Category Archives: உழைப்பாளி

உழைப்பாளி

முத்திரை இப்போது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கவிதா கிருஷ்ணமூர்த்திஇளையராஜாஉழைப்பாளி

Muthirai Ippothu Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்திரை இப்போது குத்திடு தப்பாது…
ராஜா ராஜா…
ஹேய்… உன் விரல் படாது இன்றுனை விடாது…
ரோஜா ரோஜா…
அழைத்தேனே நானா விடுவேனா போனா…
அட வாயா… ஓஓஓ…

ஆண் : முத்திரை எப்போதும் குத்திட தப்பாது…
ராஜா ராஜா…
ஹேய்… என் விரல் படாது இன்றுனை தொடாது…
ரோஜா ரோஜா…

BGM

ஆண் : ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே…
பொருந்தா உறவு…
ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம்…
மலரே விலகு…

பெண் : பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது…
உன்னையும் விடாது இந்த வனம்…
பந்தையும் வச்சாச்சு பக்கமும் வந்தாச்சு…
பொன்னிற நிலாவை கொஞ்சு தினம்…

ஆண் : என் வழி வராது சின்ன மணி…
உன்னிடம் சிக்காது வைர மணி விளையாட்டு காட்டாதே…

பெண் : முத்திரை இப்போது குத்திடு தப்பாது…
ராஜா ராஜா…
ஹேய் உன் விரல் படாது இன்றுனை விடாது…
ரோஜா ரோஜா…

BGM

பெண் : பூந்தோகை எங்கும் அடி கண்டாலும் வாங்கும்…
உனையே விரும்பும்…
ஓயாத ஆசை உன்னை நான் பார்க்கும் வேளை…
மனதில் அரும்பும்…

ஆண் : ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்…
ஏழைகள் ஏறிட விட்டதில்லை…
உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்…
என் மனம் ஆசையும் பட்டதில்லை…

பெண் : என் உயிர் மண் மீது உள்ளவரை…
உன் மனமும் எந்தன் பள்ளி அறை பிடிவாதம் கூடாதே…

ஆண் : முத்திரை எப்போதும் குத்திட தப்பாது…
ராஜா ராஜா…
ஹேய் என் விரல் படாது இன்றுனை தொடாது…
ரோஜா ரோஜா…
விழ மாட்டேன் நானே வளைக்காதே வீணே…
அடி மானே… ஓஓஓ…

பெண் : முத்திரை இப்போது குத்திடு தப்பாது…
ராஜா ராஜா…
ஹேய் உன் விரல் படாது இன்றுனை விடாது…
ரோஜா ரோஜா…


Notes : Muthirai Ippothu Song Lyrics in Tamil. This Song from Uzhaippali (1993). Song Lyrics penned by Vaali. முத்திரை இப்போது பாடல் வரிகள்.


ஒரு கோல கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉழைப்பாளி

Oru Kola Kili Song Lyrics in Tamil


ஆண் : ஒரு கோல கிளி சோடி தன்னை…
தேடுது தேடுது மானே…
அது திக்க விட்டு தெசையை விட்டு…
நிக்குது நிக்குது முன்னே…

ஆண் : அது இப்போ வருமோ…
எப்போ வருமோ…

BGM

ஆண் : ஒரு கோல கிளி சோடி தன்னை…
தேடுது தேடுது மானே…
அது திக்க விட்டு தெசையை விட்டு…
நிக்குது நிக்குது முன்னே…

ஆண் : ஒரு சோள குயில் சோடி தன்னை…
தேடுது தேடுது மானே…
அது நெஞ்சும் கெட்டு நெனப்பும் கெட்டு…
நிக்குது நிக்குது முன்னே…
பெண் : பியூட்டிபுல்…

ஆண் : இப்போ வருமோ எப்போ வருமோ…
பெண் : வரே வா…

ஆண் : ஆசை பொறந்தா அப்போ வருமோ…
பெண் : ஃபைன்…

ஆண் : ஒரு கோல கிளி சோடி தன்னை…
தேடுது தேடுது மானே…
அது திக்க விட்டு தெசையை விட்டு…
நிக்குது நிக்குது முன்னே…

BGM

ஆண் : அது மாமரத்து கூட்டு குள்ளே அந்நாளிலே…
நல்ல சோடி உடன் பாட்டெடுத்த பொன் நாளிலே…
பெண் : ஆஹான்…

ஆண் : ரெண்டும் ஊர சுத்தி தேர சுத்தி ஒன்னா போனது…
பெண் : ஓ லவ்லி…
ஆண் : அது ஒன்னா இருந்த காலம் இப்போ எங்கே போனது…
பெண் : ஒண்டர்புல்…

ஆண் : நாலு பக்கம் தேடி தேடி…
நல்ல நெஞ்சு வாடுதடி…
கூவுகிற கூவல் எல்லாம் என்ன வந்து தாக்குதடி…
பெண் : ஐஸ் இட் சோ…

ஆண் : இப்போ வருமோ எப்போ வருமோ…
ஒட்டி இருக்க ஒத்து வருமோ…
பெண் : எக்ஸ்செலண்ட்…

ஆண் : ஒரு கோல கிளி சோடி தன்னை…
தேடுது தேடுது மானே…
அது திக்க விட்டு தெசையை விட்டு…
நிக்குது நிக்குது முன்னே…

BGM

ஆண் : அடி மொய் எழுத வந்த கிளி போராடுது…
அத பொய் எழுத வச்ச கிளி சீராடுது…

ஆண் : இதில் யாரை சொல்லி குத்தம் என்ன…
எல்லாம் நேரம்தான்…
அடி ஒன்னோடு ஒன்னு சேராவிட்டால்…
என்றும் பாரம்தான்…
பெண் : சூப்பெர்ப்…

ஆண் : தித்திக்கும் செங்கரும்பே…
இதனை நாள் எங்கிருந்தே…
மொட்டுவிட்ட தேன் அரும்பே…
போதும் அடி உன் குறும்பே…

ஆண் : விட்ட குறையோ தொட்ட குறையோ…
இந்த உறவு என்ன முறையோ…

ஆண் : ஒரு கோல கிளி சோடி தன்னை…
தேடுது தேடுது மானே…
அது திக்க விட்டு தெசையை விட்டு…
நிக்குது நிக்குது முன்னே…

ஆண் : இப்போ வருமோ எப்போ வருமோ…
ஆசை பொறந்தா அப்போ வருமோ…

ஆண் : ஒரு கோல கிளி சோடி தன்னை…
தேடுது தேடுது மானே…
அது திக்க விட்டு தெசையை விட்டு…
நிக்குது நிக்குது முன்னே…

ஆண் : ஒரு சோள குயில் சோடி தன்னை…
தேடுது தேடுது மானே…
அது நெஞ்சும் கேட்டு நெனப்பும் கேட்டு…
நிக்குது நிக்குது முன்னே…


Notes : Oru Kola Kili Song Lyrics in Tamil. This Song from Uzhaippali (1993). Song Lyrics penned by Vaali. ஒரு கோல கிளி பாடல் வரிகள்.


Uzhaippali Illatha Song Lyrics in Tamil

உழைப்பாளி இல்லாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஉழைப்பாளி

Uzhaippali Illatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடுதான்…
எங்கும் இல்லேயா அர ஹோயா…
அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்…
எங்கும் இல்லேயா அர ஹோயா…

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடுதான்…
எங்கும் இல்லேயா அர ஹோயா…
அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்…
எங்கும் இல்லேயா அர ஹோயா…

ஆண் : அட சாமியோ சாமி…
அப்படி இருந்திட்டா காமி…
கூலியோ கூலி எங்கள நம்பித்தான் பூமி…
பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடுதான்…
குழு : எங்கும் இல்லேயா அர ஹோயா…
ஆண் : அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்…
குழு : எங்கும்இல்லேயா அர ஹோயா…

BGM

ஆண் : தலை மேலே சாப்பாடு…
கொண்டாரும் கப்பக்கெழங்கே…
குழு : அம்மம்மா ஹா அங்கம்மா ஹா…

ஆண் : சில போல ஷோக்காக…
உன்னை தான் பெத்து போட்டுட்டா…
குழு : உங்கம்மா ஹா மங்கம்மா ஹா…

ஆண் : அட பலவூட்டு பலகாரம்…
ஒண்ணான கூட்டாஞ்சோறுதான்…
குழு : சின்னையா ஹா பொன்னையா ஹா…

ஆண் : ஆ… பல சாதி இது போல…
ஒண்ணானா சண்டை வருமா… ஹோய்…
குழு : செல்லையா ஹா சொல்லையா ஹா…

ஆண் : நித்தமும் பாடுபட்டு…
உழைக்கும் யாவரும் ஓரினம் தான்…
சத்திய வார்த்தை இதை…
நமக்கு சொல்லுது மே தினம்தான்…

ஆண் : நாமெல்லாம் வேலை நிறுத்தம்…
செஞ்சா தாங்காது நாடு முழுதும்…
நாம் இன்றி என்ன நடக்கும்…
நம்ம கைதாண்டா ஓங்கி இருக்கும்…

ஆண் : அட அடிச்சாலும் புடிச்சாலும்…
அண்ணன் தம்பி நீயும் நானுடா… ஹோய்…

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடுதான்…
குழு : எங்கும் இல்லேயா அர ஹோயா…

BGM

ஆண் : பணக்காரன் குடி ஏற…
பாட்டாளி வீடு கட்டுறான்…
குழு : கல்லாலே ஹே மண்ணாலே ஹே…

ஆண் : ஆனாலும் அவனுக்கோர்…
வீடில்ல யாரு கேக்குறா…
குழு : துக்கம் தான் ஹா சொன்னாலே ஹா…

ஆண் : பல பேரு தான் உடுத்த…
நெசவாளி நூல நெய்யுறான்…
குழு : பொன்னான ஹா கையாலே ஹா…

ஆண் : அட ஆனாலும் அவனுடுத்த வேட்டி இல்ல…
யாரு கேக்குறா… ஹோய்…
குழு : துக்கம் தான் ஹா சொன்னாலே ஹா…

ஆண் : சம்பளம் வாங்கியதும் முழுசா…
வீட்டிலே சேர்த்திடுங்க…
மத்தியில் யார் பறிப்பா…
பறிச்சா முட்டிய பேத்துடுங்க…

ஆண் : அஞ்சாம தொழில செஞ்சா…
நம்ம யாராச்சும் அசைப்பானா…
ஒண்ணாக இருந்தாக்கா…
இங்கே வாலாட்ட நெனைப்பானா…

ஆண் : அட அடிச்சாலும் புடிச்சாலும்…
அண்ணன் தம்பி நீயும் நானுடா…
ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடுதான்…
குழு : எங்கும் இல்லேயா அர ஹோயா…
ஆண் : அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்…
குழு : எங்கும் இல்லேயா அர ஹோயா…

ஆண் : அட சாமியோ சாமி…
அப்படி இருந்திட்டா காமி…
கூலியோ கூலி எங்கள நம்பித்தான் பூமி…
பிறர் வாழ்வதே எங்க வேர்வையில்தான்…

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடுதான்
குழு : எங்கும் இல்லேயா அர ஹோயா…
ஆண் : அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்…
குழு : எங்கும் இல்லேயா அர ஹோயா…


Notes : Uzhaippali Illatha Song Lyrics in Tamil. This Song from Uzhaippali (1993). Song Lyrics penned by Vaali. உழைப்பாளி இல்லாத பாடல் வரிகள்.


ஒரு மைனா மைனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாஉழைப்பாளி

Oru Maina Maina Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது…
மாயங்கள் காட்டுது… ஹோய் ஹோய்…
அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது…
ஜோடியை கூடுது… ஹோய் ஹோய்…

ஆண் : மெல்ல காதலிக்க…
எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்…
மன்னன் பூங்குளத்தில்…
ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள்…

ஆண் : மெல்ல காதலிக்க…
எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்…
மன்னன் பூங்குளத்தில்…
ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள்…

பெண் : ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது…
மாயங்கள் காட்டுது… ஹோய் ஹோய்…
அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது…
ஜோடியை கூடுது… ஹோய் ஹோய்…

