கும்பகோணம் சந்தையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்அருண்மொழி & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சிம்மராசி

Kumbagonam Sandaiyil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா…

பெண் : வந்தவாசி ரோட்டுல நேத்து…
வந்த ஆள்தானா…
கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த…
சொந்த ஆள்தானா…

ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து…
உன் தாவணி வேர்த்தது நேத்து…

பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு…
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு…

ஆண் : கும்பகோணம்…

ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா…

—BGM—

ஆண் : தண்ணி தூக்குற தங்க ரதமே…
உன்னை தூக்கிட வரலாமா…

—BGM—

ஆண் : ஹோய்… தண்ணி தூக்குற தங்க ரதமே…
உன்னை தூக்கிட வரலாமா…

பெண் : தண்ணி பானை வச்ச இடத்தை…
மாமன் பார்வைகள் தொடலாமா…

ஆண் : அடி குலுங்குது இடுப்பு குளிருது நெருப்பு…
பக்கம் வந்து தொடலாமா…

பெண் : அட வேப்பிலை இருக்கு மாப்பிள்ளை உனக்கு…
மந்திரிச்சு விடலாமா…

ஆண் : நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு…
ஒன்ன ஜாடையில் கேட்குறேன் சம்மதம் சொல்லம்மா…

—BGM—

ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா… ஹேய்…

—BGM—

ஆண் : கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு…
கம்பங்கூழ் கொண்டு வருவாயா… ஹேய்…

—BGM—

ஆண் : அய்யய்யே…
ஏய்… கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு…
கம்பங்கூழ் கொண்டு வருவாயா…

பெண் : ஏழு தலைமுறை தொட்டில் இருக்க…
என்ன சீக்கிரம் விடுவாயா…

ஆண் : அடி மெத்த வீடு ஒன்னு…
நான் கட்டித்தாரேன் உனக்கு…
கன்னம் கொஞ்சம் தருவாயா…

பெண் : அந்த வீட்டுக்கு வாசக் கதவா ரெண்டு…
உதட்டையும் சேப்பாயோ…

ஆண் : சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு…
கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா…

—BGM—

ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா…

பெண் : ஏய்… வந்தவாசி ரோட்டுல நேத்து…
வந்த ஆள்தானா…
கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த…
சொந்த ஆள்தானா…

ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து…
உன் தாவணி வேர்த்தது நேத்து…

பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு…
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு…

ஆண் : கும்பகோணம்… ஏய்…

—BGM—


Notes : Kumbagonam Sandaiyil Song Lyrics in Tamil. This Song from Simmarasi (1998). Song Lyrics penned by Vasan. கும்பகோணம் சந்தையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading