எங்கே மணக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கே. சோமுகே. வீரமணிவீரமணி & சோமுஐயப்பன் பாடல்கள்

Engey Manakkuthu Song Lyrics in Tamil


ஆண் : சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா…
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா…

ஆண் : சாமியே ஐயப்போ…
சாமியே ஐயப்போ…
சாமியே ஐயப்போ…
சாமியே சரணம் ஐயப்பா…

—BGM—

ஆண் : எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது…
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது…
எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது…
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது…

ஆண் : என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது…
இன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது…

ஆண் : எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது…
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது…

—BGM—

ஆண் : எங்கே மணக்குது நெய்யும் எங்கே மணக்குது…
வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது…
திருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குது…

ஆண் : ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது…
ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது…
ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது…

ஆண் : எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது…
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது…

—BGM—

ஆண் : பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா பக்தி பிறக்குது…
அந்தப்பனிமலையில் ஏறிடவே சக்தி பிறக்குது…
பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா பக்தி பிறக்குது…
அந்தப்பனிமலையில் ஏறிடவே சக்தி பிறக்குது…

ஆண் : பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது…
பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது…
பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குது…

ஆண் : எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது…
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது…

ஆண் : சாமி திந்தக்க தோம் தோம்…
குழு : ஐயப்ப திந்தக்க தோம் தோம்…
ஆண் : சாமி திந்தக்க தோம் தோம்…
குழு : ஐயப்ப திந்தக்க தோம் தோம்…

—BGM—

ஆண் : பேட்டைத் துள்ளி ஆடும்போது மனமும் துள்ளுது…
ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது…
பேட்டைத் துள்ளி ஆடும்போது மனமும் துள்ளுது…
ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது…

ஆண் : காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது…
ஸ்வாமியே சரணம் ஐயப்பா…

ஆண் : காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது…
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது…
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது…

ஆண் : எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது…
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது…

—BGM—

ஆண் : பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்…
வேங்கையின் மேல் ஏறிவந்து வரமும் கொடுக்கிறான்…
பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்…
வேங்கையின் மேல் ஏறிவந்து வரமும் கொடுக்கிறான்…

ஆண் : நோன்பிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான்…
நோன்பிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான்…
ஓங்கார நாதத்திலே எழுந்து வருகிறான்…

ஆண் : எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது…
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது…
எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது…
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது…

{ ஆண் : ஸ்வாமி ஐயப்பா…
சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா…
ஸ்வாமி ஐயப்பா… } * (2)

ஆண் : ஸ்வாமி ஐயப்பா…
ஸ்வாமி ஐயப்பா…
ஸ்வாமி ஐயப்பா…
ஸ்வாமி ஐயப்பா…


Notes : Engey Manakkuthu Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by K. Somu. எங்கே மணக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading