Tag Archives: சுசித்ரா

nenjai-kasaki-song-lyrics-in-tamil

நெஞ்சை கசக்கி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண் & சுசித்ராயுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Nenjai Kasaki Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு…
போற பொண்ணே ரதியே ரதியே…
பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே…
கிளியே கிளியே…

ஆண் : அடி மயிலே மாமயிலே…
மதி மயக்கும் பூங்குயிலே…

ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு…
போற பொண்ணே ரதியே ரதியே… ஓஓ…
பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே…
கிளியே கிளியே…

BGM

பெண் : கம்பங்காட்டில் களத்துமேட்டில்…
வண்டி ஓட்டும் ஆச மாமா…
கூச்சத்த தூக்கி குப்பையில் போடு…

ஆண் : ஏ பார்க்க பார்க்க மனசு ஏங்கும்…
பழகி பார்க்க வயசு கேட்கும்…
இதயத்தில் இடம் இங்கு இல்லையே…
அதை எடுத்தவள் கொடுக்கவும் இல்லையே…

பெண் : காதல் எனக்கு வேண்டாமே…
கவலை மறந்து வா மாமா…
கைய புடிச்சு கன்னம் தேச்சு…
கதைகள் பேச வா வா…

ஆண் : உள்ளம் கொடுப்பது ஒருமுறைதான்…
இனி வாழ்வோ சாவோ அவளுடன்தான்…

பெண் : வாய்ப்புகள் வருவது ஒருமுறைதான்…
நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான்…

ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு…
போற பொண்ணே ரதியே ரதியே…

பெண் : ஹம்ம்… பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே…
கிளியே கிளியே…

BGM

ஆண் : பார்வை பார்த்து மயக்கி போனாள்…
பாவி நெஞ்சை பறித்து போனாள்…
ஆண்களின் ஜென்மம்…
அது என்றுமே துன்பம்…

பெண் : நெருங்கி வந்தால் விலகி போவோம்…
விலகி போனால் நெருங்கி வருவோம்…
பெண்களின் மனதில் என்னவோ…
அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே…

ஆண் : ஆசை வைத்தேன் உன்மேல்தான்…
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன்தான்…
பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால்…
பாறை இடுக்கில் ஒரு பூதான்…

பெண் : கனவுகள் காண்பது உன் உரிமை…
அது கலைந்தால் தெரியும் என் நிலைமை…

ஆண் : இரவும் பகலும் உன் மடியில்…
கண்மூடி கிடப்பேன் உன் அருகில்…

BGM


Notes : Nenjai Kasaki Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. நெஞ்சை கசக்கி பாடல் வரிகள்.


என் ஆசை மைதிலியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சிலம்பரசன் & சுசித்ராயுவன் ஷங்கர் ராஜாமன்மதன்

En Aasi Maithiliye Song Lyrics in Tamil


ஆண் : என் ஆசை மைதிலியே…
என்னை நீ காதலியே…
என் ஆசை மைதிலியே…
என்னை நீ காதலியே…

ஆண் : தன தரனானே தானானே…
தன தரனானே தானானே…
தன தரனானே தானானே…
தன தரனானே தானானே…

பெண் : என் ஆசை மன்மதனே…
என்னோட காதலனே…
என் ஆசை மன்மதனே…
என்னோட காதலனே…

பெண் : தன தரனானே தானானே…
தன தரனானே தானானே…
தன தரனானே தானானே…
தன தரனானே தானானே… ஹே…

BGM

ஆண் : பிளாக் அண்ட் ஒயிட்டு காலம் முதல்…
உன்னை போல ஹீரோயின…
கண்டவுடனே ஏதோ பண்ணும்…
கண்ணு ரெண்டும் ஹரோயினா…

ஆண் : சென்டிமீட்டரு கண்ணடிச்சு…
வானவில்லுக்கே வலை விரிச்ச…
மில்லிமீட்டரு புன்னகையால்…
நெஞ்சுக்குள்ள தாக்கி தீய வச்ச…

ஆண் : தனனானே தானானே தன…
தனனானே தானானே…
தன தனனான தன்னன்னானே…
தன தனனான தன்னன்னானே…

BGM

பெண் : இஷ்டப்படிதான் கிட்ட வந்து…
ஆடை இழுக்கும் துச்சாதனா…
ஆடை இழந்த அப்பறமா…
நீயும் தெரிஞ்ச மன்மதனா…

பெண் : தப்பு தப்பாதான் நெனச்சுக்கிட்டு…
உன்ன நானும்தான் திட்டி புட்டேன்…
இப்ப இப்பதான் புரிஞ்சிகிட்டு…
உன்னையும் வந்து கட்டி கட்டிகிட்டேன்…

பெண் : தன தரனானே தானானே…
தன தரனானே தானானே…
தன தரனானே தானானே…
தன தரனானே தானானே…

ஆண் : என் ஆசை மைதிலியே…
என்னை நீ காதலியே…
என் ஆசை மைதிலியே…
என்னை நீ காதலியே…

ஆண் & பெண் : தன தரனானே தானானே…
தன தரனானே தானானே…
தன தரனானே தானானே…
தன தரனானே தானானே… ஹோய்…

BGM


Notes : En Aasi Maithiliye Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Pa Vijay. என் ஆசை மைதிலியே பாடல் வரிகள்.


