வானத்து நிலவெடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்பி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாஎஸ். ஏ. ராஜ்குமார்சிம்மராசி

Vanathu Nilaveduthu Song Lyrics in Tamil


ஆண் : வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா…
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா…

பெண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்…
ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்…

ஆண் : அழகு பூங்கொடியே…
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

பெண் : வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா…

BGM

ஆண் : உங்கள் வீட்டு தோட்டத்தில் நம் நெஞ்சம் சுற்றுவதென்ன…
பெண் : கண்ணாமூச்சி ஆட்டத்தில் பூக்கள் கை தட்டுவதென்ன…

ஆண் : சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லிக்கொடு…
சிரிக்கின்ற இரவுக்கு கனவை அள்ளிக்கொடு…

பெண் : கன்னத்தில் கன்னத்தில் மீசை உரசுது…
கண்ணுக்குள் கண்ணுக்குள் மின்னல் அடிக்குது…

ஆண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

ஆண் : வானத்து நிலவெடுத்துஊ வாசலில் வைக்கட்டுமா…
பெண் : செவ்வந்தி பூக்களிலேஏ பந்தலை போடட்டுமா…

BGM

ஆண் : சித்திரை பெண்ணே வெட்க்கத்தை தூரத்தில் போக சொல்லு…
கட்டளை இட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு…

பெண் : இனிக்கின்ற இளமைக்கு சிறகை கட்டிவிடு…
மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்றுக்கொடு…

ஆண் : என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது…
அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது…

பெண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

ஆண் : வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா…
பெண் : செவ்வந்தி பூக்களிலேஏ பந்தலை போடட்டுமா…

ஆண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்…
பெண் : ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்…

ஆண் : அழகு பூங்கொடியே…
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

ஆண் : வானத்து நிலவெடுத்துஊ வாசலில் வைக்கட்டுமா…
பெண் : செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா…


Notes : Vanathu Nilaveduthu Song Lyrics in Tamil. This Song from Simmarasi (1998). Song Lyrics penned by Kalai Kumar. வானத்து நிலவெடுத்து பாடல் வரிகள்.


Scroll to Top