Category Archives: சிட்டிசன்

மேற்கே விதைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்தேவாசிட்டிசன்

Merkey Vidhaitha Song Lyrics in Tamil


BGM

ஆண் : மேற்கே விதைத்த சூரியனே…
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்…

BGM

ஆண் : மேற்கே விதைத்த சூரியனே…
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்…
தோன்றிட ஏதும் தடை இருந்தால்…
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்துவிட்டோம்…

ஆண் : இடர் நீங்கவே வந்த இருள் போகவே…
கையில் ஒளிசாட்டை எடுத்தால் என்ன…
விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா…
சில விண்மீன்கள் விழுந்தால் என்ன…

ஆண் : மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை…
கை வாளாய் எடுத்து…
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து…

BGM

ஆண் : கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு…
கல்லறைகள் அல்ல…
சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல…

ஆண் : ரெக்கை கட்டி ரெக்கை கட்டி வாடா…
வானம் உண்டு வெல்ல…
வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல…

BGM

ஆண் : இதயம் துணிந்து எழுந்த பின்னாலே…
இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே…

ஆண் : நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும்…
விரல்களில் எரிமலை ஒன்று வெடிக்கட்டும்…
முட்டுங்கள் திறக்கும் என்னும் புதுமைகள் கேட்கட்டும்…

BGM

ஆண் : சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம்…
தீ வளர்த்து பார்ப்போம்…
விடியல் வரும் முன்னே இருள் எதிர்த்து கொள்வோம்…

ஆண் : குட்டுப்பட்ட குட்டுப்பட்ட கூட்டம்…
குனிந்த கதை போதும்…
பொறுமை நீளும் போது புழுவும் புலி ஆகும்…

BGM

ஆண் : தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா…
சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா…

ஆண் : புஜத்திலே வலுத்தவர் ஒன்றாய் திரட்டுவோம்…
நிஜத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்…
வறுமைக்கு பிறந்த கூட்டம் வயதை ஆளட்டும்…

ஆண் : மேற்கே விதைத்த சூரியனே…
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்…
தோன்றிட ஏதும் தடை இருந்தால்…
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்…

ஆண் : இடர் நீங்கவே வந்த இருள் போகவே…
கையில் ஒளிசாட்டை எடுத்தால் என்ன…
விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா…
சில விண்மீன்கள் விழுந்தால் என்ன…

ஆண் : மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை…
கை வாளாய் எடுத்து…
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து…

BGM

குழு : அச்சம் இல்லை அச்சம் இல்லையே…


Notes : Merkey Vidhaitha Song Lyrics in Tamil. This Song from Citizen (2001). Song Lyrics penned by Vairamuthu. மேற்கே விதைத்த பாடல் வரிகள்.


i-like-you-song-lyrics-in-tamil-citizen

ஹே ஐ லைக் யூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவசுந்தரா தாஸ்தேவாசிட்டிசன்

I Like You Song Lyrics in Tamil


BGM

குழு : சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…
சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…

பெண் : ஹே ஐ லைக் யூ…
ஹே ஐ லைக்…
யூ உன் ரேசர் பாயும் கண்ணை…
ரோம் சீசர் போன்று தோலை…
நெஞ்சை உரசும் நெஞ்சை…

பெண் : ஹே ஐ லைக் யூ…
உன் ரேசர் பாயும் கண்ணை…
ரோம் சீசர் போன்று தோலை…
நெஞ்சை உரசும் நெஞ்சை…

பெண் : திடும் திடும் என என் நெஞ்சில்…
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்…
இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்…

பெண் : அதோ அதோ அந்த புன்னகையால்…
சதா சதா என்னை சாகடித்தாய்…
ஐயோ ஐயோ என் பெண்மை சோதிக்கிறாய்…

பெண் : ஹே ஐ லைக் யூ…
உன் ரேசர் பாயும் கண்ணை…
ரோம் சீசர் போன்று தோலை…
நெஞ்சை உரசும் நெஞ்சை…

BGM

குழு : சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…

பெண் : பார்த்தவுடன் உயிர் உடைத்து விட்டாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…
பார்வைகளால் என்னை துகில் உரித்தாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : புத்தம் புத்தம் புது உதடுகளை…
குத்தும் குத்தும் உன் மீசை என்னை…
ஐயோ ஐயோ ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : ஆண் புயலே உன்னை துரத்தி வந்தேன்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…
அலட்சியமாய் என்னை கழட்டிவிட்டாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : எனக்கான உயரம் நீ…
லைக் யூ ஐ லைக் யூ…
எனக்கான பேரும் தீனி நீ…
லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : ஏண்டா யோசிக்கற…
உனக்கான பெண்ணே நான்தானடா…
உயிரோட என்னை நீ தின்னடா…

பெண் : திடும் திடும் என என் நெஞ்சில்…
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்…
இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்…

குழு : சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…

BGM

பெண் : கண்களிலே ஒரு சினம் வளர்த்தாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…
என்னை கனவுகளில் வந்து அனுபவித்தாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : அதோ அதோ அந்த நடையழகை…
உடல் தொடும் உன் உடை அழகை…
ஐயோ ஐயோ ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : திரும்பி வந்தால்…
மெல்ல விலகி செல்வாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…
திரும்பி கொண்டு…
மெல்ல சிரித்து கொள்வாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : மனு போட்டால் வர மாட்டாய்…
லைக் யூ ஐ லைக் யூ…
பசிக்காமல் தொட மாட்டாய்…
லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : பெங்களூர் தக்காளி நான்…
ருசி பார்க்க நண்பா வா இல்லையா…
தக்காளி மறு நாள் தாங்காதய்யா…

பெண் : திடும் திடும் என என் நெஞ்சில்…
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்…
இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்…

பெண் : ஹே ஐ லைக் யூ…
ஹே ஐ லைக் யூ…
உன் ரேசர் பாயும் கண்ணை…
ரோம் சீசர் போன்று தோலை…
நெஞ்சை உரசும் நெஞ்சை…

பெண் : திடும் திடும் என என் நெஞ்சில்…
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்…
இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்…

பெண் : அதோ அதோ அந்த புன்னகையால்…
சதா சதா என்னை சாகடித்தாய்…
ஐயோ ஐயோ என் பெண்மை சோதிக்கிறாய்…

குழு : சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…
சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…


Notes : I Like You Song Lyrics in Tamil. This Song from Citizen (2001). Song Lyrics penned by Vairamuthu. ஹே ஐ லைக் யூ பாடல் வரிகள்.


பூக்காரா பூக்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & வசுந்தரா தாஸ்தேவாசிட்டிசன்

Pookara Pookara Song Lyrics in Tamil


BGM

குழு : பெண்ணுக்கொரு பேரின்பம்…
இங்கிங்கே கண்ணாளா…
வாழ்ந்திடு அங்கங்கே…
வாழ்ந்திடு அங்கங்கே…

குழு : வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே…
வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே…
வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே…
வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே…

BGM

பெண் : பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : ஹே பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : என் பூக்கள் மொத்தம்…
எத்தனை சொல்லி விடு…

பெண் : எண்ணிக்கை…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : குறையாமல்…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : நீ எல்லாம் பூவை…
ஒரு முறை கிள்ளிவிடு…

பெண் : பூங்கொடிக்கு கட்டு பட்டு…
பட்டு கட்டும் மொட்டு கூட்டம்…
பூப்பதென்ன ஒரு முறைதான்…
தான் தான் தான்…

பெண் : பூப்படைந்து பின்னும் கூட…
மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள்…
பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும்தான்…

ஆண் : பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : ஹே பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் மொத்தம்…
எத்தனை தெரியவில்லை…

ஆண் : பூ கூடை…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : பாராமல்…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் எண்ணி…
சொல்வது சுலபம் இல்லை…

BGM

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச ச…
னி த னி சா…
ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச ச…
னி த னி சா…

BGM

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி சா…

பெண் : மின்னல் பாம்பே கையில் சுற்றும்…
உள்ளம் கொண்டவள் நான்…
கிளி கொஞ்சம் புலி கொஞ்சம்…
கலவை நான்…

குழு : காதலுக்கேது சண்டே மண்டே…
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே…

குழு : மேட் பார் ஈச் அதர்…
என்றே என்றே…
மேளம் கொட்டுங்கள்…
இன்றே இன்றே…

ஆண் : ஓ… எட்டு திசையை மாற்றி போடும்…
கெட்டிக்காரன்…
நான் சூரியனில் கூடு கட்டும்…
பறவை நான்…

ஆண் : நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய்…
கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்…
இளமையினாலே இமயத்தை உடைப்பாய்…
வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்…

பெண் : பதினெட்டு வருடம்…
காய்ந்துள்ள நிலத்தில்…
பருவமே மழை பொழிக…

ஆண் : ஓஹோ… பன்னிரண்டு மாதம்…
இரவுகள் செய்து…
பள்ளியறை சுகம் பெருக…

பெண் : பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : ஹே பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : என் பூக்கள் மொத்தம்…
எத்தனை சொல்லி விடு…

பெண் : எண்ணிக்கை…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : குறையாமல்…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : நீ எல்லாம் பூவை…
ஒரு முறை கிள்ளிவிடு…

BGM

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி ச…

ஆண் : வெண்பா கேட்டால்…
பெண்பா சொல்லும்…
முக்கால் கவிஞன் நான்…
சந்நியாசி சம்சாரி ரெண்டும் நான்…

ஆண் : நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய்…
கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்…
இளமையினாலே இமயத்தை உடைப்பாய்…
வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்…

பெண் : ஓ… வயசு பயல் மேல் மையம் கொள்ளும்…
வங்க புயலும் நான்…
முனிவர்களும் துருவாத முத்தம் நான்…

பெண் : காதலுக்கேது சண்டே மண்டே…
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே…

பெண் : மேட் பார் ஈச் அதர்…
என்றே என்றே…
மேளம் கொட்டுங்கள்…
இன்றே இன்றே…

ஆண் : காட்டுக்குள் விழுந்த…
மழை துளி போல…
உனக்குள்ளே தொலைந்துவிட்டேன்…

பெண் : பாட்டினில் கலந்த…
ராகங்கள் போல…
உனக்குள்ளே கரைந்துவிட்டேன்…

ஆண் : பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : ஹே பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் மொத்தம்…
எத்தனை தெரியவில்லை…

ஆண் : பூ கூடை…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : பாராமல்…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் எண்ணி…
சொல்வது சுலபம் இல்லை…

ஆண் : பூவாய் மாறி தேகத்துக்குள்…
பூவில்லாத பாகம் ஏது…
சொன்னவர்கள் கண்டதில்லையே…
யே யே யே யே…

ஆண் : காலை நேர பூக்கள் வேறு…
மாலை நேர பூக்கள் வேறு…
கண்டவர்கள் சொன்னதில்லையே…

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி சா…
ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி சா…


Notes : Pookara Pookara Song Lyrics in Tamil. This Song from Citizen (2001). Song Lyrics penned by Vairamuthu. பூக்காரா பூக்காரா பாடல் வரிகள்.


சிக்கி முக்கி கல்லு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், சாதனா சர்கம்தேவாசிட்டிசன்

Chikkimukki Kallu Song Lyrics in Tamil


BGM

பெண் : சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…
சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…

ஆண் : தீ நீயாக…
நான் பஞ்சாக…

பெண் : பூ ஒன்று போராடும் தீயோடு…
பூவோடு சிற்றின்ப மாநாடு…
தேகங்கள் பறி மாறும்…
விருந்தொன்று நிகழ்கின்றது…

பெண் : சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…
சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…
முள்ளுதே முள்ளுதே…
முள்ளுதே முள்ளுதே…

BGM

பெண் : என் பசி அறிந்து பால் குடத்தை…
பக்கம் வைத்து போனவர் யாரோ…
நம்மை பூவுக்குள்ளே பூட்டி வைத்து…
சாவியை தொலைத்தவர் யாரோ…

BGM

ஆண் : ஓ முத்த ஈரத்திலே ஈரத்திலே…
எரிமலை அணைத்தது யாரோ…
உன் உதட்டு வழி பள்ளங்களில்…
என் உயிரை புதைத்தது யாரோ…
நீ நீதானா…

பெண் : தேகத்தை இணைத்தது காவல் துறை…
மோகத்தை வளர்த்தது காமன் துறை…
கை நான்கும் மெய் ரெண்டும்…
பின்னும் வேலை…

ஆண் : அப்போது சபதம் கொண்டேன்…
இப்போதோ சலனம் கண்டேன்…
பெண் மூச்சு காற்று மோதி மோதி…
காடு எரிய கண்டேன்…

பெண் : சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…
சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…

BGM

ஆண் : இந்த பூமிக்குள்ளே தங்கமுண்டு…
அதை கருவிகள் தெரிவிக்க வேண்டும்…
ஓர் ஆணுக்குள்ளே சுகங்கள் உண்டு…
அதை பெண் வந்து அறிவிக்க வேண்டும்…

BGM

பெண் : வான் மேகங்களை துடைப்பதற்கு…
வலி மேவிய காற்றொன்று வேண்டும்…
என் மோகங்களை துடைப்பதற்கு…
மீசை முறுக்கிய முத்தம் ஒன்று வேண்டும்…
நீ தருவாயா…

ஆண் : எத்தனை சுகம் என்று…
அறிந்து கொண்டேன்…
இழந்த சுகத்துக்கு வருந்துகின்றேன்…
சிற்றின்பம் பேரின்பம் ஒன்றே என்றேன்…

பெண் : செவ்வாயில் முத்து குளித்தாய்…
அய்யய்யோ செத்து பிழைத்தேன்…
ஆண் சிங்கம் என்றும் சைவம் அல்ல…
இங்கேதான் கண்டு பிடித்தேன்…

ஆண் : சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…
சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…

பெண் : தீ நீயாக…
நான் பஞ்சாக…

ஆண் : பூ ஒன்று போராடும் தீயோடு…
பூவோடு சிற்றின்ப மாநாடு…
தேகங்கள் பறி மாறும்…
விருந்தொன்று நிகழ்கின்றது…

பெண் : சிக்கி முக்கி கல்லு மோதுதே…
மோதுதே… மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…
சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…


Notes : Chikkimukki Kallu Song Lyrics in Tamil. This Song from Citizen (2001). Song Lyrics penned by Vairamuthu. சிக்கி முக்கி கல்லு பாடல் வரிகள்.