தென்றல் காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாஈரமான ரோஜாவே

Thendral Kaatre Song Lyrics in Tamil


BGM

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…
தனிமை கொதிக்குது…
நினைவினில் அனலும் அடிக்குது…
இதயம் துடிக்குது…
துணை வரத்தான்…

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மேடையேற கூடுமோ…
மீண்டும் நமது நாடகம்…
நானும் நீயும் சேர்வதால்…
யாருக்கென்ன பாதகம்…

ஆண் : யாரைச் சொல்லி நோவது…
காலம் செய்த கோலம்…
உன்னை என்னை வாட்டுது…
காதல் செய்த பாவம்…

பெண் : கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே…
ஆண் : என்ன செய்வது சொல்லடி முல்லையே…
பெண் : கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா…

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

பெண் : தனிமை கொதிக்குது…
நினைவினில் அனலும் அடிக்குது…
இதயம் துடிக்குது…
துணை வரத்தான்…

பெண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

BGM

ஆண் : ஜீவன் ரெண்டும் சேர்ந்தது…
தேவன் வகுத்த சாசனம்…
காதல் எந்த நாளிலும்…
கவிதை போல சாஸ்வதம்…

பெண் : இன்று வந்த நேசமோ…
பூர்வ ஜென்ம யோகம்…
இன்னும் ஏழு ஜென்மமும்…
வளரும் இந்த யாகம்…

ஆண் : மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்…
பெண் : காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்…
ஆண் : பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே…

பெண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

ஆண் : தனிமை கொதிக்குது…
நினைவினில் அனலும் அடிக்குது…
இதயம் துடிக்குது…
துணை வரத்தான்…

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…


Notes : Thendral Kaatre Song Lyrics in Tamil. This Song from Eeramaana Rojavae (1991). Song Lyrics penned by Vaali. தென்றல் காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading