பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | மகராசன் |
Rakoozhi Koovum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அடி ராக்கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…
—BGM—
பெண் : அடி ராக் கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…
அந்த ஏற்க்காடு ஊட்டி போல…
குளிர் ஏராளம் ஏறிப் போச்சிசு…
பெண் : குளிர் அடிக்க அடிக்க…
கட்டிப் புடிக்க புடிக்க…
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க…
வா மாமா…
பெண் : அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு…
ஆண் : அட ராக் கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…
—BGM—
ஆண் : தட்டித் தட்டித் தவுல மெல்லத் தட்டி…
விடியும் வர கச்சேரி வெக்கலாமா…
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்…
நீ வித்தைகளை காட்டாம நிக்கலாமா…
பெண் : கட்டிக் கட்டி இறுக உன்ன கட்டி…
கனிஞ்சிருக்கும் கொய்யாவக் கிள்ளலாமா…
என்ன வேணும் என் எண்ணங்களை நானும்…
உன் கிட்ட வந்து காதோடு சொல்லலாமா…
ஆண் : அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்…
அந்தத் தோப்போரம் வான்னாலும் வாரேன்…
பெண் : விடிஞ்சாலும் மாமா விடமாட்டேன் ஆமா…
ஆண் : அட ராக் கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…
—BGM—
பெண் : கொஞ்சிக் கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி…
கலந்திருக்க வந்தாச்சு திருநாளு…
கன்னி தோளில் கை தொட்டுக் கொஞ்சும் ஆளு…
என் வள்ளிக் குப்பம் கொண்டாடும் வடிவேலு…
ஆண் : சுத்திச் சுத்தி நிதமும் என்ன சுத்தி…
புடிச்சுப்புட்டே இந்நேரம் வலை வீசி…
மெத்த போட உன் மந்திரத்தில் ஆட…
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மகராசி…
பெண் : நிலா என் மேலே தீயாட்டம் பாயும்…
இப்ப உன் மேல என் மேனி சாயும்…
ஆண் : அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு…
பெண் : அடி ராக் கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…
ஆண் : குளிர் அடிக்க அடிக்க…
கட்டிப் புடிக்க புடிக்க…
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க…
வா மாமா வா…
ஆண் : அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு…
ஆண் : அட ராக் கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…
Notes : Rakoozhi Koovum Song Lyrics in Tamil. This Song from Maharasan (1993). Song Lyrics penned by Vaali. ராக்கோழி கூவும் பாடல் வரிகள்.