Category Archives: திருவிளையாடல்

திருவிளையாடல் – Thiruvilayadal (1965)

இசை தமிழ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.ஆர். மகாலிங்கம்கே.வி. மகாதேவன்திருவிளையாடல்

Isai Tamizh Nee Seitha Song Lyrics in Tamil


ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை…
இறைவா… ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை…
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை…
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…

BGM

ஆண் : வசை வருமே பாண்டி நாட்டினிலே…
இறைவா… ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : வசை வருமே பாண்டி நாட்டினிலே…
குழலி மணவாளனே உனது வீட்டினிலே…

BGM

ஆண் : வசை வருமே பாண்டி நாட்டினிலே…
குழலி மணவாளனே உனது வீட்டினிலே…

ஆண் : உயிர் மயக்கம் நாத பாட்டினிலே…
உயிர் மயக்கம் நாத பாட்டினிலே…
வெற்றி ஒருவனுக்கோ… ஓஓ…
மதுரை தமிழனுக்கோ… ஓஓ…
வெற்றி ஒருவனுக்கோ… ஓஓ…
மதுரை தமிழனுக்கோ… ஓஓ…

ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…

BGM

ஆண் : சிவ லிங்கம் சாக்ஷி சொன்ன கதையும் பொய்யோ…
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ…
சிவ லிங்கம் சாக்ஷி சொன்ன கதையும் பொய்யோ…
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ…

ஆண் : பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை…
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை…
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன…
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன…

ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…

BGM

ஆண் : தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ…
அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ…

BGM

ஆண் : வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற தலைவா…
உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை…
உனக்கின்றி எனக்கில்லை… உனக்கின்றி எனக்கில்லை…


Notes : Isai Tamizh Nee Seitha Song Lyrics in Tamil. This Song from Thiruvilayadal (1965). Song Lyrics penned by Kannadasan. இசை தமிழ் பாடல் வரிகள்.


ஞான பழத்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.பி. சுந்தராம்பாள்கே.வி. மகாதேவன்திருவிளையாடல்

Gnana Pazhathai Song Lyrics in Tamil


பெண் : ஞான பழத்தை பிழிந்து ரசம் அன்றினோடு…
நான் உண்ணவும் கொடுத்த…

பெண் : முருகா நீ பிராணவ ஞான பழத்தை பிழிந்து…
ரசம் அன்றினோடு நான் உண்ணவும்…
கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம்…
இக்கனியை நாம் ஈவது என்று நாணிதான்…

பெண் : முருகா நீ பிராணவ ஞான பழத்தை பிழிந்து…
ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த…
நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை…
நாம் ஈவது என்று நாணிதான் அப்பன்னிதனைய தரவில்லை…

பெண் : முருகா நீ பிராணவ ஞான பழத்தை பிழிந்து…
ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ…
உனக்கென்ன விதம் இக்கனியை நாம் ஈவது என்று…
நாணிதான் அப்பன்னிதனைய தரவில்லை…

பெண் : அப்பன்னிதனைய தரவில்லை ஆதலால்…
முருகா உனக்கு சாறு ஒரு பிழை இல்லையே…

பெண் : பிராணவா ஞான பழத்தை பிழிந்து…
ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ…
உனக்கென்ன விதம் இக்கனியை நாம் ஈவது…
நாணிதான் அப்பன்னிதனைய தரவில்லை ஆதலால்…
முருகா உனக்கு சாறு ஒரு பிழை இல்லையே…
முருகா உனக்கு சாறு ஒரு பிழை இல்லையே…

பெண் : வடிவேலுடன் சக்தி மயில் ஏறிடும் ஷண்முகா…
சக்தி வடிவேல் வடிவேல் வேலே ஆ வேல்…

பெண் : சக்தி வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் முருகா…
உனக்கு குறை உள்ளதோ…
வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் ஷண்முகா…
உனக்கு குறை உள்ளதோ சக்தி…

பெண் : வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும்…
முருகா உனக்கு குறை உள்ளதோ… ஓ ஹோ…
முருகா உனக்கு குறையும் உள்ளதோ…

பெண் : வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் ஷண்முகா…
உனக்கு குறை உள்ளதோ… ஓ…
சக்தி வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் ஷண்முகா…
உனக்கு குறை உள்ளதோ… ஓஹோ…
முருகா உனக்கு குறையும் உள்ளதோ…

பெண் : ஏனிப்படி கோவணத்துடன் தண்டு கொண்டு…
இங்குற்றோர் ஆண்டி ஆனாய்…
முருகா நீ ஏன் இப்படி கோவணத்துடன் தண்டு கொண்டு…
இங்குற்றோர் ஆண்டி ஆனாய்…

பெண் : எமது வினையை பொடிபடவும் அள்ளவும்…
வந்து நீ எப்படி இங்கு இருக்கலாம்…
என் ஆசான் அப்பன் அன்னையாம் என்னவும் எண்ணினேன்…
தருமையரு பழனி மலையில்…
சங்கரன் குடி கொண்ட சங்கரன் கும்பிடும் என் தண்டபாணி…
தண்டபாணி தண்டபாணி தண்டபாணி தெய்வமே…


Notes : Gnana Pazhathai Song Lyrics in Tamil. This Song from Thiruvilayadal (1965). Song Lyrics penned by Kannadasan. ஞான பழத்தை பாடல் வரிகள்.


பாட்டும் நானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்திருவிளையாடல்

Paattum Naane Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே…

BGM

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…
பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே… ஏஏ…

BGM

ஆண் : கூத்தும் இசையும் கூத்தின் முறையும்…
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ…
கூத்தும் இசையும் கூத்தின் முறையும்…
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ…

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…
பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே… ஏஏ…

BGM

ஆண் : அசையும் பொருளில் இசையும் நானே…
அசையும் பொருளில் இசையும் நானே…
ஆடும் கலையின் நாயகன் நானே…

ஆண் : அசையும் பொருளில் இசையும் நானே…
ஆடும் கலையின் நாயகன் நானே…
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே…
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே…
என் இசை நின்றால் அடங்கும் உலகே… ஏஏ…

ஆண் : நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே…

BGM

ஆண் : நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே…
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா…
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே…
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா…

ஆண் : ஆலவாயனொடு ஆடவந்ததொரு…
பாடும்வாயை இனி மூடவந்ததொரு…

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…
பாட்டும் நானே பாவமும் நானே… ஏஏ…

BGM

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே… ஏஏ…


Notes : Paattum Naane Song Lyrics in Tamil. This Song from Thiruvilayadal (1965). Song Lyrics penned by Kannadasan. பாட்டும் நானே பாடல் வரிகள்.


பழம் நீயப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.பி. சுந்தராம்பாள்கே.வி. மகாதேவன்திருவிளையாடல்

Pazham Neeyappa Song Lyrics in Tamil


பெண் : பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா…
தமிழ் ஞானப்பழம் நீயப்பா…
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா…
தமிழ் ஞானப்பழம் நீயப்பா…

பெண் : சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி…
புலவோர்க்குப் பொருள் கூறும்…
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா…
தமிழ் ஞானப் பழம் நீயப்பா…

BGM

பெண் : கண்ணொன்றில் கனலாய் வந்தாய்…
நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்…
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்…
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்…

பெண் : கார்த்திகைப் பெண்பால் உண்டாய்…
திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்…
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்த்த…
தமிழ் ஞானப் பழம் நீயப்பா…

BGM

பெண் : ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு…
உற்றார் பெற்றாரும் உண்டு…
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு…
உற்றார் பெற்றாரும் உண்டு…

பெண் : நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்…
நீ வாழ இடமும் உண்டு…
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்…
நீ வாழ இடமும் உண்டு…

பெண் : தாயுண்டு மனம் உண்டு…
தாயுண்டு மனம் உண்டு…
அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு…
உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின்…
தமிழுக்கு உரிமை உண்டு…

BGM

பெண் : ஆறுவது சினம் கூறுவது தமிழ்…
அறியாத சிறுவனா நீ…
ஆறுவது சினம் கூறுவது தமிழ்…
அறியாத சிறுவனா நீ…

பெண் : மாறுவது மனம் சேருவது இனம்…
தெரியாத முருகனா நீ…
மாறுவது மனம் சேருவது இனம்…
தெரியாத முருகனா நீ…

பெண் : ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு…
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு…
இன்முகம் காட்டவா நீ…

பெண் : ஏற்றுக்கொள்வாய் கூட்டிச் செல்வேன்…
என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ…


Notes : Pazham Neeyappa Song Lyrics in Tamil. This Song from Thiruvilayadal (1965). Song Lyrics penned by Kannadasan. பழம் நீயப்பா பாடல் வரிகள்.