Category Archives: சந்தோஷ் சுப்ரமணியம்

America Yendralum Song Lyrics in Tamil

அமெரிக்கா என்றாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபுஷ்பவனம் குப்புசாமி, மாணிக்க விநாயகம், பிரியா, நவீன் & பிரேம்ஜி அமரன்தேவி ஸ்ரீ பிரசாத்சந்தோஷ் சுப்ரமணியம்

America Yendralum Song Lyrics in Tamil


BGM

ஆண் : யே… அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா… ஹேய்…

BGM

ஆண் : அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா…

ஆண் : ஒன் டே கிரிக்கெட் போயாச்சு…
ட்வென்டி ட்வென்டி வந்தாச்சு…
ஆனா கூட அப்பா கூட்டம் மாறவில்லடா…

ஆண் : முருகா முருகா ஓ மை முருகா…
உன்னை போல ரெண்டு பொண்ணா…
நாங்க கேட்குறோம்…

ஆண் : முருகா முருகா ஓ மை முருகா…
சிங்கிள் பொண்ண ஓகே பண்ண…
செத்து பொழைக்கிறோம்…

குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

ஆண் : ஹோய்… அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா… டோய்…

BGM

ஆண் : லவ் ஹஸ் நோ காஸ்ட் ஆர் ரிலிஜியன்…
டூ ஹார்ட்ஸ் ஷேர் எ லாட் ஆப் பேஷன்…
பேரன்ட்ஸ் வில் நெவெர் எவர் லெட் தன் ஹப்பன்…
பட் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

ஆண் : ஹேய்… மீசை ஆரம்பிக்கும் போது…
பாசம் யாவும் புரியாது…
காதல் என்பது ஒன்னும் இல்லடா…
வயசு செய்யும் மோசம்…

ஆண் : அட வேடந்தாங்களுக்கு போயும்…
காகம் பார்த்து என்ன லாபம்…
காதல் ஒன்றுதான் இளமை காலத்தில்…
எங்களோட சுவாசம்…

ஆண் : நாங்க வச்ச பாசத்த கொச்சை செய்வது…
பச்ச துரோகம்தானே…
உங்க உச்சி தொட்டு அட பாதம் வரையில்…
எங்க தியாகம்தானே…

ஆண் : தந்தை பிள்ளையின் உறவு…
ஏதோ சந்தை தரகு இல்லை…
உங்க பாசத்த என்றும் எங்கள்…
நெஞ்சம் மறந்ததில்ல…

குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

ஆண் : ஹேய்… அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா… டா டா டா டா டா…

பெண் : ஹேய்… ஸ்டாப் தி மியூசிக்…
ஒன் டூ த்ரீ போர்…

பெண் : ஹ்ம்ம்… ஆஆ… எழில் முக ராதா இமைகளின் ஓரம்…
குழல் ஊதும் கண்ணனை வரவேற்கிறாள்…
கர மலர் ஏந்த கார்மேக வண்ணன்…
கரையிலா கடல் போல அலை பாய்கிறேன்…

பெண் : ராதையின் தேடல் என்ன…
கண்ணன் மறந்ததில்லை…
தேவகி பாலனின்றி…
ராதை கண்ணில் தூக்கமில்லை…
ராதை கண்ணில் தூக்கமில்லை…

BGM

ஆண் : ஹேய்… காசு தேவைப்படும் போது…
கால சுத்தி வருவீங்க…
காதல் வந்ததும் பேச்ச மீறியே…
கால வாருவீங்க…

ஆண் : அடடாடா பள்ளி காலமது வேறு…
பருவ காலமிது வேறு…
எங்க பேச்சையே மனசு கேக்கல…
என்ன செய்வோம் போங்க…

ஆண் : கட்டுப்பாடுதான் இல்லா படகு…
கரையை சேர்ந்திடாது…

ஆண் : கட்டி போட்டுதான் வச்சா…
படகு கடல பார்த்திடாது…

ஆண் : காதல் செய்கிற பிள்ளை கண்ணுக்கு…
அப்பா தெரியாது…

ஆண் : மகனை நேசிக்கும் அப்பாவிக்கிது…
தப்பா தெரியாது…

குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM


Notes : America Yendralum Song Lyrics in Tamil. This Song from Santosh Subramaniam (2008). Song Lyrics penned by Viveka. அமெரிக்கா என்றாலும் பாடல் வரிகள்.


காதலுக்கு கண்கள் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கவிவர்மன்தேவி ஸ்ரீ பிரசாத்தேவி ஸ்ரீ பிரசாத்சந்தோஷ் சுப்ரமணியம்

Kadhalukku Kanngal Illai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே…
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே…
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : லூசு ரெண்டு சேர்ந்தாலே…
சும்மா பேசிக் கொண்டாலே…
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே…

ஆண் : பீச்சில் வாங்கும் சுண்டலே…
தீர்ந்து போச்சு என்றாலே…
காதல் கூட தீரும் என்பேன் நானே…

ஆண் : ஓஓஓ… என்ன ஆனதோ…
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ…
ஓஓஓ… இந்த நாள் முதல்…
என் பாடல் அவள் ராகத்தில்…

ஆண் : ஹே… காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே…
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே…
ஆனா இப்போ ஹ்ம்ம்…

ஆண் : காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே…
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

BGM

ஆண் : ஓஹோஓ… அப்பன் காசெல்லாம் செல்போன் பில்லுக்கே…
காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : தன்னந் தனிமையிலே தானே பேசையிலே…
நைட் அடிச்ச மப்பு இன்னும் இரங்கல என்றேனே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : காதல் என்னை என்ன செய்யும்…
ஓவர் திமிரில் அலைந்தேன் நானே…
நானும் இன்று க்யூவில் நின்று…
இதயத்தை பறி கொடுத்தேனே…

ஆண் : ஓஓஓ… என்ன ஆனதோ…
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ…
ஓஓஓ… இந்த நாள் முதல்…
என் வானம் அவள் கண்களில்…

ஆண் : ஹே… காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே…
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

BGM

ஆண் : ஓஹோஓ… கண்ணில் விழுவாளாம்…
நெஞ்சில் நுழைவாளாம்…
ஏன்டா இந்த பீலா என்று கூலாய் கேட்டேனே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா…
பட்டி மன்றம் வைத்து பார்க்க ஆசைப்பட்டேனே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : கோடி பொய்கள் கட்டிய மூட்டை…
காதல் என்று சொன்னேன் நானே…
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக…
மெய்யினை உணர்ந்து கொண்டேனே…

ஆண் : ஓஓஓ… என்ன ஆனதோ…
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ…
ஓஓஓ… இந்த நாள் முதல்…
என் வாழ்க்கை அவள் வார்த்தையில்…

ஆண் : ஹே… காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே…
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே…
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

BGM


Notes : Kadhalukku Kanngal Illai Song Lyrics in Tamil. This Song from Santosh Subramaniam (2008). Song Lyrics penned by Kavivarman. காதலுக்கு கண்கள் இல்லை பாடல் வரிகள்.


எப்படி இருந்த என் மனசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதிப்பு & கோபிகா பூர்ணிமாதேவி ஸ்ரீ பிரசாத்சந்தோஷ் சுப்ரமணியம்

Yeppadi Irundha Yen Manasu Song Lyrics in Tamil


BGM

ஆண் : எப்படி இருந்த என் மனசு…
அடி இப்படி மாறிப் போகிறது…
உன் கண்களில் என்ன…
காந்தம் இருக்கிறதா…

பெண் : எப்படி இருந்த என் வயசு…
அட இப்படி மாறிப் போகிறது…
உன் சொற்களில் என்ன…
சக்கரை இருக்கிறதா…

ஆண் : உனது சிாிப்பின் ஒலியில்…
எனது இளமை தவிக்கிறதே…

பெண் : அலையும் உனது விழியை பாா்த்தால்…
பயமாய் இருக்கிறதே…

ஆண் : அாிது அாிது இளமை அாிது…
விலகி போனால் நியாயமா…

ஆண் : மழை வருதே மழை வருதே…
விழி மேகம் மோதும் பொழுது…
சுகம் தருதே சுகம் தருதே…
உன் சுவாசம் தீண்டும் பொழுது…
எதை எதையோ நினைக்கிறதே மனது…

BGM

ஆண் : எப்படி இருந்த என் மனசு…
அடி இப்படி மாறிப் போகிறது…
உன் கண்களில் என்ன…
காந்தம் இருக்கிறதா…

பெண் : எப்படி இருந்த என் வயசு…
அட இப்படி மாறிப் போகிறது…
உன் சொற்களில் என்ன…
சக்கரை இருக்கிறதா…

BGM

ஆண் : ஏய்… சொட்டு சொட்டுத் தேனா…
நீ நெஞ்சில் விட்டுப் போனா…
ஏங்குது என் மனம்…
துள்ளி துள்ளி தானா…

பெண் : திட்டு திட்டு வேணாம்…
ஏய்… தில்லு முல்லு வேணாம்…
தோத்ததும் பால்குடம்…
கெட்டு போகும் வீணா…

ஆண் : அழகு என்பதே பருகத் தானடி…
எனது ஆசைகள் தப்பா…

பெண் : நெருங்கும் காலம்தான்…
நெருங்கும் நாள் வரை…
நினைத்துக் கொள் எனை நட்பா…

ஆண் : இரவோ பகலோ…
கனவோ நிஜமோ…
எதிலும் நீயே தானடி…

ஆண் : மழை வருதே மழை வருதே…
விழி மேகம் மோதும் பொழுது…
சுகம் தருதே சுகம் தருதே…
உன் சுவாசம் தீண்டும் பொழுது…
எதை எதையோ நினைக்கிறதே மனது…

BGM

ஆண் : ஏய்… கிட்ட வந்து நின்னா…
அதை குற்றம் என்று சொன்னா…
என்னடி நீ ஒரு…
தீயில் செய்த பெண்ணா…

பெண் : கொக்கு வந்து போனா…
அது நெஞ்சம் சொல்லும் தானா…
சிக்கிட நான் ஒரு…
புத்தி கெட்ட மீனா…

ஆண் : முறுக்குப் போலவே…
இருக்கும் காதுகள்…
கடிக்கத் தூண்டுதே அன்பே…

பெண் : துடுப்புப் போலவே…
இருக்கும் கைகளால்…
அடிக்கத் தோன்றுதே அன்பே…

ஆண் : நடையோ உடையோ…
ஜடையோ இடையோ…
எதுவோ என்னைத் தாக்குதே…

ஆண் : மழை வருதே மழை வருதே…
விழி மேகம் மோதும் பொழுது…
சுகம் தருதே சுகம் தருதே…
உன் சுவாசம் தீண்டும் பொழுது…
எதை எதையோ நினைக்கிறதே மனது…

BGM


Notes :  Yeppadi Irundha Yen Manasu Song Lyrics in Tamil. This Song from Santosh Subramaniam (2008). Song Lyrics penned by Viveka. எப்படி இருந்த என் மனசு பாடல் வரிகள்.


அடடா அடடா அடடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சித்தார்த்தேவி ஸ்ரீ பிரசாத்சந்தோஷ் சுப்ரமணியம்

Adada Adada Adada Song Lyrics in Tamil


ஆண் : ப னி னி ச சா…

பெண் : னி ச சா னி ச…
சா னி ச சா க ரி க ம…
ப ம க ரி ச னி ச னி பா…

ஆண் : க ம ப னி நீ…

பெண் : ப னி நீ ப னி நீ…
ப னி நீ ப னி நீ ம ம ம…
ம ரி ரி ரி ரி னி னி னி னி டா…

ஆண் : க ரி க ம கா…
பெண் : ப ம க ச…
ஆண் : ரி ச ரி க ரீ…
பெண் : ட னி ச னி…

ஆண் : ச னி சா…
பெண் : ச னி ச க க…
ரி க ம ம க ம ப ப ம…
க ரி சா…

ஆண் : ரி சா கா ரி ச…
ரி ச ரீ னி பா ரி சா கா…
ரி ச பா ம பா ம கா ரீ ச…

ஆண் : அடடா அடடா அடடா…
எனை ஏதோ செய்கிறாய்…
அடடா அடடா அடடா…
என் நெஞ்சை கொய்கிறாய்…

ஆண் : கனவில் நீயும் வந்தால்…
என் உறக்கம் கேட்கிறாய்…
எதிரில் நீயும் வந்தால்…
என் உயிரை கேட்கிறாய்…

ஆண் : அடி உன் முகம் கண்டால்…
என் இமை ரெண்டும்…
கைகள் தட்டுதே…

ஆண் : அடடா அடடா அடடா..
எனை ஏதோ செய்கிறாய்…
அடடா அடடா அடடா…
என் நெஞ்சை கொய்கிறாய்…

BGM

ஆண் : நீயும் நானும்…
ஒன்றாய் போகும் போது…
நீளும் பாதை இன்னும்…
வேண்டும் என்று நெஞ்சம் ஏங்குதடி…

ஆண் : வானவில்லாய் நீயும் வந்த போது…
எந்தன் கருப்பு வெள்ளை…
கண்கள் ரெண்டும் கலராய் மாறுதடி…

ஆண் : என் வீட்டு பூவெல்லாம்…
உன் வீட்டு திசை பார்க்கும்…
என் வாசல் உன் பாதம்…
எங்கென கேட்குதடி…

ஆண் : அடடா அடடா அடடா…
எனை ஏதோ செய்கிறாய்…
அடடா அடடா அடடா…
என் நெஞ்சை கொய்கிறாய்…

ஆண் : ப னி னி ச சா…
பெண் : னி ச சா…
ஆண் : ப னி னி ச சா…
பெண் : னி ச சா…

ஆண் : ப னி னி ச சா…
க ரி ச னி ப க ரி க ம…
ப ம க ரி ச னி ச னி பா…

ஆண் : க ம ப னி நீ…
பெண் : ப னி நீ…
ஆண் : க ம ப னி நீ…
பெண் : ப னி நீ…

ஆண் : க ம ப னி நீ…
ச னி தா ப ம…
க ரி க ம கா…
ரி ச ரி க ரீ ச னி ச…

BGM

ஆண் : ஏ… வானம் மீது…
போகும் மேகம் எல்லாம்…
உனது உருவம் போல…
வடிவம் காட்ட கண்கள் மயங்குதடி…

ஆண் : பூவில் ஆடும்…
பட்டாம்பூச்சி கூட…
நீயும் நடந்து கொண்டே…
பறந்து செல்லும் அழகை ரசிக்குதடி…

ஆண் : உன் செய்கை ஒவ்வொன்றும்…
என் காதல் அர்த்தங்கள்…
நாள் தோறும் நான் சேர்க்கும்…
ஞாபக சின்னங்கள்…

ஆண் : அடடா அடடா அடடா…
எனை ஏதோ செய்கிறாய்…
அடடா அடடா அடடா…
என் நெஞ்சை கொய்கிறாய்…

ஆண் : ப னி னி ச சா…
பெண் : னி ச சா…
ஆண் : ப னி னி ச சா…
பெண் : னி ச சா…

ஆண் : ப னி னி ச சா க…
ரி ச னி ப க ரி க ம ப ம…
க ரி ச னி ச னி பா…


Notes :  Adada Adada Adada Song Lyrics in Tamil. This Song from Santosh Subramaniam (2008). Song Lyrics penned by Na. Muthukumar. அடடா அடடா அடடா பாடல் வரிகள்.


உயிரே உயிரே பிரியாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாகர்தேவி ஸ்ரீ பிரசாத்சந்தோஷ் சுப்ரமணியம்

Uyire Uyire Piriyadhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

ஆண் : கனவே கனவே கலையாதே…
கண்ணீா் துளியில் கரையாதே…
நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…

ஆண் : பெண்ணே நீ வரும் முன்னே…
ஒரு பொம்மை போலே இருந்தேன்…
புன்னகையாலே முகவரி தந்தாயே… ஓ ஓ ஓ…

ஆண் : ஆயுள் முழுதும் அன்பே…
உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்…
அரை நொடி மின்னல் போலே சென்றாயே…

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

BGM

ஆண் : புல் மேல் வாழும்…
பனி தான் காய்ந்தாலும்…
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்…
ஆனால் பொற்காலம்…

ஆண் : உன் அருகாமை…
அதை நான் இழந்தாலும்…
சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்…
நினைவே சந்தோஷம்…

ஆண் : கடல் மூழ்கிய தீவுகளை…
கண் பார்வைகள் அறிவதில்லை…
அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்…

BGM

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

BGM

ஆண் : உன் கை கோர்த்து…
அடி நான் சென்ற இடம்…
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்…
என்றே கேட்கிறதே…

ஆண் : உன் தோள் சாய்ந்து…
அடி நான் நின்ற மரம்…
நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு…
நெருப்பாய் எரிக்கிறதே…

ஆண் : நிழல் நம்பிடும் என் தனிமை…
உடல் நம்பிடும் உன் பிரிவை…
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே…

BGM

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

ஆண் : கனவே கனவே கலையாதே…
கண்ணீா் துளியில் கரையாதே…
நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…

BGM


Notes : Uyire Uyire Piriyadhey Song Lyrics in Tamil. This Song from Santhosh Subramaniam (2008). Song Lyrics penned by Na. Muthukumar. உயிரே உயிரே பிரியாதே பாடல் வரிகள்.