பழம் நீயப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.பி. சுந்தராம்பாள்கே.வி. மகாதேவன்திருவிளையாடல்

Pazham Neeyappa Song Lyrics in Tamil


பெண் : பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா…
தமிழ் ஞானப்பழம் நீயப்பா…
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா…
தமிழ் ஞானப்பழம் நீயப்பா…

பெண் : சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி…
புலவோர்க்குப் பொருள் கூறும்…
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா…
தமிழ் ஞானப் பழம் நீயப்பா…

BGM

பெண் : கண்ணொன்றில் கனலாய் வந்தாய்…
நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்…
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்…
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கார்த்திகைப் பெண்பால் உண்டாய்…
திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்…
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்த்த…
தமிழ் ஞானப் பழம் நீயப்பா…

BGM

பெண் : ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு…
உற்றார் பெற்றாரும் உண்டு…
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு…
உற்றார் பெற்றாரும் உண்டு…

பெண் : நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்…
நீ வாழ இடமும் உண்டு…
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்…
நீ வாழ இடமும் உண்டு…

பெண் : தாயுண்டு மனம் உண்டு…
தாயுண்டு மனம் உண்டு…
அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு…
உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின்…
தமிழுக்கு உரிமை உண்டு…

BGM

பெண் : ஆறுவது சினம் கூறுவது தமிழ்…
அறியாத சிறுவனா நீ…
ஆறுவது சினம் கூறுவது தமிழ்…
அறியாத சிறுவனா நீ…

பெண் : மாறுவது மனம் சேருவது இனம்…
தெரியாத முருகனா நீ…
மாறுவது மனம் சேருவது இனம்…
தெரியாத முருகனா நீ…

பெண் : ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு…
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு…
இன்முகம் காட்டவா நீ…

பெண் : ஏற்றுக்கொள்வாய் கூட்டிச் செல்வேன்…
என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ…


Notes : Pazham Neeyappa Song Lyrics in Tamil. This Song from Thiruvilayadal (1965). Song Lyrics penned by Kannadasan. பழம் நீயப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading