கே எனக்கா…

பெண் : ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…

பெண் : பேக்கெட் சைசில் வெண்ணிலவு…
உனக்கே உனக்கு…
பேக்சில் வந்த பெண் கவிதை…
உனக்கே உனக்கு…

ஆண் : உன்னை எடுத்து உடுத்திக்கலாமா… ஆ ஆ ஆ…
உதட்டின் மேலே படுத்துக்கலாமா… ஆ ஆ ஆ…

பெண் : முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா…
கூந்தல் கொண்டே துவட்டிக்கலாமா…

ஆண் : பட்டுப் பூவே குட்டித் தீவே…
விரல் இடைதொட வரம் கொடம்மா…

ஆண் & பெண் : ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…

BGM


Notes : Enakke Enakkaa Song Lyrics in Tamil. This Song from Jeans (1998). Song Lyrics penned by Vairamuthu. எனக்கே எனக்கா பாடல் வரிகள்.