உன்னை நான் அறிவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாகுணா

Unnai Naan Ariven Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னை நான் அறிவேன்…
என்னை அன்றி யாா் அறிவார்…
கண்ணில் நீர் வழிந்தால்…
என்னை அன்றி யார் துடைப்பார்…

பெண் : யார் இவர்கள் மாயும் மானிடர்கள்…
ஆட்டிவைத்தால் ஆடும் பாத்திரங்கள்…

பெண் : உன்னை நான் அறிவேன்…
என்னை அன்றி யாா் அறிவார்…
கண்ணில் நீர் வழிந்தால்…
என்னை அன்றி யார் துடைப்பார்…

BGM

பெண் : தேவன் என்றால் தேவன் அல்ல…
தரைமேல் உந்தன் ஜனனம்…
ஜீவன் என்றால் ஜீவன் அல்ல…
என்னைப்போல் இல்லை சலனம்…

பெண் : நீயோ வானம் விட்டு…
மண்ணில் வந்த தாரகை…
நானோ யாரும் வந்து…
தங்கி செல்லும் மாளிகை…

பெண் : ஏன் தான் பிறந்தாயோ…
இங்கே வளர்ந்தாயோ…
காற்றே நீ ஏன்…
சேற்றின் வாடை கொள்ள வேண்டும்…

பெண் : உன்னை நான் அறிவேன்…
என்னை அன்றி யாா் அறிவார்…
கண்ணில் நீர் வழிந்தால்…
என்னை அன்றி யார் துடைப்பார்…

BGM


Notes : Unnai Naan Ariven Song Lyrics in Tamil. This Song from Gunaa (1991). Song Lyrics penned by Vaali. உன்னை நான் அறிவேன் பாடல் வரிகள்.


Scroll to Top