en-kadhala-song-lyrics

என் காதலா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஸ்ரீநிஷா ஜெயசீலன்என்.ஆர்.ரகுணந்தன்நாட்படு தேறல்

En Kadhala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் (வசனம்) : விண்மீனுக்கு தூண்டில் போடும் கிளைகள்…
சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்…
உயிர் உழுகும் மலர்கள்…
மனிதன் தரா ஞானம்… மரம் தரும் எனக்கு…

—BGM—

ஆண் (வசனம்) : உண்ண கனி… ஒதுங்க நிழல்…
உடலுக்கு மருந்து… உணர்வுக்கு விருந்து…
அடைய குடில்… அடைக்கு கதவு…
அழகு வேலி… ஆடும் தூண்…
தடவ தைலம்… தாளிக்க எண்ணெய்…

—BGM—

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

பெண் : வயதால் நம் வாழ்வு முறியுமா…
வாய் முத்தம் வயது அறியுமா…
நிலா வெண்ணிலா…
வயதில் மூத்ததில்லையா…
இருந்தும் நிலவு சொல்லி…
இளைய அல்லி மலர்வதில்லையா…

பெண் : என்வாழ்வில் தந்தை இல்லையே…
தந்தைபோல் கணவன் வேண்டுமே… ஆஆ… ஆஆ…

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

—BGM—

பெண் : ஆணும் பெண்ணும் சேர்வது…
ஆசைப் போக்கில் நேர்வது…
காதல் நீதி என்பது…
காலம் தோறும் மாறுது…

பெண் : ஓஓ… வெட்டுக்கிளியின் ரத்தமோ…
வெள்ளையாக உள்ளது…
விதிகள் எழுதும் ஏட்டிலே…
விதிவிலக்கும் உள்ளது…

பெண் : ஆழி ரொம்ப மூத்தது…
ஆறு ரொம்ப இளையது…
ஆறு சென்று சேரும்போது…
யாரு கேள்வி கேட்பது… ஆஆ… ஆஆ…

—BGM—

பெண் : காதல் சிந்தும் மழையிலே…
காலம் தேசம் அழியுதே…
எங்கே சிந்தை அழியுதோ…
காதல் அங்கே மலருதே…

பெண் : ம்ம்… ம்ம்… அறிவழிந்து போனபின்…
வயது வந்து தோன்றுமா…
பொருள் அழிந்து போனபின்…
நிழல் கிடந்து வாழுமா…

பெண் : அறமிருக்கும் வாழ்விலே…
முரணிருக்கும் என்பதால்…
முரணிருக்கும் வாழ்விலும்…
அறமிருக்கும் இல்லையா… ஆஆ… ஆஆ…

—BGM—

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

—BGM—


Notes : En Kadhala Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. என் காதலா பாடல் வரிகள்.