ஓ சென்யோரீட்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Oh Senyoreeta Song Lyrics in Tamil


BGM

ஆண் : சென்யோரீட்டா சென்யோரீட்டா…
சென்யோரீட்டா சென்யோரீட்டா…
சென்யோரீட்டா சென்யோரீட்டா…
சென்யோரீட்டா சென்யோரீட்டா…

BGM

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா… யே யே…

ஆண் : மஞ்சள் நிற மலர் உன்னை…
நினைக்க தானடி…
கொஞ்சி கொஞ்சி பொழியுது…
குளிர்ந்த மழை…

ஆண் : மின்னுகின்ற அழகுடல் குளிக்கதானடி…
பின்னி பின்னி நடக்குது நதியின் அலை…

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி… ஓஹோ…

—BGM—

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி… ஓஹோ…

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா… யே யே…

BGM

ஆண் : அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன்…
அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே…
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது…
அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே…

ஆண் : சிற்பம் கவிதை ஓவியம்…
மூன்றும் சேரும் ஓரிடம்…
கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்…

ஆண் : பெண்ணெல்லாம் பெண் போலே இருக்க…
நீ மட்டும் என் நெஞ்சை மயக்க…
பூமிக்கு வந்தாயே தேவதை போலவே…

BGM

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி… ஓஹோ…

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…

ஆண் : ஹைய ஹைய யே யே யே…
ஹைய ஹைய யே யே யே…
ஹைய ஹைய யே யே யே…
ஹைய ஹைய யே யே யே…

BGM

ஆண் : ஒரு மழை காலத்தில்…
முன்பு குடை தேடினேன்…
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன்…
ஏன் சொல்லடி…

ஆண் : ஒரு வெயில் காலத்தில்…
முன்பு நிழல் தேடினேன்…
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன்…
ஏன் சொல்லடி…

ஆண் : பெண்ணே எந்தன் வானிலை…
உன்னால் மாறி போனதோ…
தரை கீழாக ஏன் ஆனதோ…

ஆண் : தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து…
அறியாத இன்பங்கள் கலந்து…
புரியாத மாயங்கள் செய்தாய் ஏனடி…

BGM

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…

ஆண் : மஞ்சள் நிற மலர் உன்னை…
நினைக்க தானடி…
கொஞ்சி கொஞ்சி பொழியுது…
குளிர்ந்த மழை…

ஆண் : மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி…
பின்னி பின்னி நடக்குது நதியின் அலை…

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி…

ஆண் : சென்யோரீட்டா…


Notes : Oh Senyoreeta Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஓ சென்யோரீட்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading