நியூயார்க் நகரம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன் & வசுந்தரா தாஸ்ஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

New York Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது…

ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…
நானும் மெழுகுவர்த்தியும்…
தனிமை தனிமையோ…
கொடுமை கொடுமையோ…

—BGM—

ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது…

ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…
நானும் மெழுகுவர்த்தியும்…
தனிமை தனிமையோ…
தனிமை தனிமையோ…
கொடுமை கொடுமையோ…

—BGM—

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ…

ஆண் : பேச்செல்லாம் தாலாட்டுப் போல…
என்னை உறங்க வைக்க நீ இல்லை…
தினமும் ஒரு முத்தம் தந்து…
காலை காபி கொடுக்க நீ இல்லை…

ஆண் : விழியில் விழும் தூசி தன்னை நாவால்…
எடுக்க நீ இங்கு இல்லை…
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க…
நீ இங்கே இல்லை…

ஆண் : நான் இங்கே…
நீயும் அங்கே…
இந்த தனிமையில் நிமிஷங்கள்…
வருஷம் ஆனதேனோ…

ஆண் : வான் இங்கே…
நீலம் அங்கே…
இந்த உவமைக்கு இருவரும்…
விளக்கமானதேனோ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…

—BGM—

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ…

ஆண் : நாட்குறிப்பில் நூறு தடவை…
உந்தன் பெயரை எழுதும் என் பேனா…
எழுதியதும் எறும்பு மொய்க்க…
பெயரும் ஆனதென்ன தேனா…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…

ஆண் : சில்லென்று பூமி இருந்தும்…
இந்த தருணத்தில் குளிர்காலம்…
கோடை ஆனதேனோ…

ஆண் : வா அன்பே நீயும் வந்தால்…
செந்தணல் கூட பனிகட்டி போல மாறுமே…
ஏ ஏ ஏ ஏ ஏ யே யே…

பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது…

ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…
நானும் மெழுகுவர்த்தியும்…
தனிமை தனிமையோ…
தனிமை தனிமையோ…
கொடுமை கொடுமையோ…

—BGM—


Notes : New York Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. நியூயார்க் நகரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading