Category Archives: மகராசன்

மகராசன் – Maharasan (1993)

ராக்கோழி கூவும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமகராசன்

Rakoozhi Koovum Song Lyrics in Tamil


BGM

பெண் : அடி ராக்கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…

BGM

பெண் : அடி ராக் கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…
அந்த ஏற்க்காடு ஊட்டி போல…
குளிர் ஏராளம் ஏறிப் போச்சிசு…

பெண் : குளிர் அடிக்க அடிக்க…
கட்டிப் புடிக்க புடிக்க…
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க…
வா மாமா…

பெண் : அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு…

ஆண் : அட ராக் கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…

BGM

ஆண் : தட்டித் தட்டித் தவுல மெல்லத் தட்டி…
விடியும் வர கச்சேரி வெக்கலாமா…
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்…
நீ வித்தைகளை காட்டாம நிக்கலாமா…

பெண் : கட்டிக் கட்டி இறுக உன்ன கட்டி…
கனிஞ்சிருக்கும் கொய்யாவக் கிள்ளலாமா…
என்ன வேணும் என் எண்ணங்களை நானும்…
உன் கிட்ட வந்து காதோடு சொல்லலாமா…

ஆண் : அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்…
அந்தத் தோப்போரம் வான்னாலும் வாரேன்…

பெண் : விடிஞ்சாலும் மாமா விடமாட்டேன் ஆமா…

ஆண் : அட ராக் கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…

BGM

பெண் : கொஞ்சிக் கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி…
கலந்திருக்க வந்தாச்சு திருநாளு…
கன்னி தோளில் கை தொட்டுக் கொஞ்சும் ஆளு…
என் வள்ளிக் குப்பம் கொண்டாடும் வடிவேலு…

ஆண் : சுத்திச் சுத்தி நிதமும் என்ன சுத்தி…
புடிச்சுப்புட்டே இந்நேரம் வலை வீசி…
மெத்த போட உன் மந்திரத்தில் ஆட…
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மகராசி…

பெண் : நிலா என் மேலே தீயாட்டம் பாயும்…
இப்ப உன் மேல என் மேனி சாயும்…

ஆண் : அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு…

பெண் : அடி ராக் கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…

ஆண் : குளிர் அடிக்க அடிக்க…
கட்டிப் புடிக்க புடிக்க…
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க…
வா மாமா வா…

ஆண் : அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு…

ஆண் : அட ராக் கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…


Notes : Rakoozhi Koovum Song Lyrics in Tamil. This Song from Maharasan (1993). Song Lyrics penned by Vaali. ராக்கோழி கூவும் பாடல் வரிகள்.


அரச்சு அரச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & எஸ். ஜானகிஇளையராஜாமகராசன்

Arachu Arachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…

பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…

ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…

பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…

ஆண் : இள மானே மல்லிகையே…
நல்ல முக்கனி சக்கரையே…
அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே…

பெண் : பட்டுப் பாய போடட்டுமா…
புது பல்லவி பாடட்டுமா…
சிறு பூவே உன்ன தோளில் வச்சு ஆடட்டுமா…

ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…

பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…

BGM

ஆண் : இன்னொருத்தன் டாவடிச்சா ஏத்துக்குமா என் மனசு…
நான் பறிக்க இருக்கு இந்தத் தாமரைப் பூவு…

பெண் : காதுகளில் பூ சுத்துவான்…
புதுப் புது ரீல் விடுவான்…
குள்ள நரி இவனா இந்த மானுக்குத் தோது…

ஆண் : நம்பி என்ன காதலிச்சா…
நல்ல படி வாழ வைப்பேன்…
ஊரச் சுத்தி மேளம் கொட்டி…
உன் தலையில் பூவ வைப்பேன்…

பெண் : என்ன விட்டு என் குருவி உன்னிடத்தில் சிக்கிடுமா…
காசு பணம் ஆடம்பரம் காதலுக்கு முக்கியமா…

ஆண் : விடமாட்டேன் கண்மணியே…
கண்ணில் மிண்ணுர பொன்மணியே…
கிளி கொத்த இங்கு காத்திருக்கு செங்கனியே…

பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…

ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…

BGM

பெண் : என்னுடைய மார்பழகும்…
நீண்டிருக்கும் தோள் அழகும்…
எங்கிருக்கு கிளியே இத நீ கொஞ்சம் யோசி…

ஆண்: வேண்டியத வாங்கித் தரேன்…
கைய கட்டிக் கூட வறேன்…
உன் அடிமை இவன்தான் இந்த காளைய நேசி…

பெண் : ராணியம்மா ஆணையிட்டால்…
ஏவல் செய்யக் காத்திருக்கேன்…
ராத்திரியில் காலமுக்கி நீவி விட நானிருக்கேன்…

ஆண் : காலையில கண் முழிச்சா…
காப்பி போட்டு நான் கொடுப்பேன்…
சேலைகளை எடுத்தெறிஞ்சா…
சோப்பு போட்டு நான் துவைப்பேன்…

பெண் : சின்ன சேலம் மாம்பழமே…
மச்சான் தட்டுற மத்தளமே…
எந்த நாளும் வந்து நெஞ்சில் சுத்தும் பம்பரமே…

ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…

பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…

ஆண் : இள மானே மல்லிகையே…
நல்ல முக்கனி சக்கரையே…
அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே…

பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…

ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…


Notes : Arachu Arachu Song Lyrics in Tamil. This Song from Maharasan (1993). Song Lyrics penned by Vaali. அரச்சு அரச்சு பாடல் வரிகள்.