| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | மனோ & எஸ். ஜானகி | இளையராஜா | மகராசன் |
Arachu Arachu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…
பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…
ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…
பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…
ஆண் : இள மானே மல்லிகையே…
நல்ல முக்கனி சக்கரையே…
அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே…
பெண் : பட்டுப் பாய போடட்டுமா…
புது பல்லவி பாடட்டுமா…
சிறு பூவே உன்ன தோளில் வச்சு ஆடட்டுமா…
ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…
பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…
—BGM—
ஆண் : இன்னொருத்தன் டாவடிச்சா ஏத்துக்குமா என் மனசு…
நான் பறிக்க இருக்கு இந்தத் தாமரைப் பூவு…
பெண் : காதுகளில் பூ சுத்துவான்…
புதுப் புது ரீல் விடுவான்…
குள்ள நரி இவனா இந்த மானுக்குத் தோது…
ஆண் : நம்பி என்ன காதலிச்சா…
நல்ல படி வாழ வைப்பேன்…
ஊரச் சுத்தி மேளம் கொட்டி…
உன் தலையில் பூவ வைப்பேன்…
பெண் : என்ன விட்டு என் குருவி உன்னிடத்தில் சிக்கிடுமா…
காசு பணம் ஆடம்பரம் காதலுக்கு முக்கியமா…
ஆண் : விடமாட்டேன் கண்மணியே…
கண்ணில் மிண்ணுர பொன்மணியே…
கிளி கொத்த இங்கு காத்திருக்கு செங்கனியே…
பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…
ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…
—BGM—
பெண் : என்னுடைய மார்பழகும்…
நீண்டிருக்கும் தோள் அழகும்…
எங்கிருக்கு கிளியே இத நீ கொஞ்சம் யோசி…
ஆண்: வேண்டியத வாங்கித் தரேன்…
கைய கட்டிக் கூட வறேன்…
உன் அடிமை இவன்தான் இந்த காளைய நேசி…
பெண் : ராணியம்மா ஆணையிட்டால்…
ஏவல் செய்யக் காத்திருக்கேன்…
ராத்திரியில் காலமுக்கி நீவி விட நானிருக்கேன்…
ஆண் : காலையில கண் முழிச்சா…
காப்பி போட்டு நான் கொடுப்பேன்…
சேலைகளை எடுத்தெறிஞ்சா…
சோப்பு போட்டு நான் துவைப்பேன்…
பெண் : சின்ன சேலம் மாம்பழமே…
மச்சான் தட்டுற மத்தளமே…
எந்த நாளும் வந்து நெஞ்சில் சுத்தும் பம்பரமே…
ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…
பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…
ஆண் : இள மானே மல்லிகையே…
நல்ல முக்கனி சக்கரையே…
அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே…
பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…
ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…
Notes : Arachu Arachu Song Lyrics in Tamil. This Song from Maharasan (1993). Song Lyrics penned by Vaali. அரச்சு அரச்சு பாடல் வரிகள்.