BGM

ஆண் : மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை…
கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது…
பெண் : அதை பாராட்டி பாட்டு எழுது…

ஆண் : பாவாடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க…
போராடும் இந்த மனது…
பெண் : இது பொல்லாத காளை வயது…

ஆண் : சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ…
என்னை சேர்த்து…
இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ…
என்னை சேர்ந்து…

பெண் : ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது…
மாயங்கள் காட்டுது… ஹோய் ஹோய்…

ஆண் : அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது…
ஜோடியை கூடுது… ஹோய் ஹோய்…

BGM

பெண் : ஏதேனும் வேணும் என்றால்
காதோரம் மெல்ல கடி…
ஏராளம் அள்ளித் தருவேன்…
ஆண் : அது போதாமல் மீண்டும் வருவேன்…

பெண் : நான்தானே நீச்சல் குளம்…
நாள்தோறும் நீயும் வந்து…
ஓயாமல் நீச்சல் பழகு…
ஆண் : அடி தாங்காது உந்தன் அழகு…

பெண் : அன்பு காயமெல்லாம்…
இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும்…
அந்திநேரம் எல்லாம்…
இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம்…

ஆண் : ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது…
மாயங்கள் காட்டுது… ஹோய் ஹோய்…
அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது…
ஜோடியை கூடுது… ஹோய் ஹோய்…

பெண் : மெல்ல காதலிக்க…
எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்…
மன்னன் பூங்குளத்தில்…
ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள்…

ஆண் : மெல்ல காதலிக்க…
எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்…
மன்னன் பூங்குளத்தில்…
ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள்…

பெண் : ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது…
மாயங்கள் காட்டுது… ஹோய் ஹோய்…

ஆண் : அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது…
ஜோடியை கூடுது… ஹோய் ஹோய்…


Notes : Oru Maina Maina Song Lyrics in Tamil. This Song from Uzhaippali (1993). Song Lyrics penned by Vaali. ஒரு மைனா மைனா பாடல் வரிகள்.


அம்மா அம்மா எந்தன் ஆருயிரே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉழைப்பாளி

Amma Amma (Male) Song Lyrics in Tamil


ஆண் : அம்மா அம்மா…
எந்தன் ஆருயிரே…
கண்ணின் மணியே…
தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…

—BGM—

ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…
நானும் நீயும் என்றும் ஓருயிரே…
இரு கண்ணின் மணியே… ஓ… ஓ… ஓ… ஓ…
தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…

—BGM—

ஆண் : பூவிழி ஓரம்…
ஓர் துளி நீரும்…
நீ வடித்தால் மனம் தாங்காது…

ஆண் : பொன்முகம் கொஞ்சம்…
வாடி நின்றாலும்…
நான் துடிப்பேன் வலி தாளாது…

ஆண் : பத்து மாசம் சுமந்து…
பட்ட பாடும் மறந்து…
பிள்ளைச் செல்வம் பிறக்க…
அள்ளிக்கையில் எடுத்த…

ஆண் : தாயும் நீயே…
தவமிருந்தாயே…
வாடுதம்மா பிள்ளையே…
வாட்டுவதோ என்னை நீயே…

ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…
நானும் நீயும் என்றும் ஓருயிரே…

—BGM—

ஆண் : பாதைகள் மாறி…
ஓடிய கன்றை…
தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா…

ஆண் : கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால்…
தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா…

ஆண் : நல்ல காலம் பிறக்க…
உன்னை நானும் அறிந்தேன்…
உந்தன் கண்கள் திறக்க…
இங்கு பாடல் படித்தேன்…

ஆண் : போதும் போதும்…
பிரிந்தது போதும்…
வாடுதம்மா பிள்ளையே…

—BGM—

ஆண் : வாட்டுவதோ என்னை நீயே…

—BGM—


Notes : Amma Amma (Male) Song Lyrics in Tamil. This Song from Uzhaippali (1993). Song Lyrics penned by Vaali. அம்மா அம்மா எந்தன் ஆருயிரே பாடல் வரிகள்.