யார் இந்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Yaar Intha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

ஆண் : என்னை பார்க்கிறாள்…
ஏதோ கேட்கிறாள்…
எங்கும் இருக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கண்ணால் சிரிக்கிறாள்…
முன்னால் நடக்கிறாள்…
நெஞ்சை கிழிக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்…
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்…
என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

—BGM—

ஆண் : என் வீட்டு முற்றத்தில்…
இவள் போடும் கோலங்கள்…
எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்…
அணில் ஆடும் கூடத்தில்…
இவள் பாடும் ராகத்தில்…
அதிகாலை சூரியனை பார்பேன்…

ஆண் : கண்ணாடி வளையலை போல…
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்…
கால் கட்டும் கொழுசில் என்னோட மனசை…
சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்…

ஆண் : காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்…
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்…

குழு (ஆண்கள்) : என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

—BGM—

ஆண் : நான் கொஞ்சம் பார்த்தால்…
எங்கேயோ பார்ப்பாள்…
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்…

ஆண் : எனை பார்த்து சிரிப்பாள்…
நான் பார்த்தால் மறைப்பாள்…
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்…

ஆண் : பெண் நெஞ்சம் புதிர்கதை போல…
எப்போதும் யாரும் அறிந்ததே இல்லை…
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்…
பெண்கள் மதிப்பதேயில்லை…

ஆண் : மனம் நொந்த பிறகே…
முதல் வார்த்தை சொல்வாள்…
மழை நின்ற பிறகே…
குடை தந்து செல்வாள்…

குழு (ஆண்கள்) : என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

ஆண் : என்னை பார்க்கிறாள்…
ஏதோ கேட்கிறாள்…
எங்கும் இருக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கண்ணால் சிரிக்கிறாள்…
முன்னால் நடக்கிறாள்…
நெஞ்சை கிழிக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்…
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்…
என்னை ஏதோ செய்தாள்…

—BGM—


Notes : Yaar Intha Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. யார் இந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading