காதல் மகராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாதல் பரிசு

Kadhal Maharani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்…
புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்…

ஆண் : முத்துப் போல் சிரித்தாள்…
மொட்டுப் போல் மலர்ந்தாள்…
விழியால் இவள் கணை தொடுத்தாள்…

ஆண் : இந்தக் காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்…
புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்…

—BGM—

ஆண் : பூவை நீ பூ மடல்…
பூ உடல் தேன் கடல்…
தேன் கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன்…

பெண் : மான் விழி ஏங்குது…
மையலும் ஏறுது…
பூங்கொடியை பனி போல் மெதுவாய் தழுவு…

ஆண் : கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்…
கண்கள் மூடித் தூங்கும் நேரம்…

பெண் : இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்…
உள்ளம் போகும் ஊர்வலம்…

ஆண் : காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்…

—BGM—

பெண் : பஞ்சணை கூடத்தில் பால் நிலா காயுதே…
நான் எனையே மறந்தேன் கனவில் மிதந்தேன்…

ஆண் : உன் முக தீபத்தில் ஓவியம் மின்னுதே…
உன் அழகால் இரவைப் பகலாய் அறிந்தேன்…

பெண் : மண்ணில் உள்ள இன்பம் யாவும்…
இங்கே இன்று நாமும் காண்போம்…

ஆண் : அன்பே அந்த தேவலோக…
சொர்க்கம் இங்கே தேடுவோம்…

பெண் : காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்…
புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தான்…

பெண் : முத்துப் போல் எடுத்தான்…
தொட்டுத்தான் அணைத்தான்…
விழியால் இவன் கணை தொடுத்தான்…

பெண் : இந்தக் காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்…
ஆண் : புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்…


Notes : Kadhal Maharani Song Lyrics in Tamil. This Song from Kadhal Parisu (1987). Song Lyrics penned by Muthulingam. காதல் மகராணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading