Category Archives: பாஸ் (எ) பாஸ்கரன்

பாசு பாசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சத்யன்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Boss Boss Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாஸே…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட வேலை வெட்டி இல்ல…
நாங்க பிஸியான புள்ள…
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம்தான் எல்ல…
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல…

BGM

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

BGM

ஆண் : காலையில் அஞ்சி மணிக்கு…
நாங்க கண்ணு முழிப்போம்… ஆஆஆ…
பாறை மேல ஏறி நின்னு…
காவிரியில் குதிப்போம்… ஆஆஆ…

ஆண் : எட்டு முதல் பத்து வரை…
பஸ் ஸ்டாப்ல சிரிப்போம்…
மத்யானம் வரை…
நாங்க சலூனுல கெடப்போம்…

ஆண் : தள்ளு வண்டி கடையில…
கடன் சொல்லி லஞ்ச்டா…
எங்களோட ஆபீஸ் எல்லாம்…
டீ கடையில் பெஞ்ச்டா…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

BGM

ஆண் : ரெண்டு முதல் மூனு வரை…
ஊரு கதை அளப்போம்… ஆஆஆ…
இங்கிருந்தே பேச்சால…
ஒபாமாவ கிழிப்போம்… ஆஆஆ…

ஆண் : நாலு முதல் அஞ்சு வரை…
காலேஜில் கெடப்போம்…
வாலெல்லாம் சுருட்டிக்கிட்டு…
நல்லவனா நடிப்போம்…

ஆண் : ஆறு மணி மேல நாங்க…
தியேட்டருல கூடுவோம்…
அப்புறமா வந்து நாங்க…
குவாட்டரதான் தேடுவோம்…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட வேலை வெட்டி இல்ல…
நாங்க பிஸியான புள்ள…
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம்தான் எல்ல…
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

ஆண் : பாஸே…


Notes : Boss Boss Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. பாசு பாசு பாடல் வரிகள்.


தத்தித் தாவும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Thathi Thaavum Song Lyrics in Tamil


BGM

ஆண் : தத்தித் தாவும் பேப்பர் நான்…
என்னை போட்ட போல செஞ்சாளே…
கிக் ஏத்தி ஏத்திதான் என்னை கவுத்தாளே…

ஆண் : இங்க் போன பேனா நான்…
வந்து ஒயின ஊத்தி போனாளே…
மப்பு ஏத்தி ஏத்திதான் மெல்ல உடைச்சாளே…

ஆண் : என்ன பாடுறேன் என்ன பேசுறேன்…
எனக்கு புரியவில்லை…
எங்கு போகிறேன் என்ன பண்ணுறேன்…
எதுவும் தெரியவில்லை…

ஆண் : உன் சொந்தம் நான் என் அன்பு நீ…
உன் மம்மி என் ஆன்டி…
உன் சிஸ்டரும் என் பிரதர் போல்…
என்றுமே நான் வாழலாம் வா வா…

BGM

ஆண் : சட்டை பாக்கெட்டில் வைக்கிற…
சிகரெட் பாக்கெட்டா மாறுறா…
ஹார்ட்டு பக்கத்தில் செல்லமா சீண்டுறா…

ஆண் : ஹீரோ ஹோன்டாவ ஓட்டுறேன்…
ஹீரோ போலவே மாத்துறா…
ஜீரோ பக்கத்தில் கோடுதான் போடுறா…

ஆண் : காலேஜ் போயும் தேறல…
நாலேஜ் எதுவும் ஏறல…
மேரேஜ் பண்ணா தேவல…
மானே உடனே வா…

BGM

ஆண் : தத்தித் தாவும் பேப்பர் நான்…
என்னை போட்ட போல செஞ்சாளே…
கிக் ஏத்தி ஏத்திதான் என்னை கவுத்தாளே…

ஆண் : இங்க் போன பேனா நான்…
வந்து ஒயின ஊத்தி போனாளே…
மப்பு ஏத்தி ஏத்திதான் மெல்ல உடைச்சாளே…

BGM

ஆண் : டவுனு பஸ் உள்ள ஏறியே…
டிக்கெட் வாங்கி நீ நீட்டுன…
வெத்து டிக்கெட்டும் லாட்டரி ஆகுமே…

ஆண் : இங்கிலாந்துக்கு ராணியா இங்கீலிஷ் நீ பேசினா…
எபிசிடிய நேசிக்க தோணுமே…

ஆண் : இன்கமிங் கால்க்கு காசு இல்ல…
அவுட்கோயிங் காலுக்கும் காசு இல்ல…
உன் நம்பர் தவிர பேசல…
மானே உடனே வா…

ஆண் : தத்தித் தாவும் பேப்பர் நான்…
என்னை போட்ட போல செஞ்சாளே…
கிக் ஏத்தி ஏத்திதான் என்னை கவுத்தாளே…

ஆண் : ஹம்… இங்க் போன பேனா நான்…
வந்து ஒயின ஊத்தி போனாளே…
மப்பு ஏத்தி ஏத்திதான் மெல்ல உடைச்சாளே…


Notes : Thathi Thaavum Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. தத்தித் தாவும் பாடல் வரிகள்.


மாமா மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Mama Mama Song Lyrics in Tamil


ஆண் : மாமா மாமா உன் பொண்ணக் கொடு மாமா…
மேளம் கொட்டி நான் தாலிக்கட்டலாமா…

BGM

ஆண் : ஹே வாம்மா வாம்மா நீ வெட்கம் விட்டு வாம்மா…
மௌனம் கூட சம்மதந்தாம்மா…

BGM

ஆண் : கும்பகோணத்து வெத்தலைய மடிடா…
பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா…
தஞ்சாவூருக்குத் தவில் ஒன்னு அடிடா…
எட்டு திசையிலும் இப்ப நம்மக்கொடிடா…

ஆண் : ஒரு மேடைப்போட்டு ஒரு மாலைப் போட்டு…
புது மேளம் கொட்டு அடி அண்ணாச்சி…
ஒன்னும் இல்ல நேத்து இப்ப வீசும் காத்து…
நம்ம ரூட்ட பாத்து நம் காட்டில் வெற்றி மழை…

ஆண் : கும்பகோணத்து வெத்தலைய மடிடா…
பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா…

BGM

ஆண் : வெண்ணிலவப் பொட்டு வைக்க வாங்கி தரவா…
மூக்குத்திக்கு நட்சத்திர கல்லுத்தரவா…

பெண் : வெண்ணிலவு நட்சத்திர காலை வரைக்கும்…
உன்னுடைய அன்பைக்கொடு ஆயுள் வரைக்கும்…

ஆண் : வீடு முழுக்க வித வித விதமா…
பட்டுச்சேலை வாங்கித்தரவா…

பெண் : ஹா பட்டுச்சேலை கட்டும்போது வலிக்கும்…
உன்ன உடுப்பா உடுத்திக்கவா…

ஆண் : போதும் போதுமே மனசுக்குள் இனிக்குது…
உன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கணும் நமக்கு…

ஆண் : கும்பகோணத்து வெத்தலைய மடிடா…
குழு : வெத்தலைய மடிடா…

ஆண் : பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா…
குழு : பாக்கு வாங்கிக் கடிடா…

BGM

ஆண் : காதலிக்கும் பொண்ணுத் தரும் பாா்வைப் போதுமே…
கட்ட வண்டிக்கூட ஒரு ஃப்ளைட்டு ஆகுமே…

பெண் : ஹே கைப்பிடிக்க உன் விரல தந்தாப் போதுமே…
கண்ணு ரெண்டும் சந்தோஷமா கண்ணை மூடுமே…

ஆண் : எந்தன் அருகில் நீதான் இருந்தால்…
எந்த நாளும் வெற்றி எனக்கே…

பெண் : மண்ணில் நானும் இருக்கிறவரையில்…
இந்த உசுரு என்றும் உனக்கே…

ஆண் & பெண் : போதும் போதுமே மனசுக்குள் இனிக்குது…
உன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கணும் நமக்கு…

ஆண் : மாமா மாமா உன் பொண்ணக் கொடு மாமா…
மேளம் கொட்டி நான் தாலிக்கட்டலாமா…

ஆண் : ஹே வாம்மா வாம்மா நீ வெட்கம் விட்டு வாம்மா…
மௌனம் கூட சம்மதந்தாம்மா…


Notes : Mama Mama Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. மாமா மாமா பாடல் வரிகள்.


