தத்தோம் தளாங்கு தத்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாவெற்றி விழா

Thathom Talangu Song Lyrics in Tamil


BGM

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
தொட்டும் தொடாமல் தொட்டோம்…
கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பட்டும் படாமல் பட்டோம்…
சிறுதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

ஆண் : தழுவட்டும் தழுவட்டும்…
இளவட்டம் இளவட்டம்…
பரவட்டும் பரவட்டும்…
இசை வெள்ளம் பரவட்டும்…
இமயத்தின் முடிமட்டும்…
இளமைதான் கொடி காட்டும்… ஹோய்…

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
தொட்டும் தொடாமல் தொட்டோம்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பட்டும் படாமல் பட்டோம்…

BGM

ஆண் : இரவில் உன்னோடு நர்த்தனம்தான்…
இடையில் உண்டாகும் சத்தம்…
உறவில் முன்னூறு கீர்த்தனம்தான்…
இதழ்கள் கொண்டாடும் முத்தம்…

பெண் : சுதந்திரம் தினம் தினம்தான்…
நிரம்தரம் சுகம் சுகம்தான்…
நலம் பெறும் மனம் மனம்தான்…
வலம் வரும் நகர்வலம்தான்…

ஆண் : இணையத்தான் இணையத்தான்…
அணையத்தான் அணையத்தான்…

பெண் : ஒரு அத்தான் ஒரு அத்தான்…
உருகத்தான் உருகத்தான்…

ஆண் : திசை எட்டும் இசை எட்டும்…
தாளங்கள் முழங்கட்டும்… ஹோய்…

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
தொட்டும் தொடாமல் தொட்டோம்…
கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பட்டும் படாமல் பட்டோம்…
சிறுதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

ஆண் : தழுவட்டும் தழுவட்டும்…
இளவட்டம் இளவட்டம்…
பரவட்டும் பரவட்டும்…
இசை வெள்ளம் பரவட்டும்…
இமயத்தின் முடிமட்டும்…
இளமைதான் கொடி காட்டும்… ஹோய்…

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
தொட்டும் தொடாமல் தொட்டோம்…
கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பட்டும் படாமல் பட்டோம்…
சிறுதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

BGM

பெண் : கழுவும் தண்ணீரில் நழுவிடுமே…
வலையில் சிக்காத மீன்கள்…
தடைகள் இல்லாமல் தாவிடுமே…
நடைகள் கொண்டாடும் மான்கள்…

ஆண் : சிறையினில் பறவைகள்தான்…
சிறகினை விரித்திடத்தான்…
பிறந்தது துணிச்சலுந்தான்…
பறந்திடும் இருப்பிடம்தான்…

பெண் : இதயத்தில் துணிவைத்தான்…
குடி வைக்கும் குடி வைக்கும்…
ஆண் : எதிரிக்கும் உதிரிக்கும்…
வெடி வைக்கும் வெடி வைக்கும்…

ஆண் & பெண் : திசை எட்டும் கொடி கட்டும்…
தாளங்கள் முழங்கட்டும்… ஹோய்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பெண் : ஹா…
ஆண் : பட்டும் படாமல் பட்டோம்…
பெண் : ஹா…
ஆண் : சிறுதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
ஆண் : ஹா…
பெண் : தொட்டும் தொடாமல் தொட்டோம்…
ஆண் : ஹா…
பெண் : கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்…

ஆண் : தழுவட்டும் தழுவட்டும்…
இளவட்டம் இளவட்டம்…
பரவட்டும் பரவட்டும்…
இசை வெள்ளம் பரவட்டும்…
இமயத்தின் முடிமட்டும்…
இளமைதான் கொடி காட்டும்… ஹோய்…

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
தொட்டும் தொடாமல் தொட்டோம்…

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்…
பெண் : தத்தா…
ஆண் : பட்டும் படாமல் பட்டோம்…
பெண் : தத்தா…

BGM


Notes : Thathom Talangu Song Lyrics in Tamil. This Song from Vetri Vizha (1989). Song Lyrics penned by Vaali. தத்தோம் தளாங்கு தத்தோம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top