பூங்காற்று உன் பேர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாவெற்றி விழா

Poongatru Un Per Solla Song Lyrics in Tamil


ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல…
கேட்டேனே இன்று…

பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச…
பார்த்தேனே இன்று…

ஆண் : தீர்த்தக்கரை ஓரத்திலே…
பெண் : தேன் சிட்டுகள் உள்ளத்திலே…

ஆண் : கல்யாண வைபோகம் தான்…
பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச…
பார்த்தேனே இன்று…

—BGM—

ஆண் : மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு…
மோகப் பண் பாடுதே…
மேலைக் காற்றோடு கை சேர்த்து நாணல்…
காதல் கொண்டாடுதே…

பெண் : ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்…
காலம் இதுவல்லவா…
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்…
நேரம் இது வல்லவா…

ஆண் : ஏதேதோ எண்ணம் தோன்ற…
ஏகாந்தம் இங்கே…

பெண் : நான் காணும் வண்ணம் யாவும்…
நீதானே அன்பே…

ஆண் : வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்…
பெண் : ஆசைகள் ஈடேறக் கூடும்…

ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல…
கேட்டேனே இன்று…

—BGM—

பெண் : ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன…
ஜீவன் உன்னோடுதான்…
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட…
தேவன் என்னோடுதான்…

ஆண் : நீல வான் கூட நிறம் மாறிப் போகும்…
நேசம் நிறம் மாறுமா…
கால காலங்கள் போனாலும் என்ன…
காதல் தடம் மாறுமா…

பெண் : ஓயாமல் உன்னைக் கொஞ்சும்…
ஊதாப்பூ வண்ணம்…

ஆண் : ராஜாவின் முத்தம் கொள்ளும்…
ரோஜாப்பூ கன்னம்…

பெண் : வாடை தீண்டாத வாழைத் தோட்டம்…
ஆண் : ஆனந்த எல்லைகள் காட்டும்…

ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல…
கேட்டேனே இன்று…

பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச…
பார்த்தேனே இன்று…

ஆண் : தீர்த்தக்கரை ஓரத்திலே…
பெண் : தேன் சிட்டுகள் உள்ளத்திலே…

ஆண் : கல்யாண வைபோகம்தான்…

ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல…
கேட்டேனே இன்று…

—BGM—


Notes : Poongatru Un Per Solla Song Lyrics in Tamil. This Song from Vetri Vizha (1989). Song Lyrics penned by Vaali. பூங்காற்று உன் பேர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading