Category Archives: வைகாசி பொறந்தாச்சு

thanni-kudam-yedhuthu-song-lyrics-in-tamil

தண்ணி கொடம் எடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாவைகாசி பொறந்தாச்சு

Thanni Kudam Yedhuthu Song Lyrics in Tamil


BGM

குழு : அன்பே சரணம் அழகே சரணம்…
ஆருயிரே சரணம்…
ககர முதல எழுத்தெல்லாம்…
காதல்தானே பகவான் நமக்கு…

குழு : கற்க கசடற கல்கி குமுதம்…
கற்றப்பின் விற்க பாதி விலைக்கு…
கார்த்திகா கனகா…
ரேகா கௌதமி… அமலா…
ரூபினி ரஞ்சனி…
ரோகினி சித்தாரா…
ஈடு இல்லை உனக்கு…

ஆண் : தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குது… ஹோய்…

BGM

ஆண் : அட தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குது…

ஆண் : தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குது…

ஆண் : அட சந்தன கொளத்து தேனே…
நான் சந்திச்ச அழகு மானே…
மலராத மல்லிகை பூவே…
கொஞ்சம் மனம் இறங்கு…

ஆண் : தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குது… ஹான்…

BGM

குழு : அடி தளுக்கு சுந்தரியே…
நீ எந்திரி எந்திரியே…

BGM

ஆண் : மாராப்பு போட்டு வந்த…
மஞ்ச நிற பூங்குருவி…
பூவாசம் கம கமக்க…
பொங்கி வந்த தேனருவி…

ஆண் : வம்பிழுத்து மாட்டிக்கிட்டு…
வாய்க் கொழுத்த பொம்பள நீ…
வாலத்தான் சுருக்கிக்கிட்டு…
கும்பிடு என் கும்பல நீ…

ஆண் : தென் மதுரை தேனே…
என்னை பாரேன் ஒரு பார்வை…
கண் நெறஞ்ச புருஷன்…
அடி உனக்கும் ஒன்னு தேவை…

ஆண் : தென் மதுரை தேனே…
என்னை பாரேன் ஒரு பார்வை…
கண் நெறஞ்ச புருஷன்…
அடி உனக்கும் ஒன்னு தேவை…

ஆண் : வாடி மாட்டு பொண்ணே…
நீதான் என் வீட்டு பொண்ணே…

ஆண் : தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குது…

ஆண் : அட தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குது…

ஆண் : அட சந்தன கொளத்து தேனே…
நான் சந்திச்ச அழகு மானே…
மலராத மல்லிகை பூவே…
கொஞ்சம் மனம் இறங்கு…

ஆண் : தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குதப்பா…

BGM

ஆண் : வேண்டி வந்த பக்தனை…
நீ வெட்டி வெட்டி முறைக்கணுமா…
வேப்பிலைய அடிச்சித்தான்…
வேகத்தை கொறைக்கணுமா…

ஆண் : பூ போட்டு பாதத்துக்கு…
பூசை ஒன்னு பண்ணட்டுமா…
பூவரசி மனசுக்குள்ளே…
காதல் வலை பின்னட்டுமா…

ஆண் : புத்தியிலே கிறுக்கு…
அடி உனக்கு இன்னும் இருக்கு…
உக்கிரத்த இறக்கு…
உன் முறுக்கு இன்னும் எதுக்கு…

ஆண் : புத்தியிலே கிறுக்கு…
அடி உனக்கு இன்னும் இருக்கு…
உக்கிரத்த இறக்கு…
உன் முறுக்கு இன்னும் எதுக்கு…

ஆண் : வால ஆட்டிபுட்ட…
வகை இல்லாம மாட்டிக்கிட்ட…

ஆண் : தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குது…

ஆண் : தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குது…

ஆண் : அட சந்தன கொளத்து தேனே…
நான் சந்திச்ச அழகு மானே…
மலராத மல்லிகை பூவே…
கொஞ்சம் மனம் இறங்கு…

ஆண் : தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குது… ஆஹ் ஆஹ் ஹா…


Notes : Thanni Kudam Yedhuthu Song Lyrics in Tamil. This Song from Vaigasi Poranthachu (1990). Song Lyrics penned by Kalidasan. தண்ணி கொடம் எடுத்து பாடல் வரிகள்.


ஆத்தா உன் கோவிலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ்.சித்ராதேவாவைகாசி பொறந்தாச்சு

Aatha Un Kovililae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்தா உன் கோவிலிலே…
அலங்கார வாசலிலே…
ஏத்த வந்தோம் மாவிளக்கு…
எங்க கொறைய நீ விலக்கு…

ஆண் : அடி அலங்காரி…
அருள் சுப தேவி…
எங்கள் வாழ்வை காக்கும்…
மாரியம்மாவே…

குழு : மங்கலம் குலுங்கும் எங்கள்…
குங்குமத்து நாயகிக்கு
மஞ்சள் நீர் எடுத்து வந்தோம்…

குழு : மணக்கும் புது மல்லிகப்பூ…
தொடுத்து வந்தோம்…

குழு : தங்கமே உன் பூ மணக்கும்…
அங்கமெல்லாம் பூசிடத்தான்…
சந்தனமும் கொழச்சு வந்தோம்…
தாயே உன் சன்னதியை தேடி வந்தோம்…

ஆண் : அடி அலங்காரி…
அருள் சுப தேவி…
எங்கள் வாழ்வை காக்கும்…
மாலையம்மாவே…

ஆண் : ஆத்தா உன் கோவிலிலே…
அலங்கார வாசலிலே…
ஏத்த வந்தோம் மாவிளக்கு…
எங்க கொறைய நீ விலக்கு…

BGM

பெண் : மனசால நான் நெனச்ச…
மகராசன் வேண்டுமம்மா…
கை ஏந்தி கேட்டு நின்றேன்…
கண் கொண்டு பாருமம்மா…

பெண் : ஆச வச்ச பொண்ணு மனசு…
ஆத்தா உனக்கு தெரியாதா…
ஆள கொல்லும் ஆபத்து…
உன் அன்பால் தாயே விலகாதா…

குழு : உள்ளுக்குள்ளே தேன வச்சு…
நெஞ்சுக்குள்ளே நஞ்ச வச்ச…
வஞ்சகத்தை தடுத்து விடு…
கொடுமைகளை வாளெடுத்து அறுத்து விடு…

குழு : அன்பிருக்கும் உள்ளத்துக்கு…
வந்திருக்கும் துன்பமதை…
அம்மா நீ மாற்றி விடு…
ஆத்தா உன் கண்ணால பார்த்து விடு…

பெண் : அடி அலங்காரி…
அருள் சுப தேவி…
எங்கள் வாழ்வை காக்கும்…
மாலையம்மாவே…

பெண் : ஆத்தா உன் கோவிலிலே…
அலங்கார வாசலிலே…
ஏத்த வந்தோம் மாவிளக்கு…
எங்க கொறைய நீ விலக்கு…

BGM

பெண் : அம்மா உன் கண்ண மறச்சு…
அநியாயம் காணுதம்மா…
அலைபாயும் பிஞ்சு நெஞ்சம்…
இனிமேலும் தாங்காதம்மா…

ஆண் : கண்ணுக்கு இமையாய் இருக்கும்…
கண்மணி வாழணும் புரியாதா…
கண்ணீரில் மாலை கட்டிப் போட்டேன்…
உனக்கு தெரியாதா…

குழு : வெண்கல மணி அடிச்சு…
மங்கல ஒளி கொடுத்து…
தங்கமே வர வேண்டும்…
எங்களுக்கு தஞ்சம் நீ தர வேண்டும்…

குழு : நம்பி வந்த பக்தனுக்கு…
துன்பம் என்றும் இல்லை என்று…
நம்பிக்கையை தர வேண்டும்…
தாயே நீ நல்ல பதில் சொல்ல வேண்டும்…

பெண் : அடி அலங்காரி…
அருள் சுப தேவி…
எங்கள் வாழ்வை காக்கும்…
மாலையம்மாவே…

ஆண் : ஆத்தா உன் கோவிலிலே…
அலங்கார வாசலிலே…
ஏத்த வந்தோம் மாவிளக்கு…
எங்க கொறைய நீ விலக்கு…

பெண் : அடி அலங்காரி…
அருள் சுப தேவி…
எங்கள் வாழ்வை காக்கும்…
மாரியம்மாவே…

ஆண் & பெண் : ஆத்தா உன் கோவிலிலே…
அலங்கார வாசலிலே…
ஏத்த வந்தோம் மாவிளக்கு…
எங்க கொறைய நீ விலக்கு…


Notes : Aatha Un Kovililae Song Lyrics in Tamil. This Song from Vaigasi Poranthachu (1990). Song Lyrics penned by Kalidasan. ஆத்தா உன் கோவிலிலே பாடல் வரிகள்.


சின்ன பொண்ணுதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & கே.எஸ்.சித்ராதேவாவைகாசி பொறந்தாச்சு

Chinna Ponnuthaan Song Lyrics in Tamil


குழு : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது…
சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது…
அம்மா அம்மாடி…
அவ கண்ணுகுள்ளதான் மின்னல் அடிக்குது…
சும்மா சும்மாடி…

BGM

ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது…
அம்மா அம்மாடி…
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது…
சும்மா சும்மாடி…

ஆண் : சாமத்து காத்தும் அடிச்சது…
சாமந்தி பூவும் வெடிச்சது…

பெண் : ஆனந்த வாசம் மணக்குது…
ஆசையில் மனசு கனக்குது…

ஆண் : இளவட்டம் கொடிகட்டும்…
இது நல்ல நேரம்…

பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது…
அம்மா அம்மாடி…
அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது…
சும்மா சும்மாடி…

BGM

ஆண் : ஆலம் இலை மேலிருந்து…
ஆடுகின்ற தென்றலைப் போல்…
நூலிடையில் தேன் எடுத்து…
நூறு கதை நான் சொல்லவா…

ஆண் : ஆலம் இலை மேலிருந்து…
ஆடுகின்ற தென்றலைப் போல்…
நூலிடையில் தேன் எடுத்து…
நூறு கதை நான் சொல்லவா…

பெண் : நீருக்குள் விழுந்து சிறகு நனைந்த…
சிங்கார பூங்குயிலே…
மாதுளம் பூவில் வாசனை தேடும்…
மஞ்சள் இளம் வெயிலே…
என் தேவா… வா…

BGM

ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது…
அம்மா அம்மாடி…
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது…
சும்மா சும்மாடி…

பெண் : சாமத்து காத்தும் அடிச்சது…
சாமந்தி பூவும் வெடிச்சது…

ஆண் : ஆனந்த வாசம் மணக்குது…
ஆசையில் மனசு கனக்குது…

பெண் : இளவட்டம் கொடிகட்டும்…
இது நல்ல நேரம்…

ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது…
அம்மா அம்மாடி…

பெண் : அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது…
சும்மா சும்மாடி…

BGM

பெண் : தாகம் கொண்ட தாமரை பூ…
தேகம் எங்கும் கொதிக்குது…
தாளமிடும் கண்ணு ரெண்டும்…
தந்திதான் அடிக்குது…

பெண் : தாகம் கொண்ட தாமரை பூ…
தேகம் எங்கும் கொதிக்குது…
தாளமிடும் கண்ணு ரெண்டும்…
தந்தி தான் அடிக்குது…

ஆண் : சம்மதம் சொல்லிய…
சந்தன மல்லியை…
கையோடு அள்ளட்டுமா… ஆ…

ஆண் : மங்கையின் காதில்…
மன்மதராக…
மந்திரம் சொல்லட்டுமா…
என் தேவி… ஆஆ…

BGM

பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது…
அம்மா அம்மாடி…
அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது…
சும்மா சும்மாடி…

ஆண் : சாமத்து காத்தும் அடிச்சது…
சாமந்தி பூவும் வெடிச்சது…

பெண் : ஆனந்த வாசம் மணக்குது…
ஆசையில் மனசு கனக்குது…

ஆண் : இளவட்டம் கொடிகட்டும்…
இது நல்ல நேரம்…

பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது…
அம்மா அம்மாடி…

ஆண் : அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது…
சும்மா சும்மாடி…


Notes : Chinna Ponnuthaan Song Lyrics in Tamil. This Song from Vaigasi Poranthachu (1990). Song Lyrics penned by Kalidasan. சின்ன பொண்ணுதான் பாடல் வரிகள்.