Category Archives: சிவன் பாடல்கள்

சிவன் பாடல்கள்

Shivan Devotional Song Lyrics in Tamil

குரு கவசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
செங்கதிர்வாணன்அமிர்தாசிவபுராணம் டி.வி. ரமணிசிவன் பாடல்கள்

Guru Kavasam Song Lyrics in Tamil


BGM

பெண் : தென் திசை நோக்கிய தெய்வம் நீயே…
தென்னாடுடைய சிவனும் நீயே…
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே…
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே…

பெண் : தென் திசை நோக்கிய தெய்வம் நீயே…
தென்னாடுடைய சிவனும் நீயே…
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே…
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே…

பெண் : சந்திரன் தலையில் சூடிய குருவே…
சாந்த சொரூபம் உந்தன் வடிவே…
நன்மைகள் பலவும் நாளும் செய்யும்…
நல்லோன் நீயே நலம் தருவாயே…

பெண் : புன்னகை தவழும் பொன்னன் நீயே…
புலித்தோல் இடையில் அணிந்தவன் நீயே…
கண்ணிமை போலெ காப்பவன் நீயே…
கை தொழுதோமே குருவே சரணம்…

பெண் : உன்னடி பணிந்தால் உயர்வுகள் சேரும்…
ஊழ்வினை துன்பம் துயரம் தீரும்…
எண்ணில் அடங்கா இன்பங்கள் கூடும்…
ஈரேழ் உலகம் உன் புகழ் பாடும்…

BGM

பெண் : சிவனுருவான குருபகவானே…
ப்ரகஸ்பதியென்னும் பெயருடையோனே
புவனம் காக்கும் புண்ணியன் நீயே…
புகழும் நிதியும் தருபவன் நீயே…

பெண் : சிவனுருவான குருபகவானே…
ப்ரகஸ்பதியென்னும் பெயருடையோனே
புவனம் காக்கும் புண்ணியன் நீயே…
புகழும் நிதியும் தருபவன் நீயே…

பெண் : தாராதேவி சங்கினி என்று…
தேவியர் இருவரை மணந்தவன் நீயே…
மாறா கருணை கொண்டவன் நீயே…
மஞ்சளில் ஆடை தரித்தவன் நீயே…

பெண் : தனுசு மீனம் ராசிகள் இரண்டின்…
அதிபதி நீயே அருள்புரிவோனே…
கனவிலும் நினைவிலும் உன்னடி பணிந்து…
கடலென செல்வம் அடைந்திடுவோமே…

பெண் : முல்லை மலரால் உன்னை வணங்கி…
முந்தை வினைகளின் வேரருப்போமே…
இல்லையென்று சொல்லாமல் நீயும்…
எங்களுக்கருளும் ஈசனும் நீயே…

BGM

பெண் : வியாழன் தோறும் விரதம் இருந்து…
ஆலயம் வந்து குரு உனை பணிவோம்…
தியானநிலையில் இருக்கும் உந்தன்…
திருவடி வணங்கி பெருமைகள் அடைவோம்…

பெண் : வியாழன் தோறும் விரதம் இருந்து…
ஆலயம் வந்து குரு உனை பணிவோம்…
தியானநிலையில் இருக்கும் உந்தன்…
திருவடி வணங்கி பெருமைகள் அடைவோம்…

பெண் : திருமணம் நிகழ திருவருள் புரிவாய்…
புத்திர பாக்கியம் இனிதே தருவாய்…
வருக வருக குருவே வருக…
வழிபடுவோம் நலம்பல தருக…

பெண் : சாத்விக குணத்தின் பூர்வீகம் நீயே…
சரணடைந்தோர்க்கு காவல் நீயே…
போற்றிட வந்தோம் உன் திருவடியே…
புரிவாய் புரியவாய் கருணை குருவே…

பெண் : தேவர்கள் வணங்கும் குருவும் நீயே…
இந்திரலோக மந்திரி நீயே…
பாவங்கள் போக்கும் பகவான் நீயே…
பக்தரை காக்கும் ஈசனும் நீயே…

பெண் : கருணை உள்ளம் கொண்டவன் நீயே…
மங்களம் அருளும் கோலும் நீயே…
வருவோம் உந்தன் சன்னதி நாங்கள்…
வாழ்வினில் பூக்கும் வளமை பூக்கள்…

பெண் : இனிப்பை விரும்பி ஏற்பவன் நீயே…
பஞ்சபூதத்தில் வானம் நீயே…
அழிவில்லாத ஆண்டவன் நீயே…
அடைக்களமானோம் உன் திருவடியே…

BGM

பெண் : அன்பரை காக்கும் அழகிய இறைவா…
ஆற்றல் பதவி அனைத்தும் தருவாய்…
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே…
துணைவரவேண்டும் நிழலென நீயே…

பெண் : அன்பரை காக்கும் அழகிய இறைவா…
ஆற்றல் பதவி அனைத்தும் தருவாய்…
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே…
துணைவரவேண்டும் நிழலென நீயே…

பெண் : தோஷம் உள்ளவர் உன்னடி பணிந்தால்…
சேமம் பெருகி சிறப்புடன் வாழ்வார்…
வாரம்தோறும் வழிபடும்போது…
நேரிடும் இன்னல் நெருங்குவதேது…

பெண் : அரச மரத்தை வளம் வரும் வேளை…
அல்லல் நீங்கும் அவதிகள் தீரும்…
கொண்டைக் கடலை உனக்கென படைத்து…
தானம் கொடுத்தால் தோஷம் நீங்கும்…

பெண் : பாலும் பழமும் பஞ்சாமிர்தமும்…
தயிரும் இளநீர் விபூதியாலும்…
பகவான் உனக்கு அபிஷேகம் செய்தால்…
எல்லா இடரும் நொடியில் விலகும்…

BGM

பெண் : பக்தரை உந்தன் பாதம் காக்க…
பணிந்தோம் உன்னை குருவே காக்க…
தக்ஷிணாமூர்த்தி எங்களை காக்க…
திருவடி தொழுதோம் என்றும் காக்க…

பெண் : பக்தரை உந்தன் பாதம் காக்க…
பணிந்தோம் உன்னை குருவே காக்க…
தக்ஷிணாமூர்த்தி எங்களை காக்க…
திருவடி தொழுதோம் என்றும் காக்க…

பெண் : காக்க காக்க கயிலாயன் காக்க…
கருணாமூர்த்தி கனிந்தே காக்க…
தீர்க்க தீர்க்க பாவம் தீர்க்க…
திருத்தலம் வந்தோம் குரு உனை பார்க்க…

பெண் : இமைகள் இரண்டை இமையோன் காக்க…
இதயம் தன்னை ஈஸ்வரன் காக்க…
தசையுடன் எலும்பை தயவுடன் காக்க…
தாழ்பணிந்தோமே குருவே காக்க…

பெண் : இருள்தனை அகற்றும் ஒளியென காக்க…
இரு கைகால்களை இறையோன் காக்க…
உருவம் முழுதும் உயர்ந்தோன் காக்க…
உள்ளே உறையும் குருவே காக்க…

BGM

பெண் : பரிவுடன் உந்தன் பார்வையில் காக்க…
பழியில் இருந்து பகவான் காக்க…
செறிவுடை தெய்வம் சிறப்புடன் காக்க…
சீலமாய் வாழ குருவே காக்க…

பெண் : பிணிகள் இன்றி பெரியோன் காக்க…
பிழைகள் பொறுத்து ஆசான் காக்க…
இனிப்பினை விரும்பும் ஈசன் காக்க…
இணையில்லாத குருவே காக்க…

பெண் : விருப்பும் வெறுப்பும் அண்டாது காக்க
விண்ணும் மண்ணும் செழிப்புற காக்க…
திருப்பம் வழங்கும் திருவே காக்க…
திசைகள் எட்டும் குருவே காக்க…

பெண் : தனித்தனியாக உறுப்புகள் யாவும்…
தடைகள் இன்றி இயங்கிட காக்க…
நினைத்தது நடக்க நிர்மலன் காக்க…
நெஞ்சினில் வாழும் குருவே காக்க…

BGM

பெண் : காக்கும் எங்கள் குருவே வாழ்க…
கயிலைமலையோன் சிவனே வாழ்க…
பார்க்கும் விழிகளில் பரமன் வாழ்க…
பரிவுடன் அருளும் ஈசன் வாழ்க…

பெண் : தீராத பிணிகள் தீர்ப்பவன் வாழ்க…
தென்திசை பார்க்கும் குருவே வாழ்க…
போராடும் வாழ்வை தடுப்போன் வாழ்க…
பொன்னிறத்தோனே தேவா வாழ்க…

பெண் : பூக்கும் மலரின் பொழுதுகள் வாழ்க…
புதுப்புனலாக கருணை வாழ்க…
யார்க்கும் உதவும் இறைவன் வாழ்க…
யாவரும் வணங்கும் குருவே வாழ்க…

பெண் : ருத்ராட்ச மாலை தரித்தவன் வாழ்க…
பற்றோடு நினைக்கும் அடியவர் வாழ்க…
வரும்வினை போக்கும் குருவே வாழ்க…

BGM

பெண் : ஆலயம் தோறும் அமர்ந்தாய் போற்றி…
அடியவர் உள்ளம் அறிவாய் போற்றி…
போதனைசாலையில் இருப்பாய் போற்றி…
புண்ணியவடிவே குருவே போற்றி…

பெண் : ஆடைகள் விற்கும் இடங்களிலெல்லாம்…
அய்யா நீயும் வாசம் செய்வாய்…
மருத்துவமனையில் வங்கியில் நீயும்…
மகிழ்வுடன் இருந்து எங்களை காப்பாய்…

பெண் : மனிதரின் உடம்பில் ஒன்பது துளைகள்…
ஒவ்வொருத்துளையும் கோல்வெனவாகும்…
கண்கள் இரண்டும் சூரியன் சந்திரன்…
காதுகள் இரண்டும் செவ்வாய் புதனாம்…

பெண் : மூக்கின் துளைகள் சுக்கிரன் சனியென…
முன்னோர் வகுத்து முறைசெய்தாரே…
வாயில் உன்னை வைத்ததனாலே…
வளமிகு வார்த்தைகள் வழங்கிடு நீயே…

பெண் : முன்வழித் துளையில் ராகு இருக்க…
பின்வழித் துளையில் கேது இருக்க…
அங்கம் முழுதும் நவகோலாக…
எங்களை மண்ணில் அடைத்தவன் நீயே…

BGM

பெண் : தலங்கள் தோறும் விதவிதமான…
கோலம் தாங்கி தரிசனம் தருவாய்…
நலம்பல வேண்டி வருவோர்க்கெல்லாம்…
நயமுடனே நீயும் நல்லருள் புரிவாய்…

பெண் : வைத்தீஸ்வரனார் கோவிலில் நீயும்…
மேற்கினில் நோக்கி மேன்மைகள் தருவாய்…
கஞ்சனூரிலே கீழ்த்திசை பார்த்து…
கைத்தொழுவோரை காத்திடுவாயே…

பெண் : திருவொற்றியூரில் வடதிசை பார்த்து…
திருவருள் நீயும் புரிகின்றாயே…
திருநாவலூரில் நின்ற நிலையிலே…
தரிசனம் தந்து அருள்கின்றாயே…

பெண் : காஞ்சியில் நீயும் வீணை மீட்டும்…
காட்சியை தந்து கவர்ந்திடுவாயே…
ஆந்திர மாநிலம் அனந்தப்பூரிலே…
ஐயப்பன் போலே அமர்திருப்பாயே…

BGM

பெண் : சரணம் சரணம் குருவே சரணம்…
கவசம் போலே காப்பாய் சரணம்…
அருள் மழை நீயே ஐயா சரணம்…
அபயம் அபயம் தருவாய் சரணம்…

BGM


Notes : Guru Kavasam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Senkathirvanan. குரு கவசம் பாடல் வரிகள்.


குரு ஸ்தோத்ரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஜெயா வித்யாசாகர்Unknownசிவன் பாடல்கள்

Guru Stotram Song Lyrics in Tamil


BGM

பெண் : அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம்…
தத்பதம் தர்ஷிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : அஜ்ஞானதிமிரான்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜனஷலாகயா…
சக்ஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணுஹ குருர்தேவோ மஹேஷ்வரஹ…
குருரேவ பரம்ப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : ஸ்தாவரம் ஜம்கமம் வ்யாப்தம் யத்கிம்சித்ஸசராசரம்…
தத்பதம் தர்ஷிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : சின்மயம் வ்யாபியத்ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம்…
தத்பதம் தர்ஷிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : த்ஸர்வஷ்ருதிஷிரோரத்னவிராஜித பதாம்புஜஹ…
வேதான்தாம்புஜஸூர்யோயஹ தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : சைதன்யஹ ஷாஷ்வதஹஷான்தோ வ்யோமாதீதோ னிரம்ஜனஹ…
பின்துனாத கலாதீதஹ தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : ஜ்ஞானஷக்திஸமாரூடஹ தத்த்வமாலாவிபூஷிதஹ…
புக்திமுக்திப்ரதாதா சதஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : அனேகஜன்மஸம்ப்ராப்த கர்மபன்தவிதாஹினே…
ஆத்மஜ்ஞானப்ரதானேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : ஷோஷணம் பவஸின்தோஷ்ச ஜ்ஞாபணம் ஸாரஸம்பதஹ…
குரோஹ பாதோதகம் ஸம்யக் தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : நகுரோரதிகம் தத்த்வம் நகுரோரதிகம் தபஹ…
தத்த்வஜ்ஞானாத்பரம் னாஸ்தி தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : மன்னாதஹ ஶ்ரீஜகன்னாதஹ மத்குருஹ ஶ்ரீஜகத்குருஹ…
மதாத்மா ஸர்வபூதாத்மா தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : குருராதிரனாதிஷ்ச குருஹ பரமதைவதம்…
குரோஹ பரதரம் னாஸ்தி தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : த்வமேவ மாதா சபிதா த்வமேவ…
த்வமேவ பன்துஷ்ச ஸகா த்வமேவ…

பெண் : த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ…
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ…
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ…
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ…


Notes : Guru Stotram Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்.


உண்ணாமுலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
திருஞானசம்பந்தர்கீர்த்தனா வெங்கடேசன்Unknownசிவன் பாடல்கள்

Unnamulai Umayaludan Song Lyrics in Tamil


BGM

பெண் : உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்…
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ…
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்…
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே…
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே…

BGM

பெண் : தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டி…
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற…
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்…
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினையிலரே…
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினையிலரே…

BGM

பெண் : பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்…
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்…
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்…
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே…
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே…

BGM

பெண் : உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்…
எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்…
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்…
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே…
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே…

BGM

பெண் : மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி…
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்…
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்…
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே…
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே…

BGM

பெண் : பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சை…
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகி…
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி…
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே…
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே…

BGM

பெண் : கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்…
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள…
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல…
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே…
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே…

BGM

பெண் : ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்…
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து…
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை…
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே…
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே…

BGM

பெண் : விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேத…
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்…
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்…
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே…
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே…

BGM

பெண் : வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்…
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்…
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்…
கூர்வெண்மழுப் படையான் நல்ல கழல்சேர்வது குணமே…
கூர்வெண்மழுப் படையான் நல்ல கழல்சேர்வது குணமே…

BGM

பெண் : வெம்புந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல்…
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனை…
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான…
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே…
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே…
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே…

BGM


Notes : Unnamulai Umayaludan Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Thirugnanasambandar. உண்ணாமுலை பாடல் வரிகள்.


சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஹரிணி இவடுரிஆர்மோனியன்சிவன் பாடல்கள்

Shiva Panchakshara Stotram Song Lyrics in Tamil


BGM

பெண் : நாகேந்த்ர ஹாராய த்ரிலோச்சனாய…
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய…
நித்யாய சுத்தாய திகம்பராய…
தஸ்மை ந காராய நம ஷிவாய…

BGM

பெண் : நாகேந்த்ர ஹாராய த்ரிலோச்சனாய…
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய…
நித்யாய சுத்தாய திகம்பராய…
தஸ்மை ந காராய நம ஷிவாய…

BGM

பெண் : மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய…
நந்தீஸ்வர ப்ரமத நாத மகேஸ்வராய…
மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய…
தஸ்மை ம காராய நம ஷிவாய…

BGM

பெண் : மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய…
நந்தீஸ்வர ப்ரமத நாத மகேஸ்வராய…
மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய…
தஸ்மை ம காராய நம ஷிவாய…

பெண் : ஓம் நமசிவாய… நமசிவாய… நமசிவாய…

BGM

பெண் : சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருந்த…
ஸூர்யாய தக்ஷாத்வர நாஷகாய…
ஸ்ரீநீலகந்த்தாய வ்ருஷத்வஜாய…
தஸ்மை ஷி காராய நம ஷிவாய…

பெண் : சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருந்த…
ஸூர்யாய தக்ஷாத்வர நாஷகாய…
ஸ்ரீநீலகந்த்தாய வ்ருஷத்வஜாய…
தஸ்மை ஷி காராய நம ஷிவாய…

BGM

பெண் : ஓம் நமசிவாய… நமசிவாய… நமசிவாய…

பெண் : வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய…
முனீந்த்ர தேவார்ச்சித ஷேகராய…
சந்த்ரார்க்க வைஷ்வநர லோச்சனாய…
தஸ்மை வ காராய நம ஷிவாய…

BGM

பெண் : வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய…
முனீந்த்ர தேவார்ச்சித ஷேகராய…
சந்த்ரார்க்க வைஷ்வநர லோச்சனாய…
தஸ்மை வ காராய நம ஷிவாய…

BGM

பெண் : யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய…
பிநாக ஹஸ்தாய சனாதனாய…
திவ்யாய தேவாய திகம்பராய…
தஸ்மை ய காராய நமஷிவாய…

BGM

பெண் : யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய…
பிநாக ஹஸ்தாய சனாதனாய…
திவ்யாய தேவாய திகம்பராய…
தஸ்மை ய காராய நமஷிவாய…

பெண் : ஓம் நமசிவாய… நமசிவாய… நமசிவாய…


Notes : Shiva Panchakshara Stotram Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் பாடல் வரிகள்.


ஆதி சிவன் வந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownபி. உன்னிகிருஷ்ணன்கரண்சிவன் பாடல்கள்

Aadhi Sivan Vanthan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…

குழு : ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…

BGM

ஆண் : பிறை நிலவோடு கைலயங்கிரி ஆடுகின்ற ஈசன்…
உறை மிகுந்த பூமி காக்க இறங்கி வந்த தேவன்…
பிறை நிலவோடு கைலயங்கிரி ஆடுகின்ற ஈசன்…
உறை மிகுந்த பூமி காக்க இறங்கி வந்த தேவன்…

ஆண் : உண்ணாமலை தாயாரும்…
உண்ணாமலை தாயாரும் உடனிருக்க நின்றான்…
என்னாத பேர்களையும் வாழ வைக்க வந்தான்

குழு : ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…

BGM

ஆண் : மனதினில் ஒரு கனம் நினைத்திட ஓடி வரும் தெய்வம்…
தினம் தினம் திருவிளையாடல் காட்டுகின்ற லிங்கம்…
மனதினில் ஒரு கனம் நினைத்திட ஓடி வரும் தெய்வம்…
தினம் தினம் திருவிளையாடல் காட்டுகின்ற லிங்கம்…

ஆண் : அருணாச்சல மலை எங்கும்…
அருணாச்சல மலை எங்கும் ஆடுகின்ற அரசன்…
தினந்தோறும் திருநாளாய் மாற்றுகின்ற அருளன்…

ஆண் : ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஞான ஜோதியாக…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…

குழு : ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…


Notes : Aadhi Sivan Vanthan Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஆதி சிவன் வந்தான் பாடல் வரிகள்.


அனலான தேகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ்.பி. பாலசுப்ரமணியம்Unknownசிவன் பாடல்கள்

Analana Thegam Kondu Song Lyrics in Tamil


குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமக…
ஓம் அருணாச்சலேஸ்வராய நமக…

BGM

குழு : ஓம் ஓம்…

ஆண் : அனலான தேகம் கொண்டு அருணாச்சலம் இரைந்து…
மலையாக லிங்கமாக ஆளும் ஈஸ்வரா…
குழு : ஓம்ஓம்ஓம் ஓம்…

ஆண் : அனலான தேகம் கொண்டு அருணாச்சலம் இரைந்து…
மலையாக லிங்கமாக ஆளும் ஈஸ்வரா…

ஆண் : ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…
ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…

ஆண் : சன்னதிக்குள் உன்னை காண மெய்சிலிர்க்குதே…
சன்னதிக்குள் உன்னை காண மெய்சிலிர்க்குதே…

ஆண் : அருணாச்சலேஸா அருணாச்சலேஸா…
ஓம் நமசிவாய அருணாச்சலேஸா…

குழு : அருணாச்சலேஸா அருணாச்சலேஸா…
ஓம் நமசிவாய அருணாச்சலேஸா…

ஆண் : அனலான தேகம் கொண்டு அருணாச்சலம் இரைந்து…
மலையாக லிங்கமாக ஆளும் ஈஸ்வரா…

BGM

ஆண் : அதுதான் இதுதான் எதை சொன்னாலும்…
எல்லாமே உன் கோலம் அருணாச்சலா…

BGM

ஆண் : அதுதான் இதுதான் எதை சொன்னாலும்…
எல்லாமே உன் கோலம் அருணாச்சலா…

ஆண் : ஆவுடை மேலே ஜோதியில் லிங்கம்…
அற்புதமாக தெரிகின்றதே…

ஆண் : விழி காண உண்மைகள் புரிகின்றதே…
விழி காண உண்மைகள் புரிகின்றதே…

ஆண் : உன்னை எண்ணும் போதே எம்மை மறந்தோமே…
உன்னை எண்ணும் போதே எம்மை மறந்தோமே…

குழு : அருணாச்சலேஸா அருணாச்சலேஸா…
ஓம் நமசிவாய அருணாச்சலேஸா…
அருணாச்சலேஸா அருணாச்சலேஸா…
ஓம் நமசிவாய அருணாச்சலேஸா…

ஆண் : அனலான தேகம் கொண்டு அருணாச்சலம் இரைந்து…
மலையாக லிங்கமாக ஆளும் ஈஸ்வரா…

BGM

ஆண் : என்னுள் நீதான் உண்மையும் நான்தான்…
எனும் லீலை செய்கின்ற அத்வைதனே…

BGM

ஆண் : என்னுள் நீதான் உண்மையும் நான்தான்…
எனும் லீலை செய்கின்ற அத்வைதனே…

ஆண் : பரமனும் நீயே பக்தனும் நீயே…
பாதியில் தேவியும் நீதானே…

ஆண் : சிவலீலை செய்கின்ற கைலாசனே…
சிவலீலை செய்கின்ற கைலாசனே…

ஆண் : அண்ணாமலையானே அர்த்தநாரி நாதா…
அண்ணாமலையானே அர்த்தநாரி நாதா…

குழு : அருணாச்சலேஸா அருணாச்சலேஸா…
ஓம் நமசிவாய அருணாச்சலேஸா…
அருணாச்சலேஸா அருணாச்சலேஸா…
ஓம் நமசிவாய அருணாச்சலேஸா…

