Category Archives: வெற்றி விழா

Seevi Sinukkeduthu Song Lyrics in Tamil

சீவி சிணுக்கெடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & மலேசியா வாசுதேவன்இளையராஜாவெற்றி விழா

Seevi Sinukkeduthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சீவி சிணுக்கெடுத்து…
பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே…
மாலை எடுத்து வந்து…
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே…

பெண் : சீவி சிணுக்கெடுத்து…
பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே…
மாலை எடுத்து வந்து…
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே…

ஆண் : மாப்பிள்ளை கையாலே மாலைதான் நீ வாங்கு…
பெண் : மன்மதன் போட்டானே மல்லிகை பூ பாலம்தான்…

ஆண் : சீவி சிணுக்கெடுத்து…
பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே…

பெண் : மாலை எடுத்து வந்து…
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே…

BGM

பெண் : தேரில் ஏறித்தான் மாமா மாமா…
தேவலோகம்தான் பார்ப்போம்…

ஆண் : தேடி பார்க்கலாம் வாம்மா வாம்மா…
தேவ ரகசியம் காப்போம்…

பெண் : பூட்டி பூட்டித்தான் பார்த்தேன் பார்த்தேன்
கேட்கவில்லையே மனசு…

ஆண் : ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும்…
சூடு ஏறிடும் வயசு…

பெண் : சொப்பனம் தந்ததொரு தொந்தரவுதான்…
ஆண் : வந்ததடி மன்மதனின் உத்தரவுதான்…

பெண் : கூடினா பிரியாது…
வேறேதும் தெரியாது… ஹோய்…

ஆண் : சீவி சிணுக்கெடுத்து…
பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே…

பெண் : மாலை எடுத்து வந்து…
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே…

BGM

ஆண் : மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ…
தோணலாச்சு எனக்கு…

பெண் : மனசில் உள்ளது ஏதோ ஏதோ…
போட்டுப் பார்க்கிறேன் கணக்கு…

ஆண் : ஹஹான்… தூண்டில் போட்டுத்தான் பூட்டி இழுக்குது…
ஏண்டி நமக்குள்ள வழக்கு…

பெண் : சேர்ந்து படுக்கதான் பேசி முடிச்சதும்…
வெளுத்து போச்சுதான் கிழக்கு…

ஆண் : அத்தனையும் மொத்தத்திலே அள்ளி எடுப்பேன்…
பெண் : அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன்…

ஆண் : ஏறுன்னா எறங்காது…
மனசுதான் கிறங்காது…

பெண் : சீவி சிணுக்கெடுத்து…
பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே…

ஆண் : மாலை எடுத்து வந்து…
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே…

ஆண் : சீவி சிணுக்கெடுத்து…
பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே…

பெண் : மாலை எடுத்து வந்து…
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே…

ஆண் : மாப்பிள்ளை கையாலே மாலைதான் நீ வாங்கு…
பெண் : மன்மதன் போட்டானே மல்லிகை பூ பாலம்தான்…

ஆண் : சீவி சிணுக்கெடுத்து…
பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே…

பெண் : மாலை எடுத்து வந்து…
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே…


Notes : Seevi Sinukkeduthu Song Lyrics in Tamil. This Song from Vetri Vizha (1989). Song Lyrics penned by Gangai Amaran. சீவி சிணுக்கெடுத்து பாடல் வரிகள்.


தத்தோம் தளாங்கு தத்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாவெற்றி விழா

Thathom Talangu Song Lyrics in Tamil


BGM

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
தொட்டும் தொடாமல் தொட்டோம்…
கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பட்டும் படாமல் பட்டோம்…
சிறுதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

ஆண் : தழுவட்டும் தழுவட்டும்…
இளவட்டம் இளவட்டம்…
பரவட்டும் பரவட்டும்…
இசை வெள்ளம் பரவட்டும்…
இமயத்தின் முடிமட்டும்…
இளமைதான் கொடி காட்டும்… ஹோய்…

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
தொட்டும் தொடாமல் தொட்டோம்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பட்டும் படாமல் பட்டோம்…

BGM

ஆண் : இரவில் உன்னோடு நர்த்தனம்தான்…
இடையில் உண்டாகும் சத்தம்…
உறவில் முன்னூறு கீர்த்தனம்தான்…
இதழ்கள் கொண்டாடும் முத்தம்…

பெண் : சுதந்திரம் தினம் தினம்தான்…
நிரம்தரம் சுகம் சுகம்தான்…
நலம் பெறும் மனம் மனம்தான்…
வலம் வரும் நகர்வலம்தான்…

ஆண் : இணையத்தான் இணையத்தான்…
அணையத்தான் அணையத்தான்…

பெண் : ஒரு அத்தான் ஒரு அத்தான்…
உருகத்தான் உருகத்தான்…

ஆண் : திசை எட்டும் இசை எட்டும்…
தாளங்கள் முழங்கட்டும்… ஹோய்…

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
தொட்டும் தொடாமல் தொட்டோம்…
கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பட்டும் படாமல் பட்டோம்…
சிறுதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

ஆண் : தழுவட்டும் தழுவட்டும்…
இளவட்டம் இளவட்டம்…
பரவட்டும் பரவட்டும்…
இசை வெள்ளம் பரவட்டும்…
இமயத்தின் முடிமட்டும்…
இளமைதான் கொடி காட்டும்… ஹோய்…

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
தொட்டும் தொடாமல் தொட்டோம்…
கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பட்டும் படாமல் பட்டோம்…
சிறுதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

BGM

பெண் : கழுவும் தண்ணீரில் நழுவிடுமே…
வலையில் சிக்காத மீன்கள்…
தடைகள் இல்லாமல் தாவிடுமே…
நடைகள் கொண்டாடும் மான்கள்…

ஆண் : சிறையினில் பறவைகள்தான்…
சிறகினை விரித்திடத்தான்…
பிறந்தது துணிச்சலுந்தான்…
பறந்திடும் இருப்பிடம்தான்…

பெண் : இதயத்தில் துணிவைத்தான்…
குடி வைக்கும் குடி வைக்கும்…
ஆண் : எதிரிக்கும் உதிரிக்கும்…
வெடி வைக்கும் வெடி வைக்கும்…

ஆண் & பெண் : திசை எட்டும் கொடி கட்டும்…
தாளங்கள் முழங்கட்டும்… ஹோய்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பெண் : ஹா…
ஆண் : பட்டும் படாமல் பட்டோம்…
பெண் : ஹா…
ஆண் : சிறுதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
ஆண் : ஹா…
பெண் : தொட்டும் தொடாமல் தொட்டோம்…
ஆண் : ஹா…
பெண் : கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்…

ஆண் : தழுவட்டும் தழுவட்டும்…
இளவட்டம் இளவட்டம்…
பரவட்டும் பரவட்டும்…
இசை வெள்ளம் பரவட்டும்…
இமயத்தின் முடிமட்டும்…
இளமைதான் கொடி காட்டும்… ஹோய்…

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
தொட்டும் தொடாமல் தொட்டோம்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பெண் : தத்தா…
ஆண் : பட்டும் படாமல் பட்டோம்…
பெண் : தத்தா…

BGM


Notes : Thathom Talangu Song Lyrics in Tamil. This Song from Vetri Vizha (1989). Song Lyrics penned by Vaali. தத்தோம் தளாங்கு தத்தோம் பாடல் வரிகள்.


மாருகோ மாருகோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாவெற்றி விழா

Marugo Marugo Song Lyrics in Tamil


BGM

பெண் : மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…

BGM

பெண் : மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…

பெண் : காசுகோ காசுகோ…
பூசுகோ பூசுகோ…
மாலையில் ஆடிகோ…
மந்திரம் பாடிக்கோ…

பெண் : மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…
மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…

ஆண் : கண்மணி பொன்மணி…
கொஞ்சு நீ கெஞ்சு நீ…
மாலையில் ஆடு நீ…
மந்திரம் பாடு நீ…

குழு : மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…
மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…

BGM

ஆண் : சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா…
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா…

பெண் : கொம்பா கொம்பா
இது வம்பா வம்பா…
நீ கொம்பேறி மூக்கனப்பா… ஹோய் ஹோய்…

ஆண் : ஏய்… சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா…
உன் சிங்காரம் ஏங்குதம்மா…

பெண் : ஏ… கும்மா கும்மா அடி யம்மா யம்மா…
உன் கும்மாளம் தாங்கிடுமா…

ஆண் : ஆசையாக பேசினால் போதாதம்மோய்…
தாகத்தோடு மோகம் என்றும் போகாதம்மா…

பெண் : ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா…
அச்சத்தோடு நாணம் என்றும் போகாதய்யா…

ஆண் : ஏத்துக்கடி என்ன சேர்த்துக்கடி…
வாலிபம் ஆடுது வெப்பமோ ஏறுது…

குழு : மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…
ஆண் : குழு குழு…

குழு : மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…
பெண் : குழு குழு…

ஆண் : கண்மணி பொன்மணி…
கொஞ்சு நீ கெஞ்சு நீ…

பெண் : மாலையில் ஆடு நீ…
மந்திரம் பாடு நீ…

குழு : மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…

BGM

பெண் : நான் சின்னப் பொண்ணு…
செவ்வாழை கண்ணு…
நீ கல்யாண வேலி கட்டு…

ஆண் : என் செந்தாமரை கைசேரும் வரை…
நான் நின்றேனே தூக்கம் கெட்டு…

பெண் : உன் ஆசை என்ன…
உன் தேவை என்ன…
நீ லேசாக காத கடி…

ஆண் : என் எண்ணங்களை நான் சொல்லாமலே…
நீ இந்நேரம் கண்டு பிடி…

பெண் : கேக்குது கேக்குது ஏதோ ஒன்னு…
பார்த்து பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு…

ஆண் : அட தாக்குது தாக்குது ஊதக்காத்து…
தள்ளி தள்ளி நிக்குற ஆளை பார்த்து…

பெண் : காலம் வரும்…
நல்ல நேரம் வரும்…
அள்ளி நீ சேர்த்துக்கோ…
ஆசைய தீர்த்துக்கோ…

குழு : மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…
ஆண் : ஜிக்கு ஜக்கான்…

குழு : மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…
பெண் : ஜிக்கு ஜக்கான்…

ஆண் : கண்மணி பொன்மணி…
கொஞ்சு நீ கெஞ்சு நீ…

ஆண் & பெண் : மாலையில் ஆடு நீ…
மந்திரம் பாடு நீ…

குழு : மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…
மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…


Notes : Marugo Marugo Song Lyrics in Tamil. This Song from Vetri Vizha (1989). Song Lyrics penned by Vaali. மாருகோ மாருகோ பாடல் வரிகள்.


பூங்காற்று உன் பேர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாவெற்றி விழா

Poongatru Un Per Solla Song Lyrics in Tamil


ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல…
கேட்டேனே இன்று…

பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச…
பார்த்தேனே இன்று…

ஆண் : தீர்த்தக்கரை ஓரத்திலே…
பெண் : தேன் சிட்டுகள் உள்ளத்திலே…

ஆண் : கல்யாண வைபோகம் தான்…
பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச…
பார்த்தேனே இன்று…

BGM

ஆண் : மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு…
மோகப் பண் பாடுதே…
மேலைக் காற்றோடு கை சேர்த்து நாணல்…
காதல் கொண்டாடுதே…

பெண் : ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்…
காலம் இதுவல்லவா…
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்…
நேரம் இது வல்லவா…

ஆண் : ஏதேதோ எண்ணம் தோன்ற…
ஏகாந்தம் இங்கே…

பெண் : நான் காணும் வண்ணம் யாவும்…
நீதானே அன்பே…

ஆண் : வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்…
பெண் : ஆசைகள் ஈடேறக் கூடும்…

ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல…
கேட்டேனே இன்று…

BGM

பெண் : ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன…
ஜீவன் உன்னோடுதான்…
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட…
தேவன் என்னோடுதான்…

ஆண் : நீல வான் கூட நிறம் மாறிப் போகும்…
நேசம் நிறம் மாறுமா…
கால காலங்கள் போனாலும் என்ன…
காதல் தடம் மாறுமா…

பெண் : ஓயாமல் உன்னைக் கொஞ்சும்…
ஊதாப்பூ வண்ணம்…

ஆண் : ராஜாவின் முத்தம் கொள்ளும்…
ரோஜாப்பூ கன்னம்…

பெண் : வாடை தீண்டாத வாழைத் தோட்டம்…
ஆண் : ஆனந்த எல்லைகள் காட்டும்…

ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல…
கேட்டேனே இன்று…

பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச…
பார்த்தேனே இன்று…

ஆண் : தீர்த்தக்கரை ஓரத்திலே…
பெண் : தேன் சிட்டுகள் உள்ளத்திலே…

ஆண் : கல்யாண வைபோகம்தான்…

ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல…
கேட்டேனே இன்று…

BGM


Notes : Poongatru Un Per Solla Song Lyrics in Tamil. This Song from Vetri Vizha (1989). Song Lyrics penned by Vaali. பூங்காற்று உன் பேர் பாடல் வரிகள்.