Muslim devotional songs in tamil

உலகம் இறைவனின் சந்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
நூர்மதிதாசன்நாகூர் இ.எம்.ஹனிஃபாகே.எஸ். ஜெய்ச்சாஇஸ்லாமிய பக்தி பாடல்கள்

Ulagam Iraivanin Song Lyrics in Tamil


BGM

ஆண் : உலகம் இறைவனின் சந்தை மடம்…
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்…
உலகம் இறைவனின் சந்தை மடம்…
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்…

ஆண் : இதுவல்ல நமக்கு சொந்த இடம்…
இதுவல்ல நமக்கு சொந்த இடம்…
அங்கே இருக்குது வேறு உரிய இடம்…
உரிய இடம்…

BGM

ஆண் : கருவூரில் இருந்து புறப்படுவான்…
கொஞ்சம் களைப்பாற இங்கே தங்கிடுவான்…
உறவோடு உரிமையும் கொண்டாடுவான்…
அவன் ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்…

BGM

ஆண் : இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை…
யாரும் இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை…
மறுப்பவன் இதனை யாரும் இல்லை…
மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை…

BGM

ஆண் : பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை…
அவன் இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை…
புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை…
இதை புரியாதவன் அறிவு தெளிவதில்லை…

BGM

ஆண் : தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும்…
அந்த தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்…
நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம்…
நீ நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்…

ஆண் : உலகம் இறைவனின் சந்தை மடம்…
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்…
உலகம் இறைவனின் சந்தை மடம்…
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்…

ஆண் : இதுவல்ல நமக்கு சொந்த இடம்…
இதுவல்ல நமக்கு சொந்த இடம்…
அங்கே இருக்குது வேறு உரிய இடம்…
உரிய இடம்…

ஆண் : உலகம் இறைவனின் சந்தை மடம்…
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்…


Notes : Ulagam Iraivanin Song Lyrics in Tamil. This Song from Islamic Devotional Songs. Song Lyrics penned by Noormathidasan. உலகம் இறைவனின் சந்தை பாடல் வரிகள்.