ஆண் : அனலான தேகம் கொண்டு அருணாச்சலம் இரைந்து…
மலையாக லிங்கமாக ஆளும் ஈஸ்வரா…
அனலான தேகம் கொண்டு அருணாச்சலம் இரைந்து…
மலையாக லிங்கமாக ஆளும் ஈஸ்வரா…

ஆண் : ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…
ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…

ஆண் : சன்னதிக்குள் உன்னை காண மெய்சிலிர்க்குதேன்…
சன்னதிக்குள் உன்னை காண மெய்சிலிர்க்குதேன்…

ஆண் : அருணாச்சலேஸா அருணாச்சலேஸா…
ஓம் நமசிவாய அருணாச்சலேஸா…

குழு : அருணாச்சலேஸா அருணாச்சலேஸா…
ஓம் நமசிவாய அருணாச்சலேஸா…
அருணாச்சலேஸா அருணாச்சலேஸா…
ஓம் நமசிவாய அருணாச்சலேஸா…


Notes : Analana Thegam Kondu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. அனலான தேகம் பாடல் வரிகள்.


உன்னை நினைத்தாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownபி. உன்னிகிருஷ்ணன்Unknownசிவன் பாடல்கள்

Unnai Ninaithale Mukthi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சிவபுராணமே போற்றிடும் ஹரனே…
சிந்தையின் ஒளியே அண்ணாமலையே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…
பொன்னாற்மேனியனே… பொன்னாற்மேனியனே…

BGM

ஆண் : ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை என்ன…
தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள. …

குழு : ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…
ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…

ஆண் : ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை என்ன…
தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள…
தாழ்வும்நிலைவாராமல் காப்பவன் நீதானே…
வாழும் வழி சொல்பவனே வல்லல் பெருமானே…

ஆண் : அண்ணாமலையானே அன்பில் பொருள் நீயே…
அருணாச்சல சிவனே ஆற்றல் வடிவோனே…
சக்தியின் கலையாய் பக்தியின் நிலையாய்…
தோன்றும் சுடரோனே உண்ணாமுலையின் துணையோனே…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
ஆண் : அன்பே சிவம்…
குழு : தினம் தினம் தினம் தினம்…
ஆண் : அதுதான் சிவதியானம்…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
ஆண் : அன்பே சிவம்…
குழு : தினம் தினம் தினம் தினம்…
ஆண் : அதுதான் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…
பொன்னாற்மேனியனே… பொன்னாற்மேனியனே…

BGM

ஆண் : தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய் அருள் பெருகும்…
திருவாசகத்தை பேச பேச உள்ளம் உருகிவிடும்…

குழு : ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…
ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே..

ஆண் : தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய் அருள் பெருகும்…
திருவாசகத்தை பேச பேச உள்ளம் உருகிவிடும்…

ஆண் : ஶ்ரீதிநிலை தருகின்ற சிவனே அருளேசன்…
ஜீவ முக்தி அருள்கின்ற தவனே சோனேசன்…

ஆண் : உன்னைச் சுற்றாமல் உயிரில் உயிரில்லை…
உன்மண்ணைப் பனியாமல் உய்யும் வழியில்லை…
ஒரு பித்தனின் பிறையினை சூடிய பேரருள் அத்தனும் நீதானே…
அண்ணாமலையின் இசை நீயே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சிவபுராணமே போற்றிடும் ஹரனே…
சிந்தையின் ஒளியே அண்ணாமலையே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
அன்பே சிவம்…
தினம் தினம் தினம் தினம்…
செய்வோம் சிவதியானம்…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
அன்பே சிவம்…
தினம் தினம் தினம் தினம்…
செய்வோம் சிவதியானம்…
செய்வோம் சிவதியானம்…
செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவமே… சிவமே… சிவமே…


Notes : Unnai Ninaithale Mukthi Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. உன்னை நினைத்தாலே பாடல் வரிகள்.


அணல் முக நாதனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ்.பி. பாலசுப்ரமணியம்Unknownசிவன் பாடல்கள்

Anal Muga Nadhane Song Lyrics in Tamil


BGM

குழு : ஓம் நமசிவாய ஓம் நமசிவாய…
ஆண் : உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய…
குழு : ஓம் நமசிவாய ஓம் நமசிவாய…
ஆண் : உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய…

ஆண் : அணல் முக நாதனேதினம் உன்னை போற்றிடும்…
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய…
ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்…
அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய…

ஆண் : சிவாய நமசிவாய எனும் நாமம்…
அது விடாத விணை தொடாத படி காக்கும்…
சிவாய நமசிவாய எனும் நாமம்…
அது விடாத விணை தொடாத படி காக்கும்…

குழு : ஓம் நமசிவாய ஓம் நமசிவாய…
ஆண் : உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய…
குழு : ஓம் நமசிவாய ஓம் நமசிவாய…
ஆண் : உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய…

ஆண் : அணல் முக நாதனே தினம் உன்னை போற்றிடும்…
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய…

BGM

ஆண் : ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய…
அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய…
ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய…
அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய…

ஆண் : அருணகிரீசனே சிவமலை வாசனே…
அமுதென ஆகுமே உன் திரு நாமமே…
அண்டம் ஆளும் உந்தன் நாமம் சொல்லவே…
அஷ்ட சித்தி யோகம் வந்து சேருமே…

ஆண் : ஓம் நமஹ சிவனே நமஹ…
ஓம் நமஹ ஹர ஓம் நமஹ…

குழு : ஓம் நமசிவாய ஓம் நமசிவாய…
ஆண் : உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய…
குழு : ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஆண் : உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய…

ஆண் : அணல் முக நாதனே தினம் உன்னை போற்றிடும்…
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய…
ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்…
அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய…

BGM

ஆண் : எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய…
என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய…
எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய…
என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய…

ஆண் : மந்திர கீதமாய் வந்தொலி செய்யுமே…
மாமலை உன்னையும் உருகிட செய்யுமே…
பஞ்ச பூதம் எந்த நாளும் பேசுமே…
உந்தன் நாமம் புனிதம் அள்ளி வீசுமே…

ஆண் : ஓம் நமஹ சிவனே நமஹ…
ஓம் நமஹ ஹர ஓம் நமஹ…

குழு : ஓம் நமசிவாய ஓம் நமசிவாய…
ஆண் : உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய…
குழு : ஓம் நமசிவாய ஓம் நமசிவாய…
ஆண் : உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய…

ஆண் : அணல் முக நாதனே தினம் உன்னை போற்றிடும்…
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய…
ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்…
அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய…

ஆண் : சிவாய நமசிவாய எனும் நாமம்…
அது விடாத விணை தொடாத படி காக்கும்…
சிவாய நமசிவாய எனும் நாமம்…
அது விடாத விணை தொடாத படி காக்கும்…

குழு : ஓம் நமசிவாய ஓம் நமசிவாய…
ஆண் : உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய…
குழு : ஓம் நமசிவாய ஓம் நமசிவாய…
ஆண் : உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய…

குழு : ஓம் நமசிவாய ஓம் நமசிவாய…
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய…
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய…

ஆண் : ஓம் நமசிவாய…


Notes : Anal Muga Nadhane Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. அணல் முக நாதனே பாடல் வரிகள்.


ஹர ஹர சிவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ்.பி. பாலசுப்ரமணியம்Unknownசிவன் பாடல்கள்

Hara Hara Sivanae Song Lyrics in Tamil


BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : ஹர ஹர சிவனே அருணாசலனே…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : சிவ சிவ ஹரனே சோனாச்சலனே…
ஹர ஹர சிவனே அருணாசலனே…
அண்ணாமலையே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : அணலே நமச்சிவாயம்…
அலலே நமச்சிவாயம்…
கனலே நமச்சிவாயம்…
காற்றே நமச்சிவாயம்…

ஆண் : புலியின் தோலை இடையில் அணிந்த…
புனிதக்கடலே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : கலியின் தீமை யாவும் நீக்கும்…
கருணை கடலேப் போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : புனலே நமச்சிவாயம்…
பொருளே நமச்சிவாயம்…
புகழே நமச்சிவாயம்…
புனிதம் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : சிவனார் கங்கை கரையில் அமர்ந்த…
சீதழே ஒளியே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : தவமே செய்யும் தபோவனத்தில்…
ஜோதி லிங்கனே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : வேதம் நமச்சிவாயம்…
நாதம் நமச்சிவாயம்…
பூதம் நமச்சிவாயம்…
கோதம் நமச்சிவாயம்…

ஆண் : மணிப்பூர் அகமாய் சூட்சுமம் காட்டும்…
அருணாச்சாலனே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே…
செங்கனல வண்ணா போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : அன்பே நமச்சிவாயம்…
அணியே நமச்சிவாயம்…
பண்பே நமச்சிவாயம்…
பரிவே நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : நினைத்த உடனே முக்தியை தந்திடும்…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : நிம்மதி வாழ்வில் நித்தமும் தந்திட…
சன்னிதி கொண்டாய் போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : அருளே நமச்சிவாயம்…
அழகே நமச்சிவாயம்…
இருளே நமச்சிவாயம்…
இனிமை நமச்சிவாயம்…

ஆண் : சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும்…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : பக்தர் நெஞ்சினை சிவமயாமாக்கும்…
சிவபெருமானே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : குருவே நமச்சிவாயம்…
உயிரே நமச்சிவாயம்…
அருவே நமச்சிவாயம்…
அகிலம் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : அன்னை உமைக்கு இடமாய் உடலில்…
ஆலயம் தந்தாய் போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : சொன்ன வண்ணமே செய்யும் நாதனே…
சோனாசலனே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : ஆதியும் நமச்சிவாயம்…
அந்தமும் நமச்சிவாயம்…
ஜோதியும் நமச்சிவாயம்…
சுந்தரம் நமச்சிவாயம்…

ஆண் : சூரியன் சந்திரன் அஷ்டவ சுட்கன்…
ஒதி நாடும் நாதா போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : சுந்தரி உண்ணாமலையுடன் திகழும்…
அண்ணாமலையே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : சம்பவம் நமச்சிவாயம்…
சத்குரு நமச்சிவாயம்…
அம்பிகை நமச்சிவாயம்…
ஆகமம் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : எட்டா நிலையில் நெட்டாய் எழுந்த…
வேதலிங்கமே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : பற்றாய் இருந்து பற்றும் எவருக்கும்…
பாதை காட்டுவாய் போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : கதிரும் நமச்சிவாயம்…
சுடரும் நமச்சிவாயம்…
புதிரும் நமச்சிவாயம்…
புவனம் நமச்சிவாயம்…

ஆண் : ஜோதி பிழம்பின் சுடரில் கனிந்த…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட…
அடி அண்ணாமலை போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : குளிரே நமச்சிவாயம்…
முகிலும் நமச்சிவாயம்…
பனியும் நமச்சிவாயம்…
பருவம் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : குமரகுருவான குகனே பனிந்த…
குருலிங்கேசா போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : இமய மலைமீது வாசம் புரியும்…
அமரோர் அரசே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : மண்ணும் நமச்சிவாயம்…
மரமும் நமச்சிவாயம்…
விண்ணும் நமச்சிவாயம்…
விளைவும் நமச்சிவாயம்…

ஆண் : மணிமலையாகிய மந்திர மலையில்…
சுந்தரமானாய் போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : அணியா பரணம் பலவகை சூடும்…
அருணாச்சலனே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : மலையே நமச்சிவாயம்…
மலரே நமச்சிவாயம்…
சிலையே நமச்சிவாயம்…
சிகரம் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : குமரகுருவான குகனே பனிந்த…
குருலிங்கேசா போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : இமய மலைமீது வாசம் புரியும்…
அமரோர் அரசே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : மண்ணும் நமச்சிவாயம்…
மரமும் நமச்சிவாயம்…
விண்ணும் நமச்சிவாயம்…
விளைவும் நமச்சிவாயம்…

ஆண் : மணிமலையாகிய மந்திர மலையில்…
சுந்தரமானாய் போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : அணியா பரணம் பலவகை சூடும்…
அருணாச்சலனே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : மலையே நமச்சிவாயம்…
மலரே நமச்சிவாயம்…
சிலையே நமச்சிவாயம்…
சிகரம் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : கம்பதிலையான் குகனை கண்ணில்…
படைத்த சிவனே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும்…
நாகா பரணா போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : திருவே நமச்சிவாயம்…
தெளிவே நமச்சிவாயம்…
கருவே நமச்சிவாயம்…
கனிவே நமச்சிவாயம்…

ஆண் : அருணை நகர சிகரம் விரிந்த…
அக்னிலிங்கனே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : கருணை வேண்டி காலடி பணிந்து…
சரணம் செய்தோம் போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : பெண்ணும் நமச்சிவாயம்…
ஆணும் நமச்சிவாயம்…
என்னம் நமச்சிவாயம்…
ஏகம் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த…
முக்கண் அரசே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே…
சூல நாதனே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : ஒலியே நமச்சிவாயம்…
உணர்வே நமச்சிவாயம்…
வெளியே நமச்சிவாயம்…
விசையே நமச்சிவாயம்…

ஆண் : மோன வடிவாகி மோஹனம் காட்டும்…
மூர்த்திலிங்கனே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : ஞானம் வழங்கி நர்கதி அளீக்கும்…
நந்தி வாகனா போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : நாகம் நமச்சிவாயம்…
ரகசியம் நமச்சிவாயம்…
யோகம் நமச்சிவாயம்…
யாகம் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : அர்த்தநாரியாய் வித்தகம் செய்யும்…
அருணாச்சலனே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : நர்த்தன தாண்டவ நாடகம் ஆடும்…
ராக நாதனே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : அதிர்வும் நமச்சிவாயம்…
அசைவும் நமச்சிவாயம்…
நிலையும் நமச்சிவாயம்…
நிறைவும் நமச்சிவாயம்…

ஆண் : ரமண முனிக்கு ரகசியம் சொன்ன…
ராஜலிங்கனே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : இமையோர் தலைவன் பதவியும் வழங்கும்…
ஈசமகேஷா போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : கோடை நமச்சிவாயம்…
கொண்டலும் நமச்சிவாயம்…
வாடையும் நமச்சிவாயம்…
தென்றலும் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : பரணி தீபமாய தரணியில் ஒளிரும்…
பரமேஷ்வரனே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : ஹரஹர என்றால் வரமழை பொழியும்…
ஆதிலிங்கனே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : சித்தியும் நமச்சிவாயம்…
முக்தியும் நமச்சிவாயம்…
பக்தியும் நமச்சிவாயம்…
சக்தியும் நமச்சிவாயம்…

ஆண் : கார்த்திகை திருநாள் உற்சவம் காணும்…
தீபச்சுடரே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : தீர்த்தம் யாவிலும் நீராடிடுவாய்…
அருணாச்சலனே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : நிலவே நமச்சிவாயம்…
நிஜமே நமச்சிவாயம்…
கலையே நமச்சிவாயம்…
நினைவே நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

ஆண் : சுற்றிட சுற்றிட வெற்றிகள் வழங்கும்…
சோனாலச்சனே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : பொற்ச்சபைதன்னில் அற்புத நடனம்…
புரியும் பரமே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : லிங்கம் நமச்சிவாயம்…
லீலை நமச்சிவாயம்…
கங்கை நமச்சிவாயம்…
கருணை நமச்சிவாயம்…

ஆண் : சோனை நதி தீரம் கோயில் கொண்ட…
அருணாசலனே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : வானவெளிதனை கோபுரம் ஆக்கி…
மலையில் நிறைந்தாய் போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : செல்வம் நமச்சிவாயம்…
சீரும் நமச்சிவாயம்…
வில்வம் நமச்சிவாயம்…
வேஷம் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : ஆதிரை அழகா ஆவுடை மேலே…
அமரும் தலைவா போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : வேதியர் போற்றும் வென்சடை இறைவா…
வேதப்பொருளே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : முதலும் நமச்சிவாயம்…
முடிவும் நமச்சிவாயம்…
இடையும் நமச்சிவாயம்…
விடையும் நமச்சிவாயம்…

ஆண் : நாகமுடியுடன் யோகம் புரியும்…
நாகேஸ்வரனே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : வேத நடுவிலே திருநீர் அணியும்…
அருனேஷ்வரனே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : அம்மையும் நமச்சிவாயம்…
அப்பனும் நமச்சிவாயம்…
நண்மையும் நமச்சிவாயம்…
நாதனும் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : அடிமுடி இல்லா ஆனந்த வடிவே…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : அம்மையப்பனாய் அகிலம் காக்கும்…
அமுதேஷ்வரனே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : அதுவும் நமச்சிவாயம்…
இதுவும் நமச்சிவாயம்…
எதுவும் நமச்சிவாயம்…
எதிலும் நமச்சிவாயம்…

ஆண் : விடையாம் காளை வாகனம் ஏறி…
விண்ணில் வருவாய் போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : வேண்டிய கணமே என்னிய கணமே…
கண்ணில் தெரிவாய் போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : சூலம் நமச்சிவாயம்…
சுகமே நமச்சிவாயம்…
நீலம் நமச்சிவாயம்…
நித்தியம் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

BGM

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : பௌர்னமி நாளீல் பிறைநிலவணியும்…
மகாதேவனே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…

ஆண் : ஒஹவ்சகமாலாய் பிணிகள் தீர்க்கும்…
அருணச்சலமே போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : தீபம் நமச்சிவாயம்…
திருவருள் நமச்சிவாயம்…
ரூபம் நமச்சிவாயம்…
ருத்ரம் நமச்சிவாயம்…

ஆண் : பனிகைலாயம் தீ வடிவாகிய…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாய…

ஆண் : பனிவடிவாகிய தென்னாடுடையாய்…
திருவருளேசா போற்றி…
ஹர ஓம் நமச்சிவாயா…

குழு : எங்கும் நமச்சிவாயம்…
எல்லாம் நமச்சிவாயம்…
எழிலும் நமச்சிவாயம்…
என்றும் நமச்சிவாயம்…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

குழு : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஆண் : நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…


Notes : Hara Hara Sivanae Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஹர ஹர சிவனே பாடல் வரிகள்.


அருணாசலனே ஈசனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ்.பி. பாலசுப்ரமணியம்Unknownசிவன் பாடல்கள்

Arunachalane Esane Song Lyrics in Tamil


BGM

குழு : தணலாய் எழுந்த சுடர் தீபம்…
அருணாசலத்தின் சிவ யோகம்…
ஒளியாய் எழுந்த ஓங்காரம்…
உன் கோலம் என்றும் சிங்காரம்…

BGM

குழு : ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சாமசிவா…
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சதாசிவா…

BGM

ஆண் : அருணாசலனே ஈசனே…
அன்பே சிவமான நாதனே…
அருணாசலனே ஈசனே…
அன்பே சிவமான நாதனே…

ஆண் : குருவாய் அமர்ந்த சிவனே…
குன்றாய் எழுந்த சிவனே…
மலையாய் மலர்ந்த சிவனே…
மண்ணால் அமர்ந்த சிவனே…

ஆண் : அருணை நிறைந்த சிவனே…
அருளை வழங்கு சிவனே…
அருணை நிறைந்த சிவனே…
அருளை வழங்கு சிவனே…

குழு : ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சாமசிவா…
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சதாசிவா…

ஆண் : அருணாசலனே ஈசனே…
அன்பே சிவமான நாதனே…
அருணாசலனே ஈசனே…
அன்பே சிவமான நாதனே…

BGM

ஆண் : ஓம் எனும் நாதம் உன் திரு நாமம்…
ஒன்றாய் இணைந்து வருகிறதே…
குழு : ஓம் ஓம் ஓம் ஓம்…

ஆண் : ஓம் எனும் நாதம் உன் திரு நாமம்…
ஒன்றாய் இணைந்து வருகிறதே…
உன் புகழ் செவிகளில் சேருதே…
உள்ளம் பரவசம் ஆகுதே…
உன் புகழ் செவிகளில் சேருதே…
உள்ளம் பரவசம் ஆகுதே…

ஆண் : நாண் யார் என்றேன் நடமிடும் ஈசனே…
நாகாபரணம் சூடிடும் வேசனே…
எங்கும் நிறைந்த சிவனே…
எதிலும் உறைந்த சிவனே…
எல்லாம் அறிந்த சிவனே…
ஏழைக்கிறங்கும் சிவனே…
உன்னை நிணைந்து உருகும் எனக்கு…
அருள்வாய் அருணாசலனே…

குழு : ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சாமசிவா…
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சதாசிவா…

ஆண் : அருணாசலனே ஈசனே…
அன்பே சிவமான நாதனே…
அருணாசலனே ஈசனே…
அன்பே சிவமான நாதனே…

BGM

ஆண் : கிரிவலம் செய்யும் அடியவர் பாடும்…
பாடலும் பஜனையும் கேட்குதே…
குழு : ஓம் ஓம் ஓம் ஓம்…

ஆண் : கிரிவலம் செய்யும் அடியவர் பாடும்…
பாடலும் பஜனையும் கேட்குதே…
சிவ சிவ என்றும் நாமமே…
சிந்தையில் இனிமை சேர்க்குதே…
சிவ சிவ என்றும் நாமமே…
சிந்தையில் இனிமை சேர்க்குதே…

ஆண் : தீயின் தூணாய் நிறைந்திடும் ஈசனே…
லிங்கோத் பவனே சோனை நிவாசனே…
தணலாய் எழுந்த சிவனே…
புணலாய் குளிர்ந்த சிவனே…
மணலாய் மலர்ந்த சிவனே…
காற்றாய் கலந்த சிவனே…
வாணாய் வளர்ந்து எண்ணில் நிறைந்து…
சுடறும் அருணாசலனே…

குழு : ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சாமசிவா…
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சதாசிவா…

ஆண் : அருணாசலனே ஈசனே…
அன்பே சிவமான நாதனே…
அருணாசலனே ஈசனே…
அன்பே சிவமான நாதனே…

ஆண் : குருவாய் அமர்ந்த சிவனே…
ஒன்றாய் எழுந்த சிவனே…
மலையாய் மலர்ந்த சிவனே…
மண்ணால் அமர்ந்த சிவனே…

ஆண் : அருணை நிறைந்த சிவனே…
அருளை வழங்கு சிவனே…
அருணை நிறைந்த சிவனே…
அருளை வழங்கு சிவனே…

குழு : ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சாமசிவா…
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சதாசிவா…

ஆண் : அருணாசலனே ஈசனே…
அன்பே சிவமான நாதனே…
அருணாசலனே ஈசனே…
அன்பே சிவமான நாதனே…

குழு : ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சாமசிவா…
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சதாசிவா…

குழு : ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சாமசிவா…
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர…
ஓம் ஜெய சங்கர சதாசிவா…

ஆண் : ஓம் நமசிவாய…


Notes : Arunachalane Esane Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. அருணாசலனே ஈசனே பாடல் வரிகள்.