பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி பாரதியார்வி.என்.சுந்தரம் & எம்.எல்.வசந்தகுமாரிசி.ஆர்.சுப்புராமன்மணமகள்

Chinnanchiru Kiliye Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…
செல்வ களஞ்சியமே…
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…
செல்வ களஞ்சியமே…

பெண் : என்னை கலி தீர்த்தே உலகில்…
என்னை கலி தீர்த்தே உலகில்…
ஏற்றம் புரிய வந்தாய்… ஆ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…
சின்னஞ்சிறு கிளியே…

பெண் : பிள்ளை கனி அமுதே கண்ணம்மா…
பேசும் பொற்சித்திரமே… ஏ…
பிள்ளை கனி அமுதே கண்ணம்மா…
பேசும் பொற்சித்திரமே… ஏ…

பெண் : அள்ளி அணைத்திடவே என் முன்னே…
அள்ளி அணைத்திடவே என் முன்னே…
ஆடி வரும் தேனே… ஏ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…
சின்னஞ்சிறு கிளியே…

பெண் : ஓடி வருகையிலே கண்ணம்மா…
உள்ளம் குளிருதடி…
ஓடி வருகையிலே கண்ணம்மா…
உள்ளம் குளிருதடி…

பெண் : ஆடி திரிதல் கண்டால் உன்னை போய்…
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய்…
ஆவி தழுவுதடி…

பெண் : உச்சி தன்னை முகர்ந்தால்…
கர்வம் ஓங்கி வளருதடி…
உச்சி தன்னை முகர்ந்தால்…
கர்வம் ஓங்கி வளருதடி…

பெண் : மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்…
மேனி சிலிர்க்குதடி…
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்…
மேனி சிலிர்க்குதடி…

ஆண் : கன்னத்தில் முத்தமிட்டாள்…
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி…
கன்னத்தில் முத்தமிட்டாள்…
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி…
கன்னத்தில் முத்தமிட்டாள்…
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி…

ஆண் : உன்னை தழுவிடிலோ கண்ணம்மா…
உன்மத்தம் ஆகுதடி… ஏ…
உன்னை தழுவிடலோ கண்ணம்மா…
உன்மத்தம் ஆகுதடி… ஏ…

ஆண் : உன் கண்ணில் நீர் வடிந்தால்…
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி…
உன் கண்ணில் நீர் வடிந்தால்…
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி…

ஆண் : என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா…
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா…
என்னுயிர் நின்னதன்றோ…


Notes : Chinnanchiru Kiliye Song Lyrics in Tamil. This Song from Manamagal (1951). Song Lyrics penned by Mahakavi Bharathiyar. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.