ஐபிள் மேல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரஞ்சித் & சுசித்ராகோபி சுந்தர்தோழா

Eiffel Mele Song Lyrics in Tamil


ஆண் : ஐபிள் மேல ஏறி நின்னு…
சிலுத்துக்கின்னு என் மனசு சிரிக்குதே…
காதல் என்ன கூட்டிக்கின்னு…
சைலண்ட்டுகா வானத்துல பறக்குதே…

குழு : பாரிமுனை தெருவுல நடந்த பைய…
பாரிசுல காதல் வந்து மிதக்குறானே…
சென்னைத் தமிழ்கவிஞனா கிடந்த பைய…
பிரெஞ்சு இப்ப பிரிச்சுத்தான் மேயுறானே…

BGM

பெண் : சாக்குலேட்டின் தித்திப்புல பாதி…
லிக்கர் காபி கசப்புல பாதி…
கண்ணுக்குள்ள கனவுக பாதி…
திருடிட வந்தான் காதல்வாதி…

ஆண் : ஏய்… வெண்ணப் பூவே… வெண்ணப் பூவே…
இந்த ரொட்டியில ஒட்டிக்கின நீயே…
ஒல்லித்தீவே ஒல்லித்தீவே…
என்னத் தண்ணியின்னு பண்ணிக்கின்ன நீயே…

பெண் : ஏய்… உன் காதல் அலைங்க…
என் மேல அடிக்க…
நெஞ்செல்லாம் தீயே…

ஆண் : ஒத்த ஒத்த முத்தத்துக்கே…
பித்தம் தலைக்கேறுதடி…
பத்து தலை வேணுமுன்னு…
சத்தியமா தோணுதடி…

ஆண் : சுழட்டிவிட்ட பம்பரமா…
என் மனசு சுத்துதடி…
கழட்டிவிட்ட குதிரையா…
திக்குகெட்டு அலையுதடி…

பெண் : கண்ணுக்குள்ள கனவுக பாதி…
திருடிட வந்தான் காதல்வாதி…

BGM

ஆண் : ஐபிள் மேல ஏறி நின்னு…
சிலுத்துக்கின்னு என் மனசு சிரிக்குதே…

BGM

பெண் : பூட்டிவச்ச மனச…
எப்படி நீ துறந்த…

ஆண் : மாடி ஏறி மண்டைக்குள்ள…
குதிச்சேன்…

பெண் : முத்த முத்தச் செடியில்…
எப்படி பூ பறிச்ச…

ஆண் : உதிர்ந்தததானே…
நானும் புடிச்சேன்…

பெண் : என் மாமன்கிட்ட எக்கச்சக்க வித்தை இருக்கு…
நேரம் வர ஒன்னு ஒன்னா நீ இறக்கு…

ஆண் : ஏ பொண்ணுக்குள்ள எக்கச்சக்க போதை இருக்கு…
நாளும் இனி நீ தானே சரக்கு…

பெண் : என்னோட மிடுக்கு…
எம்மேனி மினுக்கு…
எல்லாமே உனக்கு…

ஆண் : ஒத்த ஒத்த முத்தத்துக்கே…
பித்தம் தலைக்கேறுதடி…
பத்து தலை வேணுமுன்னு…
சத்தியமா தோணுதடி…

ஆண் : சுழட்டிவிட்ட பம்பரமா…
என் மனசு சுத்துதடி…
கழட்டிவிட்ட குதிரையா…
திக்குகெட்டு அலையுதடி…

பெண் : ஐபிள் மேல ஏறி நின்னு…
சிலுத்துக்கிட்டு என் மனசு சிரிக்குதே…
காதல் ரெக்கை மாட்டிக்கிட்டு…
பாய்ஞ்சு அந்த வானத்துல பறக்குதே…

குழு : ஓவியத்தில் மோனாலிசா சிரிப்பிருக்கு…
லவ்வர் கண்ணில் இவளோட சிரிப்பிருக்கு…
பாரிஸ் இது காதலுக்கு தலைநகரு…
பாத்து சொல்லு ஜோடி நமக்காரு நிகரு…

குழு : ஓவியத்தில் மோனாலிசா சிரிப்பிருக்கு…
லவ்வர் கண்ணில் இவளோட சிரிப்பிருக்கு…
பாரிஸ் இது காதலுக்கு தலைநகரு…
பாத்து சொல்லு ஜோடி நமக்காரு நிகரு…


Notes : Eiffel Mele Song Lyrics in Tamil. This Song from Thozha (2016). Song Lyrics penned by Madhan Karky. ஐபிள் மேல பாடல் வரிகள்.


சின்ன தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகிரிஷ் & சுசித்ராவிஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Chinna Thamarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

ஆண் : இதை உண்மை என்பதா…
இல்லை பொய்தான் என்பதா…
என் தேகம் முழுவதும்…
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே…

பெண் : என் ரோம கால்களோ…
ஒரு பயணம் போகுதே…
உன் ஈர புன்னகை சுடுதே…

பெண் : என் காட்டுப் பாதையில்…
நீ ஒற்றை பூவடா…
உன் வாசம் தாக்கியே…
மலர்ந்தேன் உயிரே…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

BGM

ஆண் : உன் பெயர் கேட்டாலே…
அடி பாறையில் பூ பூக்கும்…
உன் காலடி தீண்டிய…
வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்…

பெண் : உன் தெரு பார்த்தாலே…
என் கண்கள் அலை மோதும்…
உன் வாசல் தேடி…
போக சொல்லி கெஞ்சுது என் பாதம்

ஆண் : என் வாழ்க்கை வரலாற்றில்…
எல்லாமே உன் பக்கங்கள்…

பெண் : உன்னாலேஎன் வீட்டின்…
சுவர் எல்லாம் ஜன்னல்கள்…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

BGM

ஆண் : உன் குரல் கேட்டாலே…
அந்த குயில்களுக்கும் கூசும்…
நீ மூச்சினில் சுவாசித்த…
காற்றுகள் மட்டும் மோட்சத்திலே சேரும்…

பெண் : அனுமதி கேட்காமல்…
உன் கண்கள் என்னை மேயும்…
நான் இத்தனை நாளாய்…
எழுப்பிய கோபுரம் நொடியில் குடைசாயும்…

ஆண் : உன் கைகள் கோர்க்காமல்…
பயணங்கள் கிடையாது…

பெண் : உன்னோடு வந்தாலே…
சாலைகள் முடியாது…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

ஆண் : இதை உண்மை என்பதா…
இல்லை பொய்தான் என்பதா…
என் தேகம் முழுவதும்…
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே…

பெண் : என் ரோம கால்களோ…
ஒரு பயணம் போகுதே…
உன் ஈர புன்னகை சுடுதே…

பெண் : என் காட்டுப் பாதையில்…
நீ ஒற்றை பூவடா…
உன் வாசம் தாக்கியே…
மலர்ந்தேன் உயிரே…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

BGM


Notes : Chinna Thamarai Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Viveka. சின்ன தாமரை பாடல் வரிகள்.


உயிரின் உயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிருஷ்ணகுமார் குன்னத் & சுசித்ராஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Uyirin Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…

BGM

ஆண் : நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்…
காலை பனியாக என்னை வாரிகொண்டாய்…

ஆண் : நேரம் கூட எதிரி ஆகிவிட…
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட…
அணைத்து கொண்டாயே…
பின்பு ஏனோ சென்றாய்…

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…
முழுதும் வேர்கின்றேன்… முழுதும் வேர்கின்றேன்…

BGM

ஆண் : சுவாசமின்றி தவிக்கிறேனே…
உனது மூச்சில் பிழைக்கிறேனே…
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே…

ஆண் : நினைவு எங்கோ நீந்தி செல்ல…
கனவு வந்து கண்ணை கிள்ள…
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே…
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்…
உன்னை அன்றி யாரை தேடும்…
விலகி போகாதே தொலைந்து போவேனே…
நான் நான் நான்…

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…

BGM

ஆண் : இரவின் போர்வை என்னை சூழ்ந்து…
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து…
விடியலை தேடினேன்…
உன்னிடம் வா பெண்ணே…

ஆண் : பாதமெங்கும் சாவின் ரணங்கள்…
நரகமாகும் காதல் கணங்கள்…
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே…
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்…
தவணை முறையில் மரணம் நிகழும்…
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ… நீ நீ நீ…

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…

ஆண் : நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்…
காலை பனியாக என்னை வாரிகொண்டாய்…

ஆண் : நேரம் கூட எதிரி ஆகிவிட…
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட…
அணைத்து கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்…
ஏனோ சென்றாய்… ஏ… ஏ…

BGM


Notes : Uyirin Uyire Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. உயிரின் உயிரே பாடல் வரிகள்.