உயிரே உயிரே பிரியாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாகர்தேவி ஸ்ரீ பிரசாத்சந்தோஷ் சுப்ரமணியம்

Uyire Uyire Piriyadhey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

ஆண் : கனவே கனவே கலையாதே…
கண்ணீா் துளியில் கரையாதே…
நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…

ஆண் : பெண்ணே நீ வரும் முன்னே…
ஒரு பொம்மை போலே இருந்தேன்…
புன்னகையாலே முகவரி தந்தாயே… ஓ ஓ ஓ…

ஆண் : ஆயுள் முழுதும் அன்பே…
உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்…
அரை நொடி மின்னல் போலே சென்றாயே…

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

—BGM—

ஆண் : புல் மேல் வாழும்…
பனி தான் காய்ந்தாலும்…
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்…
ஆனால் பொற்காலம்…

ஆண் : உன் அருகாமை…
அதை நான் இழந்தாலும்…
சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்…
நினைவே சந்தோஷம்…

ஆண் : கடல் மூழ்கிய தீவுகளை…
கண் பார்வைகள் அறிவதில்லை…
அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்…

—BGM—

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

—BGM—

ஆண் : உன் கை கோர்த்து…
அடி நான் சென்ற இடம்…
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்…
என்றே கேட்கிறதே…

ஆண் : உன் தோள் சாய்ந்து…
அடி நான் நின்ற மரம்…
நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு…
நெருப்பாய் எரிக்கிறதே…

ஆண் : நிழல் நம்பிடும் என் தனிமை…
உடல் நம்பிடும் உன் பிரிவை…
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே…

—BGM—

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

ஆண் : கனவே கனவே கலையாதே…
கண்ணீா் துளியில் கரையாதே…
நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…

—BGM—


Notes : Uyire Uyire Piriyadhey Song Lyrics in Tamil. This Song from Santhosh Subramaniam (2008). Song Lyrics penned by Na. Muthukumar. உயிரே உயிரே பிரியாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading