கண்ணுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கட்டளை ஜெயாசத்ய பிரகாஷ், சரண்யா ஸ்ரீனிவாஸ் & பிரசாந்தினிஜஸ்டின் பிரபாகரன்காலக்கூத்து

Kannukkulla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…

ஆண் : என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…

ஆண் : அடியோட என் மனச மடியோட சாச்சவளே…
இங்க என்கிட்ட இருக்கும் உசுரையும்தான்…
அடி இப்போதே உனக்கு தாரேன் வாரியா…

பெண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…

பெண் : என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…

—BGM—

ஆண் : ஒன்ன நான் சுத்தி பாக்கணுமே…
சொக்கித்தான் நெத்தி வேர்க்கணுமே…

பெண் : எங்க ஒம்புத்தி போகுறதோ…
என்ன நீ கொஞ்சம் ஆள விடு…

ஆண் : ஆசையா நெருங்கயுல…
லேசா நீ ஒதுங்கிறியே…

பெண் : நான் உன்ன சேர்ந்திடும் நேரத்துல…
நம் தூரமும் ஓடுமே தூரத்துல…
துளி வேர் விடுற நெஞ்சு ஈரத்துல…
ஆண் : நீயும் கண்ணீரை சிந்துனா நானும் வாடுவேன்…

ஆண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…

பெண் : ஆஹான்…

ஆண் : என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…

—BGM—

ஆண் : உச்சி மோந்து நான் பாக்கையில…
நெஞ்சில் ஆசையும் ஊறுதடி…

பெண் : பொத்தி நான் வச்ச ஆசையெல்லாம்…
முத்தம் நீ தந்தா தீருமடா…

ஆண் : பாசமா மொறைக்கிறியே
கோவமா அணைக்கிறியே…

பெண் : என் கண்ணு நீயின்னு ஆன பின்னே…
நான் பாக்குற வேறெந்த ஆணும் பெண்ணே…
எங்க போகையிலும் நீயும் வேணும் முன்னே…
ஆண் : இந்த ஜென்மத்தில் உன்மத்தம் உன்மேல் ஆகுறேன்…

பெண் : கண்ணுக்குள்ள… ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…
ஆண் : கொல்றாளே…

பெண் : என்ன கொல்லும் உன் நினைப்ப உள்ளுக்குள்ள…
ஆண் : எப்புடி எப்புடி சேத்து வச்சு சொத்தெழுதி தருவியா…

ஆண் : அடியோட என் மனச மடியோட சாச்சவளே…
ஆண் & பெண் : இங்க என்கிட்ட இருக்கும் உசுரையும்தான்…
அடி இப்போதே உனக்கு தர வாரேனே…


Notes : Kannukkulla Song Lyrics in Tamil. This Song from Kaalakkoothu (2018). Song Lyrics penned by Kattalai Jaya. கண்ணுக்குள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading