Category Archives: காலக்கூத்து

காலக்கூத்து – Kaalakkoothu (2018)

அல்லிக்கொடியே 

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜஸ்டின் பிரபாகரன்சத்ய பிரகாஷ்ஜஸ்டின் பிரபாகரன்காலக்கூத்து

Alli Kodiye Song Lyrics in Tamil


ஆண் : அல்லிக்கொடியே அல்லிக்கொடியே…
நீ ஏன் மொளச்ச…
தன்னந்தனியே எந்தன் வழியே…
காதல வெதச்ச…

ஆண் : நீ இல்லா பகலும் இருட்டென இருக்கே…
நீ இல்லா இரவும் நிலவிங்கே சுடுதே…
வெட்ட வெளியா வாடுறேன்…
நீயும் வந்த வழியே ஏங்குறேன்…

BGM

ஆண் : அல்லிக்கொடியே அல்லிக்கொடியே…
நீ ஏன் மொளச்ச…
தன்னந்தனியே எந்தன் வழியே…
காதல வெதச்ச…

BGM

ஆண் : பழைய நினைவோடு உயிர் ஓடும்…
ஒரு ஓடை போலே…
தினமும் அதில் நீந்த மனம் இல்லை…
இருந்தாலும் மூழ்கும்…

ஆண் : மறைத்தாலும் மறைவதில்லை…
நிஜம் போலே வாழும் காதல்…
பிரிந்தாலும் விடுவதில்லை…
நிழல் போலே தொடரும்…

ஆண் : உயிருடனே சாகிறேன்…
வலி இருந்தும் சிரிக்கிறேன்…
ஞாபகங்கள் தொடருதே…
அவள் முகம் மறக்க மறக்கிறேன்…

ஆண் : இதுதானே நிலவரம்…
என் மனசுக்குள்ள கலவரம்…

BGM

ஆண் : அல்லிக்கொடியே அல்லிக்கொடியே…
நானா நானா நா நா…
தன்னந்தனியே எந்தன் வழியே…
நானா நானா நா நா…


Notes : Alli Kodiye Song Lyrics in Tamil. This Song from Kaalakkoothu (2018). Song Lyrics penned by Justin Prabhakaran. அல்லிக்கொடியே பாடல் வரிகள்.


நெற்றி குங்குமம்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கட்டளை ஜெயா & எம்.நாகராஜன்வி.வி. பிரசன்னா & சின்மயிஜஸ்டின் பிரபாகரன்காலக்கூத்து

Netri Kungumam Song Lyrics in Tamil


BGM

குழு : நெற்றி குங்குமம் நீ சூட…
எத்தனை தவம் நான் செய்தேனோ…
ஒற்றை திங்கள் உன்னை சேர…
இங்கொரு பிறவி எடுத்தேனோ…
ஊனில் ஊரும் உயிரெனவே…
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்…

BGM

பெண் : என் காதல் தந்தவன் நீயே…
என் உயிரில் கலந்தவன்தானே…
உன் துணையாய் வருவேன் நானே…

பெண் : உன் மனதை வென்றவள் நானே…
உன் நிழலாய் தொடர்பவள்தானே…
என் வாழ்வின் தேடல் நீயே…

ஆண் : மழைக்கேங்கிய பூமியும் நானே…
முதல் மழையாய் நனைத்தவள் நீயே…
உன் அன்பில் கரைந்தே போனேன்…

ஆண் : உயிர் ஈரமாக மனம் ஓரமாக…
நீ தந்தாயே எனக்குள்ளே மாற்றம்…

ஆண் : என் காதல் தந்தவள் நீயே…
என் உயிரில் கலந்தவள்தானே…
உன் துணையாய் வருவேன் நானே…

குழு : நெற்றி குங்குமம் நீ சூட…
எத்தனை தவம் நான் செய்தேனோ…

ஆண் : ஒற்றை திங்கள் உன்னை சேர…
இங்கொரு பிறவி எடுத்தேனோ…
ஊனில் ஊரும் உயிரெனவே…
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்…

BGM

ஆண் : தொலைவினில் எரியும் மலை விளக்கொளியாய்…
தெரிந்திடும் உன் முகம்…

பெண் : அலையினில் தவழும் இலை என நாளும்…
மிதந்திடும் என் மனம்…

ஆண் : மழையில் நனையும் மழலை போலே…
என் நெஞ்சம் ஆடும் அங்கும் இங்குமே…

பெண் : தலையை கோதும் தலைவன் நீயே…
உன்னாலே பொங்கும் இன்பமே…

ஆண் : என் தனிமையில் உன்னை தந்தாய்…
உறவாகவே நீயும் வந்தாய்…

ஆண் & பெண் : இரு இதயங்கள் சேர்ந்திடும் நேரம்…
சொர்கம் எங்கும் காதல் சங்கீதம்…

BGM


Notes : Netri Kungumam Song Lyrics in Tamil. This Song from Kaalakkoothu (2018). Song Lyrics penned by Kattalai Jaya & M. Nagarajan. நெற்றி குங்குமம் பாடல் வரிகள்.


கண்ண கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கட்டளை ஜெயாஹரிசரண் & லதா கிருஷ்ணாஜஸ்டின் பிரபாகரன்காலக்கூத்து

Kanna Katti Song Lyrics in Tamil


ஆண் : கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே…
கண்ணழகி கண்ணழகிதானே…
கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே…
கை நழுவி கை நழுவிதானே…

BGM

ஆண் : கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே…
கண்ணழகி கண்ணழகிதானே…
கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே…
கை நழுவி கை நழுவிதானே…

ஆண் : வரமா தவமா நீ கையில் கிடைச்ச…
உறவா உசுரா நா உன்ன அணைச்சேன்…
இரவா பகலா உன்ன எண்ணி தவிச்சேன்…
இது கனவா நெசமா நா கிள்ளி சிரிச்சேன்…

ஆண் : தன்னா தானே சுத்தும் பூமி போல வந்தேனே…
ஒன்னா தானே சுத்தும் பூனையாகி போனேனே…
உன்ன சேரத்தானே பூசையெல்லாம் செஞ்சேனே…
என்ன சேந்த பின்னே ஆசையெல்லாம் சொல்வேனே…

ஆண் : கொஞ்ச நேரம் பேசவா…
கொஞ்சி தானே பேசவா…
எம் மனச தூக்கிகிட்டு போ…

ஆண் : கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே…
கண்ணழகி கண்ணழகிதானே…
கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே…
கை நழுவி கை நழுவிதானே…

BGM

பெண் : உன்னாலதானே பெண்ணானேன் நானே…
செவந்தேனே நா உன் முன்னால…

ஆண் : உள்ளாற பாயும் உன் பார்வையால…
தடுமாறி போனேன் தன்னால…

பெண் : வெரலுக்குள் விரலையும் நீயும் கோர்க்கவா…
உசுருக்கு உசுரென ஆகவா…

ஆண் : என் மனசுக்குள் குடித்தனம் நீயும் வாழவா…
தெனம் தெனம் தரிசனம் காணவா…

பெண் : முன்னால நின்னாலே நான் உருகுறேனே…

ஆண் : கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே…
கண்ணழகி கண்ணழகிதானே…
கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே…
கை நழுவி கை நழுவிதானே…

பெண் : வரமா தவமா நீ கையில் கிடைச்ச…
உறவா உசுரா நா உன்ன அணைச்சேன்…
இரவா பகலா உன்ன எண்ணி தவிச்சேன்…
இது கனவா நெசமா நா கிள்ளி சிரிச்சேன்…

BGM

ஆண் : கண் ஜாடை காட்டி…
என்ன நீ வாட்டி…
நெஞ்சோட தீய மூட்டாதே…

பெண் : ஹேஹே ஹேஹே கையால பேசி…
உன் ஆச காட்டி…
வெக்கத்த நீயும் கொட்டாதே…

ஆண் : அடி முதல் முடி வரை நானும் தீண்டவா…
முதல் எது முடிவேது பாக்கவா…

பெண் : என் விழியிலே விடு கதை நானும் போடவா…
இடையில விடையதான் தேடவா…

ஆண் : சொல்லால கொல்லாத நான் மயங்குறேனே…

ஆண் : தந்தா நானே தந்தா நானே தானே நானே…
தந்தா நானே தந்தா நானே நானே…
தந்தா நானே தந்தா நானே தானே நானே…
தந்தா நானே தந்தா நானே நானே…


Notes : Kanna Katti Song Lyrics in Tamil. This Song from Kaalakkoothu (2018). Song Lyrics penned by Kattalai Jaya. கண்ண கட்டி பாடல் வரிகள்.


கண்ணுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கட்டளை ஜெயாசத்ய பிரகாஷ், சரண்யா ஸ்ரீனிவாஸ் & பிரசாந்தினிஜஸ்டின் பிரபாகரன்காலக்கூத்து

Kannukkulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…

ஆண் : என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…

ஆண் : அடியோட என் மனச மடியோட சாச்சவளே…
இங்க என்கிட்ட இருக்கும் உசுரையும்தான்…
அடி இப்போதே உனக்கு தாரேன் வாரியா…

பெண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…

பெண் : என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…

BGM

ஆண் : ஒன்ன நான் சுத்தி பாக்கணுமே…
சொக்கித்தான் நெத்தி வேர்க்கணுமே…

பெண் : எங்க ஒம்புத்தி போகுறதோ…
என்ன நீ கொஞ்சம் ஆள விடு…

ஆண் : ஆசையா நெருங்கயுல…
லேசா நீ ஒதுங்கிறியே…

பெண் : நான் உன்ன சேர்ந்திடும் நேரத்துல…
நம் தூரமும் ஓடுமே தூரத்துல…
துளி வேர் விடுற நெஞ்சு ஈரத்துல…
ஆண் : நீயும் கண்ணீரை சிந்துனா நானும் வாடுவேன்…

ஆண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…

பெண் : ஆஹான்…

ஆண் : என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…

BGM

ஆண் : உச்சி மோந்து நான் பாக்கையில…
நெஞ்சில் ஆசையும் ஊறுதடி…

பெண் : பொத்தி நான் வச்ச ஆசையெல்லாம்…
முத்தம் நீ தந்தா தீருமடா…

ஆண் : பாசமா மொறைக்கிறியே
கோவமா அணைக்கிறியே…

பெண் : என் கண்ணு நீயின்னு ஆன பின்னே…
நான் பாக்குற வேறெந்த ஆணும் பெண்ணே…
எங்க போகையிலும் நீயும் வேணும் முன்னே…
ஆண் : இந்த ஜென்மத்தில் உன்மத்தம் உன்மேல் ஆகுறேன்…

பெண் : கண்ணுக்குள்ள… ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…
ஆண் : கொல்றாளே…

பெண் : என்ன கொல்லும் உன் நினைப்ப உள்ளுக்குள்ள…
ஆண் : எப்புடி எப்புடி சேத்து வச்சு சொத்தெழுதி தருவியா…

ஆண் : அடியோட என் மனச மடியோட சாச்சவளே…
ஆண் & பெண் : இங்க என்கிட்ட இருக்கும் உசுரையும்தான்…
அடி இப்போதே உனக்கு தர வாரேனே…


Notes : Kannukkulla Song Lyrics in Tamil. This Song from Kaalakkoothu (2018). Song Lyrics penned by Kattalai Jaya. கண்ணுக்குள்ள பாடல் வரிகள்.