அதோ மேக ஊர்வலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மனோ & சுனந்தாஇளையராஜாஈரமான ரோஜாவே

Adho Mega Oorvalam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அதோ மேக ஊர்வலம்…
அதோ மின்னல் தோரணம்… அங்கே…
இதோ காதல் ஊர்வலம்…
இதோ காமன் உற்சவம்… இங்கே…

ஆண் : ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்…
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா…

ஆண் : அதோ மேக ஊர்வலம்…
அதோ மின்னல் தோரணம்… அங்கே…

ஆண் : உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு…
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு…

ஆண் : இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்…
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்…

ஆண் : தேகம் தன்னை மூடவே…
கூந்தல் போதும் போதுமே…
ஆடை இங்கு வேண்டுமா…
நாணம் என்ன வா வா…

ஆண் : அதோ மேக ஊர்வலம்…
அதோ மின்னல் தோரணம்… அங்கே…

—BGM—

ஆண் : குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்…
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்…

ஆண் : தென்னம்பாண்டி முத்தைப் போல்…
தேவி புன்னகை…
வண்டு ஆடச் சொல்லுமே…
செண்டு மல்லிகை…

ஆண் : உன்னைச் செய்த பிரம்மனே…
உன்னைப் பார்த்து ஏங்குவான்…
காதல் பிச்சை வாங்குவான்…
இன்னும் என்ன சொல்ல…

ஆண் : அதோ மேக ஊர்வலம்…
அதோ மின்னல் தோரணம்… அங்கே…
இதோ காதல் ஊர்வலம்…
இதோ காமன் உற்சவம்… இங்கே…

ஆண் : ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்…
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா…

ஆண் : அதோ மேக ஊர்வலம்…
அதோ மின்னல் தோரணம்… அங்கே…


Notes : Adho Mega Oorvalam Song Lyrics in Tamil. This Song from Eeramaana Rojavae (1991). Song Lyrics penned by Pulamaipithan. அதோ மேக ஊர்வலம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading