அப்பனென்றும் அம்மையென்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாகுணா

Appan Endrum Ammai Endrum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…

ஆண் : அது புத்தன் என்றும் சித்தன் என்றும்…
பித்தன் என்றும் ஆவதென்ன…
சக்கையாக போகும் கரும்பு…
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு…

ஆண் : பந்த பாச சேற்றில்…
வந்து விழுந்த தேகம்…
எந்த கங்கை ஆற்றில்…
இந்த அழுக்கு போகும்…
அப்பனென்றும்…

ஆண் : அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…

—BGM—

ஆண் : குத்தம் குறை ஏதுமற்ற…
ஜீவன் இங்கு யாரடா…
சுத்தம் என்று யாரும் இல்லை…
பாவ மூட்டைதானடா…

ஆண் : சிவனைக் கூட பித்தன் என்று…
பேசுகின்ற ஊரடா…
புத்தி கேட்ட மூடருக்கு என்றும்…
ஞானப் பார்வை ஏதடா…

ஆண் : ஆதி முதல் அந்தம்…
உன் சொந்தம் உன் பந்தம்…
நீ உள்ளவரைதான்…

ஆண் : வந்து வந்து கூடும்…
கூத்தாடும் விட்டோடும்…
ஓர் சந்தை கடை தான்…

ஆண் : இதில் நீ என்ன நான் என்ன…
வந்தாலும் சென்றாலும்…
என்னாச்சு விட்டுத் தள்ளு…
அப்பனென்றும்…

ஆண் : அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…

—BGM—

ஆண் : கையும் காலும் மூக்கும் கொண்டு…
ஆட வந்த காரணம்…
ஆடித்தானே சேத்து வச்ச…
பாவம் யாவும் தீரனும்…

ஆண் : ஆட ஆட பாவம் சேரும்…
ஆடி ஓடும் மானிடா…
ஆட நானும் மாட்டேன் என்று…
ஓடிப்போனதாரடா…

ஆண் : தட்டு கேட்டு ஓடும் தள்ளாடும்…
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு…
கட்டுப்பட கூடும் எப்போதும் நீ போடு…
மெய்ஞான விலங்கு…

ஆண் : மனம் ஆடாமல் வாடாமல்…
மெய்ஞானம் உண்டாக அஞ்ஞானம் அற்று விழும்…
அப்பன் என்றும்…

ஆண் : அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…

ஆண் : அது புத்தன் என்றும் சித்தன் என்றும்…
பித்தன் என்றும் ஆவதென்ன…
சக்கையாக போகும் கரும்பு…
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு…

ஆண் : பந்த பாச சேற்றில் வந்து…
விழுந்த தேகம்…
எந்த கங்கை ஆற்றில்…
இந்த அழுக்கு போகும்…
அப்பனென்றும்…

ஆண் : அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…


Notes : Appan Endrum Ammai Endrum Song Lyrics in Tamil. This Song from Gunaa (1991). Song Lyrics penned by Vaali. அப்பனென்றும் அம்மையென்றும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading