நூறு வருஷம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாபணக்காரன்

Nooru Varusham Song Lyrics in Tamil


BGM

ஆண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்…
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்…
காலம் முழுக்க சிந்து பாடனும்…

ஆண் : ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில…
பொண்ணு புள்ள நிக்கையில…
கண்ணுபடும் மொத்தத்தில…
கட்டழக அம்மாடி என்ன சொல்ல…

ஆண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்…
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்…
காலம் முழுக்க சிந்து பாடனும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு…
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு…
ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம்…
தாவி அணைச்சுக தாங்காது பாரம்…

ஆண் : இவரு ஏழு அடி நடக்கும் ஏணி அடி…
நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு…
மனைவி குள்ளமணி உயரம் மூணு அடி…
இரண்டும் இணைஞ்சிருந்தா கேலி பண்ணும் ஊரு…

ஆண் : ரெட்ட மாட்டு வண்டி வரும்போது…
நெட்ட குட்ட என்றும் இணையாது…
இந்த ஒட்டகந்தான் கட்டிக்கிட…
குட்ட வாத்த புடிச்சான்…

ஆண் : நூறு வருஷம்… ஹே ஹே ஹே…
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்…

ஆண் : ஹே… ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில…
பொண்ணு புள்ள நிக்கையில…
கண்ணுபடும் மொத்தத்தில…
கட்டழக அம்மாடி என்ன சொல்ல…

ஆண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்… ஹே…

ஆண் : புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும்…
பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்…
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு…
இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு…

ஆண் : மொதலில் யோசிக்கணும் பிறகு நேசிக்கணும்…
மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு…
ஒனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி…
இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு…

ஆண் : சொத்து வீடு வாசல் இருந்தாலும்… ஹே…
சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்…
அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா…
கல்யாணம் தான் கசக்கும்…

ஆண் : நூறு வருஷம்… ஹே ஹே ஹே…
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்…
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்…
காலம் முழுக்க சிந்து பாடனும்…

ஆண் : ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில…
பொண்ணு புள்ள நிக்கையில…
கண்ணுபடும் மொத்தத்தில…
கட்டழக அம்மாடி என்ன சொல்ல…

ஆண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்…
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்…
காலம் முழுக்க சிந்து பாடனும்…


Notes : Nooru Varusham Song Lyrics in Tamil. This Song from Pankkaran (1990). Song Lyrics penned by Vaali. நூறு வருஷம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading