Category Archives: குணா

குணா (Gunaa) 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேகா, ரோஷினி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Appan Endrum Ammai Endrum Song Lyrics in Tamil

அப்பனென்றும் அம்மையென்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாகுணா

Appan Endrum Ammai Endrum Song Lyrics in Tamil


BGM

ஆண் : அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…

ஆண் : அது புத்தன் என்றும் சித்தன் என்றும்…
பித்தன் என்றும் ஆவதென்ன…
சக்கையாக போகும் கரும்பு…
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு…

ஆண் : பந்த பாச சேற்றில்…
வந்து விழுந்த தேகம்…
எந்த கங்கை ஆற்றில்…
இந்த அழுக்கு போகும்…
அப்பனென்றும்…

ஆண் : அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…

BGM

ஆண் : குத்தம் குறை ஏதுமற்ற…
ஜீவன் இங்கு யாரடா…
சுத்தம் என்று யாரும் இல்லை…
பாவ மூட்டைதானடா…

ஆண் : சிவனைக் கூட பித்தன் என்று…
பேசுகின்ற ஊரடா…
புத்தி கேட்ட மூடருக்கு என்றும்…
ஞானப் பார்வை ஏதடா…

ஆண் : ஆதி முதல் அந்தம்…
உன் சொந்தம் உன் பந்தம்…
நீ உள்ளவரைதான்…

ஆண் : வந்து வந்து கூடும்…
கூத்தாடும் விட்டோடும்…
ஓர் சந்தை கடை தான்…

ஆண் : இதில் நீ என்ன நான் என்ன…
வந்தாலும் சென்றாலும்…
என்னாச்சு விட்டுத் தள்ளு…
அப்பனென்றும்…

ஆண் : அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…

BGM

ஆண் : கையும் காலும் மூக்கும் கொண்டு…
ஆட வந்த காரணம்…
ஆடித்தானே சேத்து வச்ச…
பாவம் யாவும் தீரனும்…

ஆண் : ஆட ஆட பாவம் சேரும்…
ஆடி ஓடும் மானிடா…
ஆட நானும் மாட்டேன் என்று…
ஓடிப்போனதாரடா…

ஆண் : தட்டு கேட்டு ஓடும் தள்ளாடும்…
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு…
கட்டுப்பட கூடும் எப்போதும் நீ போடு…
மெய்ஞான விலங்கு…

ஆண் : மனம் ஆடாமல் வாடாமல்…
மெய்ஞானம் உண்டாக அஞ்ஞானம் அற்று விழும்…
அப்பன் என்றும்…

ஆண் : அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…

ஆண் : அது புத்தன் என்றும் சித்தன் என்றும்…
பித்தன் என்றும் ஆவதென்ன…
சக்கையாக போகும் கரும்பு…
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு…

ஆண் : பந்த பாச சேற்றில் வந்து…
விழுந்த தேகம்…
எந்த கங்கை ஆற்றில்…
இந்த அழுக்கு போகும்…
அப்பனென்றும்…

ஆண் : அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…


Notes : Appan Endrum Ammai Endrum Song Lyrics in Tamil. This Song from Gunaa (1991). Song Lyrics penned by Vaali. அப்பனென்றும் அம்மையென்றும் பாடல் வரிகள்.


உன்னை நான் அறிவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாகுணா

Unnai Naan Ariven Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னை நான் அறிவேன்…
என்னை அன்றி யாா் அறிவார்…
கண்ணில் நீர் வழிந்தால்…
என்னை அன்றி யார் துடைப்பார்…

பெண் : யார் இவர்கள் மாயும் மானிடர்கள்…
ஆட்டிவைத்தால் ஆடும் பாத்திரங்கள்…

பெண் : உன்னை நான் அறிவேன்…
என்னை அன்றி யாா் அறிவார்…
கண்ணில் நீர் வழிந்தால்…
என்னை அன்றி யார் துடைப்பார்…

BGM

பெண் : தேவன் என்றால் தேவன் அல்ல…
தரைமேல் உந்தன் ஜனனம்…
ஜீவன் என்றால் ஜீவன் அல்ல…
என்னைப்போல் இல்லை சலனம்…

பெண் : நீயோ வானம் விட்டு…
மண்ணில் வந்த தாரகை…
நானோ யாரும் வந்து…
தங்கி செல்லும் மாளிகை…

பெண் : ஏன் தான் பிறந்தாயோ…
இங்கே வளர்ந்தாயோ…
காற்றே நீ ஏன்…
சேற்றின் வாடை கொள்ள வேண்டும்…

பெண் : உன்னை நான் அறிவேன்…
என்னை அன்றி யாா் அறிவார்…
கண்ணில் நீர் வழிந்தால்…
என்னை அன்றி யார் துடைப்பார்…

BGM


Notes : Unnai Naan Ariven Song Lyrics in Tamil. This Song from Gunaa (1991). Song Lyrics penned by Vaali. உன்னை நான் அறிவேன் பாடல் வரிகள்.


பார்த்த விழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அபிராமி பட்டர்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாகுணா

Paartha Vizhi Song Lyrics in Tamil


BGM

குழு : நாயகி நான் முகி…
நாராயணி கை நளின பஞ்ச சாயாகி…
சாம்பவி சங்கரி ஷ்யாமலை ஜாதிநச்சுவாயாகி…
மாலினி வாறாக சொல்லினி…
மாதங்கி என்று ஆய க்யாதி உடையாள்…
சரணம்… சரணம்… சரணம்…
சரணம்… சரணம்… சரணம்…

BGM

ஆண் : பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க…

ஆண் : ஊன் உருக உயிர் உருக…
தேன் தரும் தடாகமே…
வழி வருக வழி நெடுக…
ஒளி நிறைக வாழ்விலே…

ஆண் : பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…
ஆஆ ஆஆ ஆஆ…

குழு : இடன் கொண்டு விம்மி…
இணை கொண்டு இறுகி…
இடன் கொண்டு விம்மி…
இணை கொண்டு இறுகி

குழு : இளகி முத்து வடன் கொண்ட…
கொங்கை மலை கொண்ட…
இறைவர் வலிய நெஞ்சை நடன் கொண்ட…
கொள்கை நலன் கொண்ட…
நாயகி நல்லாரவின் படம் கொண்ட…
அன்பு பணிமொழி வேதப் பரிபுரையே…
வேதப் பரிபுரையே…

ஆண் : பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க…

BGM


Notes : Paartha Vizhi Song Lyrics in Tamil. This Song from Gunaa (1991). Song Lyrics penned by Abhirami Pattar. பார்த்த விழி பாடல் வரிகள்.


கண்மணி அன்போடு காதலன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன் & எஸ். ஜானகிஇளையராஜாகுணா

Kanmani Anbodu Kadhalan Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : கண்மணி அன்போட காதலன்…
நான்… நான்… எழுதும் லெட்டர் சீ மடல்…
இல்ல கடுதாசி வச்சிகலாமா…
வேணாம் கடிதமே இருக்கட்டும்… படி…

பெண் : கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…

ஆண் (வசனம்) : ஹா ஹா ஹா… பாட்டாவே படிச்சிட்டியா…
அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல…
இங்க பொன்மணி போட்டுக்க…
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா…
நா இங்க சௌக்கியம்…

பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…

ஆண் (வசனம்) : உன்ன நெனச்சு பாக்கும் போது…
கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது…
ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா…
அந்த எழுத்துதான் வார்த்தை…

பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில்…
கவிதை கொட்டுது…

ஆண் (வசனம்) : அதான்…

பெண் : அதை எழுத நினைக்கையில்…
வார்த்தை முட்டுது…

ஆண் (வசனம்) : அதே தான்… ஆஹா… பிரமாதம்…
கவிதை கவிதை… படி…

பெண் : கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…

பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில்…
கவிதை கொட்டுது…
அதை எழுத நினைக்கையில்…
வார்த்தை முட்டுது… ஓஹோ…
கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

—BGM—

ஆண் (வசனம்) : ம்ம்… எனக்கு உண்டான காயம்…
அது தன்னால ஆறிடும்…
அது என்னவோ தெரியல…
என்ன மாயமோ தெரியல…
எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல…
இதையும் எழுதிக்க…
நடுல நடுல மானே தேனே…
பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்…

ஆண் (வசனம்) : இதோ பாரு…
எனக்கு என்ன காயம்னாலும்…
என் உடம்பு தாங்கிடும்…
உன் உடம்பு தாங்குமா தாங்காது…
அபிராமி அபிராமி அபிராமி…

பெண் (வசனம்) : அதையும் எழுதணுமா…

ஆண் (வசனம்) : ஹான்… இது காதல்…
என் காதல் என்னனு சொல்லாம…
ஏங்க ஏங்க அழுகையா வருது…
ஆனா நா அழுது…
என் சோகம் உன்ன தாக்கிடுமோ…
அப்டினு நினைக்கும் போது…
வர்ற அழுகை கூட நின்னுடுது…
மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனித காதல் அல்ல…
அதையும் தாண்டி புனிதமானது…

பெண் : உண்டான காயமெங்கும்…
தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன…
பொன்மானே பொன்மானே…

—BGM—

பெண் : என்ன காயம் ஆன போதும்…
என் மேனி தாங்கிக் கொள்ளும்…
உந்தன் மேனி தாங்காது செந்தேனே…

பெண் : எந்தன் காதல் என்னவென்று…
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்…
என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது…

பெண் : மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனிதக் காதலல்ல…
அதையும் தாண்டிப் புனிதமானது…

ஆண் : அபிராமியே தாலாட்டும் சாமியே…
நான் தானே தெரியுமா…
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே…
அதுவும் உனக்கு புரியுமா…

ஆண் : சுப லாலி லாலியே லாலி லாலியே…
அபிராமி லாலியே லாலி லாலியே…
அபிராமியே தாலாட்டும் சாமியே…
நான் தானே தெரியுமா…
உனக்கு புரியுமா…

பெண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

பெண் : லா லா லா லா…
லா லா லா லா…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா…

ஆண் & பெண் : ஓஓ… லா லா லா லா…
லா லா லா லா லா லா…
லா லா லா லா…
லா லா லா லா லா லா…


Notes : Kanmani Anbodu Kadhalan Song Lyrics in Tamil. This Song from Gunaa (1991). Song Lyrics penned by Vaali. கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்.