கோடி அருவி கொட்டுதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார் & நித்யாஸ்ரீசீன் ரோல்டன்மெஹந்தி சர்க்கஸ்

Kodi Aruvi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல…
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால….

ஆண் : கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல…
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால….

ஆண் : மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே…
மனசோடு தொளை போட்டு
என்னையே கண்டவளே….

பெண் : கண்ண மூடி கண்ட கனவே
பல சென்மம் தாண்டி வந்த உறவே….
கண்ண மூடி கண்ட கனவே
பல சென்மம் தாண்டி வந்த உறவே….

ஆண் : கோடி அருவி கொட்டுதே
பெண் : அட என் மேல
ஆண் : அது தேடி உசுர முட்டுதே
பெண் : நெதம் உன்னால

BGM

ஆண் : நள்ளிரவும் ஏங்க
நம்ம இசைஞானி
மெட்டமைச்ச பாட்டா
பொங்கி வழிஞ்ச…

பெண் : பொட்டலுல வீசும்
உச்சி மலை காத்தா
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச….

ஆண் : சாராயம் இல்லாம
சாஞ்சேன்டி கண்ணால
கூழாங்கல் சேராதோ செங்கல்ல…

பெண் : அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்…
உன்ன சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்….

ஆண் : கண்ண மூடி கண்ட கனவே
பல சென்மம் தாண்டி வந்த உறவே…
கண்ண மூடி கண்ட கனவே
பல சென்மம் தாண்டி வந்த உறவே…

—-BGM

பெண் : உன்ன நினைச்சாலே
செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி
நெஞ்ச தொடுதே….

ஆண் : என்ன இது கூத்து
சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல
வெக்கம் வருதே….

பெண் : ராசாவே உன்னால
ஆகாசம் மண் மேல
உன் ஜோடி நான்தானே
பொய்யில்ல…

ஆண் : கோடி அருவி கொட்டுதே
பெண் : அட என் மேல
ஆண் : அது தேடி உசுர முட்டுதே
பெண் : நெதம் உன்னால

ஆண் : கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னாலே

ஆண் : மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே…
மனசோடு தொளை போட்டு
என்னையே கண்டவளே….

பெண் : கண்ண மூடி கண்ட கனவே…..
பல சென்மம் தாண்டி வந்த உறவே…..

ஆண் மற்றும் பெண் : தன்னா…னானா…. தன்னா…னானா
தன்னா…னானா…. தன்னா…னானா…


Notes : Kodi Aruvi Song Lyrics in Tamil. This Song from Mehandi Circus (2019). Song Lyrics penned by Yugabharathi. கோடி அருவி கொட்டுதே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top