Category Archives: கோயில் புறா

கோயில் புறா – Koyil Puraa (1981)

வேதம் நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாகோயில் புறா

Vedham Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…

BGM

ஆண் : கருணை மேவும் பூவிழிப் பார்வையில்…
கவிதை இன்பம் காட்டுகிறாய்…
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்…
கவிதை இன்பம் காட்டுகிறாய்…

ஆண் : இளைய தென்றல் காற்றினிலே…

BGM

ஆண் : இளைய தென்றல் காற்றினிலே…
இனிய சந்தப் பாட்டினிலே…
இளைய தென்றல் காற்றினிலே…
இனிய சந்தப் பாட்டினிலே…
எதிலும் உந்தன் நாதங்களே…
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…

BGM

ஆண் : அண்டம் பகிரண்டம்…
உனை அண்டும் படி வந்தாய்…
அண்டம் பகிரண்டம்…
உனை அண்டும் படி வந்தாய்…

ஆண் : தண்டை ஒலி ஜதி தருமோ…
கமல பாதம் சதிரிடுமோ…
தண்டை ஒலி ஜதி தருமோ…
கமல பாதம் சதிரிடுமோ…

ஆண் : மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே…
மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே…

ஆண் : நெஞ்சம் இது தஞ்சம் என…
உனைத்தினம் நினைத்தது…

BGM

ஆண் : நித்தம் ஒரு புத்தம் புது…
இசைத்தமிழ் வடித்தது…

BGM

ஆண் : ஒருமுறை தரிசனமும் தருக…
இசையில் உனது இதயம் இசையும்…
மனம் குணம் அறிந்தவள்…

BGM

ஆண் : குழலது சரியுது சரியுது…
குறுநகை விரியுது விரியுது…
விழிக்கருணை மழை அதில் நனைய வரும்…
ஒரு மனம் பரவும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…


Notes : Vedham Nee Song Lyrics in Tamil. This Song from Koyil Puraa (1981). Song Lyrics penned by Pulamaipithan. வேதம் நீ பாடல் வரிகள்.


சங்கீதமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாகோயில் புறா

Sangeethamey Song Lyrics in Tamil


BGM

பெண் : சங்கீதமே… சங்கீதமே என் தெய்வமே…
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்…
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்…
ஓடி வந்தேன் உன்னை நான் பாட…

பெண் : சங்கீதமே என் தெய்வமே…

BGM

பெண் : மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்…
மனதினில் ஆயிரம் இன்பம்…
மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்…
மனதினில் ஆயிரம் இன்பம்…

பெண் : பார்த்தது பொய்யாக பழங்கதை என்றாக…
எனக்கின்று ஏனிந்த துன்பம்…
எனக்கின்று ஏனிந்த துன்பம்…

பெண் : அந்த தமிழிசை கேட்டு…
இள நெஞ்சில் எழுந்தது பாட்டு…
அந்த கவிதைகள் எங்கே…
என் ஆசை கனவுகள் எங்கே…

பெண் : அது வருமோ சுகம் தருமோ…
இனி ஒரு முறை உயிரும் துணை வருமோ…
இனி அதுவரை ஆதாரமென நான் தேடியது…
ஆகாததென ஏன் ஆகியது…

BGM

பெண் : நிலவிலும் எனதுடல் அனுதினம் முழுவதும்…
தண்ணீரில் ஆறாது கண்ணீரும் மாறாது…

பெண் : இனிய சங்கீதமே என் தெய்வமே…

BGM

பெண் : ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்…
தவித்தது பெண் மனம் ஒன்று…

BGM

பெண் : ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்…
தவித்தது பெண் மனம் ஒன்று…

BGM

பெண் : நாயனம் காதோடு தரிசனம் கண்ணோடு…
கிடைத்தது நிம்மதி இன்று…
கிடைத்தது நிம்மதி இன்று…

பெண் : வெள்ளம் தமிழிசை வெள்ளம்…
அதில் துள்ளும் உருகிய உள்ளம்…

BGM

பெண் : கல்லும் கனியென ஆகும்…
ஒரு முள்ளும் மலரென மாறும்…
உனை மறவேன் தினம் வருவேன்…
இசை மழையில் நனைவேன்…
கவி புனைவேன் இனி உலகினில்…

பெண் : ஆனந்தலய நாதங்களுடன்…
நீ தந்த இசை பேரின்ப சுகம்…

BGM

பெண் : ஒரு முறை மறுமுறை பெறுவதில் தவறேது…
ஒன்றான உள்ளங்கள் என்றென்றும் சந்திக்க…
அழைக்கும் சங்கீதமே… என் தெய்வமே…

பெண் : நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்…
ஓடி வந்தேன் உன்னை நான் பாட…

பெண் : சங்கீதமே… சங்கீதமே… சங்கீதமே…


Notes : Sangeethamey Song Lyrics in Tamil. This Song from Koyil Puraa (1981). Song Lyrics penned by Pulamaipithan. சங்கீதமே பாடல் வரிகள்.


அமுதே தமிழே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்பி. சுசீலா & உமா ரமணன்இளையராஜாகோயில் புறா

Amuthe Tamizhe Song Lyrics in Tamil


பெண் : சா… சா…
ரீ… ரீ…
கா… கா…
பா… பா…
சரிக… சரிக…

பெண் : சரிசரி கபகரி சரிகா…
சரிசரி கபகரி சரிகா…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா…
சுகம் பல தரும் தமிழ்ப்பா…

பெண் : சுவையோடு கவிதைகள் தா…
சுவையோடு கவிதைகள் தா…

பெண் : தமிழே நாளும் நீ பாடு…
தமிழே நாளும் நீ பாடு…

ஆண் : தமிழே நாளும் நீ பாடு…

பெண் : தமிழே நாளும் நீ பாடு…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

BGM

பெண் : தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்…
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்…

பெண் : தமிழிசையே… தனியிசையே…

பெண் : தரணியிலே… முதலிசையே…

பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்…
அதில் உலகம் மறந்து போகும்…

பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்…
அதில் உலகம் மறந்து போகும்…

பெண் : பூங்குயிலே என்னோடு…
தமிழே நாளும் நீ பாடு…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

BGM

பெண் : பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்…
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்…

பெண் : கலை பலவும்… பயில வரும்…
அறிவு வளம்… பெருமை தரும்…

பெண் : என் கனவும் நினைவும் இசையே…
இசையிருந்தால் மரணமேது…

பெண் : என் கனவும் நினைவும் இசையே…
இசையிருந்தால் மரணமேது…

பெண் : என் மனதில் தேன் பாய…
தமிழே நாளும் நீ பாடு…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா…
தமிழ்ப்பா…

பெண் : சுவையோடு கவிதைகள் தா…
கவிதைகள் தா…

பெண் : தமிழே நாளும் நீ பாடு…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…


Notes : Amuthe Tamizhe Song Lyrics in Tamil. This Song from Koyil PuraA (1981). Song Lyrics penned by Pulamaipithan. அமுதே தமிழே பாடல் வரிகள்.