அடி காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & பி. உன்னிகிருஷ்ணன்ஸ்ரீகாந்த் தேவாடபுள்ஸ்

Adi Kaadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா…

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா…

—BGM—

பெண் : விரல்களை நுழைத்து கூந்தலை கலைத்து…
இதழ்களை அடைத்து இதயத்தை நிறுத்து…

ஆண் : தேகத்தை கொடுத்து தீபத்தை நிறுத்து…
வாரியே கொடுப்பேன் வசதியை பொறுத்து…

பெண் : பற பற பறவென…
மோக வெள்ளம் பாய்வது எதற்கு…

ஆண் : அடடடா டடடா ஆணி வேரும்…
இனிக்குது எனக்கு…

பெண் : என் மேனியில் மயில் இறகாக…
உன் மீசை ஆடியதென்ன…

ஆண் : உன் ஆடைகள் நழுவிய போது…
ஆடை நானே விடை சொல்லடி…
பதில் என்னடி…

—BGM—

ஆண் : இது நல்ல உணர்ச்சி இளமைக்கு பயிற்சி…
உடம்புக்குள் உயிரை தேடிடும் முயற்சி…

பெண் : நான் இன்று கண்டேன் இன்னொரு மலர்ச்சி…
நாளைக்கும் வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி…

ஆண் : வாலிபம் என்பது ஆற்று படுகை…
இரைத்ததும் சுரக்கும்…

பெண் : பாற்கடல் எல்லாம் தீர்ந்த பின்னும்…
தாகங்கள் இருக்கும்…

ஆண் : உன் தேவைகள் எவை என்று சொன்னால்…
தீர்த்து வைப்பேன் அது என் கடமை…

பெண் : பெண் தேவைகள் எவை என்று காண…
ஆணின் கடமை கண்டுபிடி கண்டுபிடி…

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா… ஓ…

—BGM—


Notes : Adi Kaadhal Song Lyrics in Tamil. This Song from Doubles (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading