சுற்றாதே பூமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்கலையரசிஇளையராஜாநிலவே முகம் காட்டு

Suttrathe Bhoomithaye Song Lyrics in Tamil


பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…

BGM

பெண் : வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…

பெண் : கோடி விண்மீன்களில் எந்தன் விண்மீன் எங்கே…
என்னை தாலாட்டுமே அந்த ராகம் எங்கே…
எந்தன் சொர்கத்தை சொல்கின்ற சொல் ஏது…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…

BGM

பெண் : அதி காலையில் துயில் வேளையில்…
கனவாக தீண்டிவிட்டு நீ போனாய்…
துயில் நீங்கினேன் உன்னை தேடினேன்…
விழி தாண்டி தூரம் என்று நீ ஆனாய்…

BGM

பெண் : உள்ளுக்குள் உன்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணில் என்னை காண வேண்டும்…
வானத்தில் வெண்ணிலாவின் வீதி…
சொல்லாதோ உன்னை காணும் தேதி…

பெண் : உந்தன் தோளில் பூவாய் விழ வேண்டும்…
எந்தன் சோகம் சொல்லி அழ வேண்டும்…
அந்த நாள் காண என் நெஞ்சம் தவிக்கும்… ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…
வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…

BGM

பெண் : ஒரு நாழிகை உன்னை பார்த்த பின்…
மீண்டும் பார்வை போகும் இனி போகட்டும்…
உந்தன் தேன் குரல் கொஞ்சம் கேட்ட பின்…
எந்தன் ஜீவன் ஓயும் இனி ஓயட்டும்…

பெண் : என்றேனும் உன்னை காண கூடும்…
என்று எண்ணி எந்தன் ஜீவன் வாழும்…
சாகாத காதல் வரம் வேண்டும்…
ஓயாமல் உன்னை தொழ வேண்டும்…

பெண் : காற்றை தேடும் புல்லாங்குழல் போலே…
ஏங்கி பாடும் ஒற்றை குயில் ஆனேன்…
உன்னை காணாமல் என் கண்கள் தூங்காது…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…
வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…


Notes : Suttrathe Bhoomithaye Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. சுற்றாதே பூமி பாடல் வரிகள்.