பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா.விஜய் | எஸ். ஜானகி & பி. உன்னிகிருஷ்ணன் | பரணி | பார்வை ஒன்றே போதுமே |
Ye Asainthadum Song Lyrics in Tamil
ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும்
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா… காதலா…
பெண் : கொஞ்சம் இனிக்கும்
கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும்
கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா….
ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும்
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா… காதலா…
—BGM—
ஆண் : ஏ… தீப்போன்ற
உன் மூச்சோடு…
ம்ம்ம்… என் தோள் சேரு
உச்சவம் போது..
ஜஜஜம்… ஜஜஜம்…
உச்சியை கோது
பெண் : ஏ… வாயோடு
உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு
மெல்ல கூர்பார்த்து
கைகளில் ஏந்து
ஜஜஜம்… ஜஜஜம்…
பொய்கையில் நீந்து….
ஆண் : நான் வேர் வேராய்
அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை
உன்னை பார்த்தேனே…
பெண் : சிற்றின்பம் என்றிதை
யார் இங்கு சொன்னது
பேரின்ப தாமரை தாழ் திறக்க
ஐந்தடி உடல் நிலை
மெய் மறக்க
ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும்
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா… காதலா…
—BGM—
பெண் : வீண் ஆராய்ச்சி
இனி பண்ணாதே…
என் பூந்தேகம்
அது தாங்காதே…
கொப்புழில் தாகம்
ஜஜஜம்… ஜஜஜம்…
கொங்கைகள் வேகம்….
ஆண் : உன் கண் கொண்டு
என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால்
என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு
ஜஜஜம்… ஜஜஜம்…
வித்தைகள் காட்டு
பெண் : நீ கீழ் மேலாய்
என்னை கிள்ளாதே…
நீ மேல் கீழாய்
என்னை அள்ளாதே…
ஆண் : பெண்ணே நீ பெண்ணல்ல
அட்சைய பாத்திரம்
பெண்ணென்ற கோப்பைக்குள்
நான் விழுந்தேன்
ஆரோடு தேன் கொண்டு
வாய் கலந்தேன்
ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும்
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா… காதலா…
பெண் : கொஞ்சம் இனிக்கும்
கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும்
கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா…
ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும்
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா… காதலா… ஆ….
Notes : Ye Asainthadum Song Lyrics in Tamil. This Song from Seemaraja (2001). Song Lyrics penned by Pa. Vijay. ஏ அசைந்தாடும் காற்றுக்கும் பாடல் வரிகள்.