ஐலே ஐலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் பிரகாஷ்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Iyley Iyley Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐலே ஐலே… ஐலே ஐலே…
ஐலே ஐலே… ஐலே ஐலே…

ஆண் : ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே…
ஐலே ஐலே வெண் மேக கூட்டங்கள் கீழே…

ஆண் : ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே…

ஆண் : புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்கிது காய்ச்சல் போலே…
அனலிருக்கு குளிரிருக்கு எல்லாமே உன்னாலே…

ஆண் : ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே…
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டடி மேலே…

ஆண் : இதழ் மொத்தம் ஈரமானது பாரமானது போலே…
ஏதோ ஓர் மோகம் இது ஏகாந்த தாகம்…

ஆண் : ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே…
ஐலே ஐலே வெண் மேக கூட்டங்கள் கீழே…

BGM

ஆண் : அன்பால் எல்லாம் பெண் தின்றதடி ஏவாள் முத்தம்…
பின்னாளில் ஆண்கள் வம்சத்திலே அதனால் யுத்தம்…

ஆண் : எந்நாளும் கேட்கும் நிற்காமல் முத்த சத்தம்…
முத்தங்கள் மோதிக் கொண்டால்தான் உலகம் சுத்தும்…

ஆண் : நம் ஆதியும் அந்தமும் மொத்தமே மொத்தமே…
முத்தம்தான் முத்தம்தான் கண்மணி… ஹோ…

ஆண் : யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே…
முத்தத்தால் மேகம் அது மின்சாரமாகும்…

ஆண் : ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே…
ஐலே ஐலே வெண் மேக கூட்டங்கள் கீழே…

BGM

ஆண் : அன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்…
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்…
ஆகாயம் தாண்ட சொல்லுதடி காதல் முத்தம்
அதனால்தான் எங்கும் கேட்குதடி வெற்றிச் சத்தம்…

ஆண் : என் வாழ்க்கையை மாற்றுதே முத்தமே முத்தமே…
முத்தம்தான் முத்தம்தான் கண்மணி… ஓ…

ஆண் : காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே…
முத்தத்தால் மேகம் அது மின்சாரமாகும்…

ஆண் : ஐலே ஐலே…


Notes : Iyley Iyley Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஐலே ஐலே பாடல் வரிகள்.


yaar-intha-song-lyrics

யார் இந்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Yaar Intha Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

ஆண் : என்னை பார்க்கிறாள்…
ஏதோ கேட்கிறாள்…
எங்கும் இருக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கண்ணால் சிரிக்கிறாள்…
முன்னால் நடக்கிறாள்…
நெஞ்சை கிழிக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்…
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்…
என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

BGM

ஆண் : என் வீட்டு முற்றத்தில்…
இவள் போடும் கோலங்கள்…
எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்…
அணில் ஆடும் கூடத்தில்…
இவள் பாடும் ராகத்தில்…
அதிகாலை சூரியனை பார்பேன்…

ஆண் : கண்ணாடி வளையலை போல…
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்…
கால் கட்டும் கொழுசில் என்னோட மனசை…
சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்…

ஆண் : காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்…
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்…

குழு (ஆண்கள்) : என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

BGM

ஆண் : நான் கொஞ்சம் பார்த்தால்…
எங்கேயோ பார்ப்பாள்…
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்…

ஆண் : எனை பார்த்து சிரிப்பாள்…
நான் பார்த்தால் மறைப்பாள்…
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்…

ஆண் : பெண் நெஞ்சம் புதிர்கதை போல…
எப்போதும் யாரும் அறிந்ததே இல்லை…
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்…
பெண்கள் மதிப்பதேயில்லை…

ஆண் : மனம் நொந்த பிறகே…
முதல் வார்த்தை சொல்வாள்…
மழை நின்ற பிறகே…
குடை தந்து செல்வாள்…

குழு (ஆண்கள்) : என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

ஆண் : என்னை பார்க்கிறாள்…
ஏதோ கேட்கிறாள்…
எங்கும் இருக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கண்ணால் சிரிக்கிறாள்…
முன்னால் நடக்கிறாள்…
நெஞ்சை கிழிக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்…
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்…
என்னை ஏதோ செய்தாள்…

BGM


Notes : Yaar Intha Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. யார் இந்த பாடல் வரிகள்.