தேவதை இளம் தேவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம்இளையராஜாஆயிரம் நிலவே வா

Devathai Ilam Devi Song Lyrics in Tamil


ஆண் : தேவதை இளம் தேவி…
உன்னைச் சுற்றும் ஆவி…
காதலான கண்ணீர் காணவில்லையா…
ஓ… நீயில்லாமல் நானா…

ஆண் : தேவதை இளம் தேவி…
உன்னைச் சுற்றும் ஆவி…
காதலான கண்ணீர் காணவில்லையா…
ஓ… நீயில்லாமல் நானா…

BGM

ஆண் : ஏரிக்கரை பூவெல்லாம்…
எந்தன் பெயர் சொல்லாதோ…
பூ வசந்தமே நீ மறந்ததேன்…

ஆண் : ஆற்று மணல் மேடெங்கும்…
நான் வரைந்த கோலங்கள்…
தேவமுல்லையே காணவில்லையே…

ஆண் : இது காதல் சோதனை…
இரு கண்ணில் வேதனை…
ஒரு வானம்பாடி தேகம் வாடி…
பாடும் சோகம் கோடி…

ஆண் : தேவதை இளம் தேவி…
உன்னைச் சுற்றும் ஆவி…
காதலான கண்ணீர் காணவில்லையா…
ஓ… நீயில்லாமல் நானா…

BGM

ஆண் : எந்தனது கல்லறையில்…
வேறொருவன் தூங்குவதா…
விதி என்பதா சதி என்பதா…

ஆண் : சொந்தமுள்ள காதலியே…
வற்றிவிட்ட காவிரியே…
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா…

ஆண் : இது கண்ணீர் ராத்திரி…
என் கண்ணே ஆதரி…
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி…
நீதான் எந்தன் பாதி…

ஆண் : தேவதை இளம் தேவி…
உன்னைச் சுற்றும் ஆவி…
காதலான கண்ணீர் காணவில்லையா…
ஓ நீயில்லாமல் நானா…
ஓ நீயில்லாமல் நானா…
ஓ நீயில்லாமல் நானா…

BGM


Notes : Devathai Ilam Devi Song Lyrics in Tamil. This Song from Aayiram Nilave Vaa (1983). Song Lyrics penned by Vairamuthu. தேவதை இளம் தேவி பாடல் வரிகள்.